Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை குரூப் 2ஏ தேர்வு தமிழகம் முழுவதும் 6.32 லட்சம் பேர் எழுதுகின்றனர்:

          நாளை நடைபெறும் குரூப் ‘2ஏ’ பதவிக்கான தேர்வு 114 மையங்களில் நடக்கிறது. இதை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) குரூப் ‘2ஏ’ பதவியில் (நேர்முக தேர்வு அல்லாத பதவி) அடங்கிய 2,846 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நாளை நடத்துகிறது.
 

மாணவ-மாணவிகள் 6,44,000 பேருக்கு ரூ.230.70 கோடியில் இலவச சைக்கிள்:

            மாணவ - மாணவிகள் 6,44,000 பேருக்கு ரூ.230.70 கோடி செலவில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார்.பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மாணவிகள் அனைவருக் கும் தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில் (2014-2015) ஆண்டு தொடக்கத்திலேயே மாணவ - மாணவிகளுக்கு ரூ.230 கோடியே 72 லட்சம் செலவில் 2,86,400 மாணவர்கள் மற்றும் 3,57,600 மாணவிகள் என மொத்தம் 6,44,000 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது.இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 மாணவ - மாணவிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல்:

         தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இலவச பாடபுத்தகங்களின் முதல் பக்கத்தில் விலை இல்லா பாடநூல் என்பதை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பக்கத்தை மட்டும் கிழித்துவிட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 

திருப்பூரில் மாணவி தற்கொலை!

       திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டி அரசு பள்ளி மாணவி சுவாதி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பள்ளி கணக்கு ஆசிரியை பிரியா, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் பழவஞ்சிபாளையம் வேலன் நகர் 2வது வீதியை சேர்ந்த மனோகரன் - சுசீலா தம்பதியின் மகள் சுவாதி (18), வீரபாண்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 கணினி அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.

NHIS - 2014

          MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Provision of Health Care Assistance to the Pensioners (including spouse) / Family Pensioners through the United India Insurance Company Limited, Chennai – Implementation – Orders – Issued.

பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் காலமுறை ஊதிய உயர்வு பெறுவதில் ஓர் முக்கிய ஆலோசனை

       பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் நடைபெற்று வரும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில் முந்தைய பணியில் 1,4,7 மற்றும் 10ம் மாதத்தில் ஊதிய உயர்வு பெற்று வந்தவர்களாக இருப்பர்.
 

மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்

           அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

High School HM Promotion Regarding | தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு

       உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு திராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு

தேர்வுத்துறைக்கு உத்தரவு.

          +2 கணித தேர்வு விடைத்தாள் காணாமல் போனதால் பாதிப்பு என மாணவர் வழக்கு.புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் பிரகாஷ் உயர்நீதிமன்ற கிளையில் மனு.
 

SPECIAL TET: மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.

         மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

'குரூப் 2' தேர்விற்கு கடும் போட்டி இருக்கும்

ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள்:சிக்கலில் பட்டதாரிகள்

          தமிழகத்தில் ஜூன் 29 அன்று வங்கி மற்றும் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்' 2 தேர்வு நடப்பதால், எந்த தேர்வை எழுதுவது எனத் தெரியாமல் பட்டதாரிகள் தவிக்கின்றனர்.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 2800 உதவியாளர் பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 2' எழுத்துத்தேர்வு, ஜூன் 29 காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.வங்கித் தேர்வு: பாரத ஸ்டேட் வங்கிக்கு இந்திய அளவில், 1897 'புரபேஷனரி ஆபீசர்' பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும், ஜூன் 29 காலை, பிற்பகலில் சென்னை உட்பட 14 நகரங்களில் நடக்கிறது. ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள் நடப்பதால் இரண்டிற்கும் விண்ணப்பித்தவர்கள் எந்ததேர்விற்கு செல்வது என புரியாமல் தவிக்கின்றனர்.


டைப்பிஸ்டுகளுக்கு 5% சம்பள உயர்வு.

       அரசுத்துறையில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகளுக்கு தனி ஊதியம் 5 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
 

பங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள்

          பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன. இதனால், ஜூனியர் ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன. இதன்படி கூடுதலாக (சர்பிளஸ்) உள்ள ஆசிரியர்கள், பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் அடிப்படையில் மாற்றப்படுவர்.

பெண் குழந்தை விடுதிகளின் பாதுகாப்பிற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

       தமிழகத்தில், விடுதிகளில் தங்கும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பொள்ளாச்சியில் விடுதியில் தங்கி இருந்த, இரண்டு மாணவியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவு - பொதுப்பிரிவு கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு

       அண்ணா பல்கலையில் ஜுன் 27ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்ற உத்தரவால், திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு துவங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'திறமையாக செயல்பட ஊழியர்களை ஊக்கப்படுத்துங்க!'

       அரசு ஊழியர்களை நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்றும்படி, ஊக்கப்படுத்த வேண்டும்' என, அனைத்து துறைகளுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

அகமேற்பார்வை தொடர்பாக 8,000 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு பயிற்சி


           பள்ளி மற்றும் கல்வித்தர மேம்பாட்டிற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களின் அகமேற்பார்வை பணி தொடர்பாக 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி 2 சுற்றுகளாக நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெறும். மாநில அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். மாவட்ட அளவிலான பயிற்சி ஜூலை மாதம் 7ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 நாள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

TRB PG TAMIL மீண்டும் இன்று (27 06.14) மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

           TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (27 06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்

       தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்...

மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம்

இடைநிலை ஆசிரியர் 26-06-2014 பின் மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம் ; -TATA கிப்சன் .

  திருநெல்வேலி மாவட்டம் ; 7 பணியிடங்கள்.
ஆலங்குளம் ஒன்றியம்
1.ஊ .ஒ து .பள்ளி -கருப்பினாங்குளம்

ஆசிரியர் கலந்தாய்வு: இன்றும்கூடுதல் பணியிடங்கள் காட்டப்படுமா

         பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த பணிநிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன. இதனால், 'ஜூனியர்' ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன. 
 

ஓர் ஆசிரியருக்காக ஒரு ஊரே சேர்ந்து போராட்டம் - ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு: பள்ளியை பூட்டி மாணவர்கள் பெற்றோர் சாலை மறியல்

 
          ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி .ஆர். நகரில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருபவர் நாராயணன். இந்நிலையில் இவரை சங்கீதவாடி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9 மணியளவில் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி பணி.


    புதுவை பாரதியார் கிராம வங்கியில் காலியாக உள்ள 13 Officer in Junior Management (Scale I) Cadre மற்றும் Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

புதுச்சேரியில் ஆசிரியர் காலியிடங்கள்.


         தமிழக நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அந்த அரசின் சார்பாக 19 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TET என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!

              அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க முடியும். கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகள் வைத்து கண்டறியப்பட்டு, பணியிலமர்த்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானபோது, பரவலான வரவேற்பை பலரிடம் பெற்றது. வெறும் பட்டப்படிப்பும் பட்டயப்படிப்பும் மட்டுமே ஆசிரியருக்கானத் தகுதியாக நிலவிவந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உறுதியானது.

ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

          கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

BE கலந்தாய்வு ஒத்திவைப்பு!

          உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்:

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி.


            இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 53 Assistant/office Attendant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி: TNPSC அறிவிப்பு


         தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
 

சென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி.


     சென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.
 

மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் நடவடிக்கை

         தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு

        ஊதியம் - தனி ஊதியம் - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1.8.1992 முதல் 1.9.1998 வரை உள்ள STENO-TYPIST, GRADE-III 5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு

SG TO BT Promotion Final Panel

           பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் / ஆங்கிலம் / கணிதம் / அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு

கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive