Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BRT கூண்டோடு மாற்றம்!, உண்ணாவிரதம் இருக்க ஆசிரியர்கள் முடிவு

      தமிழகம் முழுவதும் 4,587ஆசிரியர் பயிற்றுனர்கள் கூண்டோடு மாற்றப்பட்டதற்கு கண்ட னம் தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசி ரியர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டத் தில் முடிவு செய்யப்பட் டது. 


அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு: குடிநீருக்காக அவசரகால திட்டம் தயாரிக்க வேண்டும்

         குடிதண்ணீர் சப்ளைக்காக, அவசரகால திட்டம் ஒன்றை தயாரிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?

         மே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது.இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது.

முதல் பருவத் தேர்வு கேள்வித்தாள் தயாரிக்க வல்லுநர் குழு

          அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்ப தேர்வுகள், ஆண்டு தேர்வுகள் ஆகியவற்றுக்கான கேள்வித்தாள்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தயாரிக்கின்றனர். தற்போது சமச்சீர் கல்வி முறையும், முப்பருவ முறையும் உள்ளது. 10மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான கேள்வித்தாள்கள் மட்டுமே அரசு தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் அச்சிட்டு வழங்கப்படும். பருவ தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை கடந்த ஆண்டு முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககமே வல்லுனர் குழுவை கொண்டு தயாரித்தது. 

வகுப்பறையில் உயிரோட்டம் இல்லாத சூழலை உணர முடிகிறது: நமது கல்வி எழுப்பும் கேள்வி...

       பள்ளிக்கூடமணியோசை கேட்டதும்கதவுகளை மோதி தள்ளிஓ வென்ற இரைச்சலுடன்பீறிட்டுக் கிளம்புகிற மழலையின் குரல்அடிமைத்தனத்தை எதிர்த்தகலகக் குரலெனவே ஒலிக்கிறது..!கவிஞர் மீ. உமாமகேஸ்வரி. இதுதான் குழந்தைகளுக்கும் பள்ளிக்குமான உறவு. தன் முதுகின் பின்புறத்தில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட சிறகுகளை வீசியடித்து பறந்த சுதந்திர பறவைகள்கோடைகாலம் முடிந்து மீண்டும் அடைபடும் பறவையாய் பள்ளிக்கூடத்தினுள் நுழைந்துவிட்டது... அடுத்த கோடை விடுமுறைக்காய் ஏங்கும் குழந்தைகளின் ஏக்கம் பள்ளியின் முதல் நாள் தேங்கிய கண்ணீர் குளத்தோடு அம்மாவுக்கு கையசைத்து செல்லும் காட்சியை ஒவ்வொரு வருடமும் காண்கிறோம். மகிழ்ச்சியாய் கற்கவேண்டிய கல்வி சுமையாய் மாறிய விளைவே கல்வியின் மீது பயமும் வெறுப்பு மனநிலையும் பள்ளிக்கூடம் சிறைகூடமாய் குழந்தைகள் மத்தியில் உள்ளது. வீட்டில் பேசு பேசு என குழந்தையை பேசவைக்கும் சூழலிலிருந்து, பேசாதே...! பேசினால் அடிவிழும் என்ற தலைகீழான வகுப்பறை சூழல், குழந்தை அதன் இயல்பை இழந்து தனிமை மனநிலையை உணர்கிறது.

படிப்பு பாழாவதற்கு ஊர்வலங்கள் எந்த வகையிலும் காரணமாக அமைந்து விடக்கூடாது

         விழிப்புணர்வு ஊர்வலங்கள் எனும் பெயரில் பள்ளி மாணவ, மாணவிகளை விளம்பரப் பதாகைகளை கையில் ஏந்த வைத்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெய்யிலில் நடக்க வைப்பதை அடிக்கடி ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.

புதிய மருத்துவ காப்பீட்டில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

         புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 1-7-2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய படிவத்தை ஜூன் 30க்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசு

         பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு 4ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்குகிறார். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தமிழக அரசு ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கி பாராட்டி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் ஊத்தங்கரை மாணவி 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலாவது இடத்தை பிடித்தார். தர்மபுரி மாணவி 1192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தார். நாமக்கல் துளசிராஜன், சென்னை நித்யா ஆகியோர் 1191 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3ம் இடத்தை பிடித்தனர். 

தனியார் பள்ளிகள் இட விவகாரம் குழுவின் பரிந்துரையை அரசு செயல்படுத்துமா?


         தமிழகத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை தற்காலிக அங்கீகாரம் வழங்கப்படும். இதற்கு சில விதிகளை அரசு கொண்டு வந்து ஒரு உத்தரவையும்(ஜிஓ எண் 48) போட்டது. அதில் தனியார் பள்ளிகள் இயங்க குறிப்பிட்ட இடம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி மாநகராட்சியில் 6 கிரவுண்ட், நகராட்சியில் 10 கிரவுண்ட், பேரூராட்சியில் 1 ஏக்கர், கிராம ஊராட்சியில் 3 ஏக்கர் இடம் வசதி இருக்க வேண்டும்.பல பள்ளிகளில் இதுபோன்ற இட வசதி இல்லாததால் அந்த பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் கொடுக்காமல், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் நிறுத்தி வைத்தது. இது கடந்த 2 ஆண்டுகளாக பெரிய பிரச்னையாக உருமாறியது. தனியார் பள்ளிகள் தரப்பில் உடனடியாக அங்கீகாரம் வழங்காவிட்டால் மாணவர்களின் நலன் பாதிக்கும் என்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு வல்லுநர் குழு ஒன்றை அரசு அமைத்தது. அதில் நகர ஊரமைப்பு துறை, ஊரகவளர்ச்சித்துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் இடம் பெற்றனர். அவர்கள் தவிர குழுவின் உறுப்பினர் செயலாளராக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் இடம் பெற்றனர். 

90 சதவீத பள்ளிகளில் அன்னையர் குழு முடக்கம்


          பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட அன்னையர் குழு திட்டம், 90 சதவீத பள்ளிகளில் உருவாக்கப்படவில்லை. மீதியிருக்கும், 10 சதவீத பள்ளிகளிலும், பெயரளவில் மட்டுமே, குழுவின் செயல்பாடுகள் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.

இட மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்: 'ஆன்லைன்' குளறுபடியால் ஆசிரியர்கள் ஆவேசம்


         திருப்பூரில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், நீலகிரி மாவட்டத்தில், பணியிடம் காலி இல்லை என 'ஆன்லைன்' தகவல் வந்ததால், ஆசிரியர்கள் ஆவேசம் அடைந்தனர்.

பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

       பாண்டியன் கிராம வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்ற பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகளில் புதிதாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.

       அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகளில் புதிதாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 

'நூற்றுக்கு நூறு' திட்டம் ஆசிரியர்களுக்கு உத்தரவு.


         மதுரை கல்வித் துறையில், 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

பள்ளி கட்டடம் அமைக்கும் பணி: புவியியல் துறையினர் ஆய்வு

        குன்னூர் சின்ன வண்டிச்சோலையில் புதிய பள்ளி அமைக்கும் இடத்தை புவியியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
 

பிளஸ் 2 படிக்காமல் தலைமை ஆசிரியரான பெண்

       பிளஸ் 2 படிக்காமல் இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர்பயிற்சி பெற்ற பெண், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
 

2005 ஆம் ஆண்டு குரூப் 1 இல் தேர்ச்சி பெற்ற 83 பேரின் தேர்ச்சி செல்லாது: உச்ச நீதிமன்றம்

       கடந்த 2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நடராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

      ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
OC - 508
BC - 22172

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

         ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853 
ஆங்கிலம் - 10716

இரவு நேரத்தில் ஆன்லைன் கலந்தாய்வு ஆசிரியர்கள், அலுவலர்கள் பெரும் அவதி

       நாமக்கல்லில் இரவில் நடைபெறும் ஆன்லைன் கலந்தாய்வால் ஆசிரியர்கள், அலுவலர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக கடந்த இருவாரமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
 

டி.இ.ஓ. இன்று ஓய்வு கூடுதல் பொறுப்பை ஏற்க 20 தலைமையாசிரியர்கள் மறுப்பு

       நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வரும் பிரபு ராதாகிருஷ்ணன் (58). இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து பதவி உயர்வின் மூலம் மாவட்ட கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

         தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சிவாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டுபேசினார்.

TRB Special TET 2 More Questions Wrong!



      தமிழ் வினாவில் கடலினை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு என்ற கேள்விக்கு நான்கு விடைகள் தரப்பட்டன.
அ) முந்நீர்   ஆ. ஆழி    இ.பரவை    ஈ. சமுத்திரம்

குரூப்- 2 தேர்வு கேள்வித்தாள் வெளியானதாக பரபரப்பு - தினமலர்

          கடலுாரில், நேற்று நடந்த குரூப் -2 தேர்வின், முக்கிய கேள்விகளுக்கான விடை எழுதப்பட்ட, ஜெராக்ஸ் நகலை, தேர்வு எழுதிய சிலர் கண்டெடுத்து உள்ளனர். இதனால், கேள்வித்தாள் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குரூப் 2 தேர்வு 32 சதவீதம் கட்

           திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் நேற்று டி.என்.பிஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது. 2 ஆயிரத்து 846 பதவியிடங்களுக்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 114 மையங்களில் நேற்று காலை 10:00 முதல் பகல் 1:00 மணி வரை எழுத்து தேர்வு நடந்தது.
 

சுய நிதிப் பள்ளிகளையும், மானியத் திட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்ன?

          பள்ளிகள் திறந்துவிட்டன. ஏராளமான பெற்றோர், நல்ல பள்ளிக்கூடம் எது என்று தேடி அலைந்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். எவ்வளவு பணம் செலவானாலும் அதனைக் கடன் வாங்கியாவது சமாளிக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்கள் பற்றியெல்லாம் ஊடகங்களில் விலாவாரியாக எழுதியாகிவிட்டது.

நெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு

       திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது. எனினும் பணியிட மாறுதல் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்... : காலி பணியிடங்களால் திண்டாட்டம்

          பள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு, மாநிலம் முழுவதும், 44 ஆயிரத்து 976 துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், உடற்கல்வி  ஆசிரியர் தரத்தில், 3,500 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 
 

தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்

பிற மாவட்டத்தை பற்றி அறிந்தவர்கள் "COMMENT BOX"ல் பதிவிடலாம்...
=========================================================
திருவண்ணாமலை மாவட்டம்  ********************************************* டேனிஷ் மிஷின் மேல்நிலைப் பள்ளி,  பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை

உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!

படம்: இஸ்ரோ"திங்கறதுக்கே சோறு இல்லையாம்… இதுல இவனுக ராக்கெட் விடுறானுகலாம்… ராக்கெட்டு…" இதுதான் ஒவ்வொரு முறையும் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது டீக்கடை விமர்சகர்களின் கருத்தாக இருக்கும். அவர்களின் வாயை அடக்கும் விதமாகவும், ராக்கெட் ஏவுவதினால் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவிற்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும், 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ நாளை (திங்கள்கிழமை) விண்ணில் ஏவவுள்ளது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும், அதன் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு; 8 மணி நேரம் காத்திருப்பு

              சிவகங்கையில், "ஆன்லைனில்' நேற்று மாலை வரை காலியிட விபரங்களை வெளியிடாததால், ஆசிரியர்கள் எட்டு மணி நேரம் வரை, கவுன்சிலிங் மையத்தில் காத்திருந்தனர். சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியில், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று, பட்டதாரி, சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் என, அறிவித்தனர்.
 

மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்

         முதன்மைக்கல்வி அலுவலகத்தில்கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம்ஏற்பட்டதால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள்,இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு ஆன் லைன் மூலம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive