பள்ளி
திறந்து, ஒரு மாதம் முடிய உள்ள நிலையில், தற்போது நடத்தப்படும் பணியிட
மாறுதல் கலந்தாய்வால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது
தொடர்பாக, ஆசிரியர் பயிற்றுனர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று,
சென்னையில் உள்ள கல்வித்துறை வளாகத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Revision Exam 2025
Latest Updates
வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம்: டிஇடி தேர்வில் தேர்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரதம்
ஆசிரியர்
தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற
மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை
வலியுறுத்தி டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் நேற்று உண்ணா
விரதம் இருந்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் 150க்கு, 90க்கும் மேல்
மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணால்
பாதிக்கப்பட்டு, பணி நியமனம் கிடைக்காதவர்கள் சென்னையில் நேற்று
உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணா விரதம் குறித்து பட்டதாரிகள்
கூறியதாவது:கடந்த 2013ல் நடந்த டிஇடி தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றோம்.
அரசாணை 181ன்படி டிஇடி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் ஆசிரியர்
பணி என்று அறிவித்தார்கள். அதன்படி டிஇடி தேர்வில் மதிப்பெண் பெற்று
தேர்ச்சி பெற்றோம்.
3 மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் செயல்பாட்டுக்கு வரும்
மூன்று
மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் முழுமையாகச்
செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா
கூறினார்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு
சிறப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது.
மாணவ-மாணவிகள் தனியார் சுய நிதி பள்ளிகளில் சேருவதற்கு வாய்ப்பு
திருச்சி
மாவட்டத்தில் நலிந்த பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள் தனியார் சுயநிதி
பள்ளிகளில் சேருவதற்கு வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பம் அனுப்பலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா? - RTI
சனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா? தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு மதுரை மாவட்டதொடக்கக்கல்வி அலுவலகத்தின் பதில்
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. சென்னை மாணவர் அனிகேட் முரேகர் அகில இந்திய அளவில்19-வது இடத்தை பிடித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக MBBS தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் (சுயநிதி) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது
டிப்ளமோ தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு.
டிப்ளமோ தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் www.tndte.com இணையதளத்தில் இந்த முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பழைய
மதிப்பெண் சான்றிதழை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் கம்ப்யூட்டர்
மையத்தில்சமர்ப்பித்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழைப்
பெற்றுக்கொள்ளலாம்.
சமச்சீர் பாடத்திட்டத்தை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் ஆய்வில் பரிந்துரை
சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம்
குறைந்துள்ளது. எனவே, இந்தப் பாடத்திட்டத்தை தரம் உயர்த்தும் வகையில்
முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமச்சீர்
பாடத்திட்டத்தின் தாக்கம் தொடர்பாக டான் பாஸ்கோ கல்வி, ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி மையம் மற்றும் டேலன்ட்ஈஸ் ஆகிய அமைப்புகள் சார்பாக ஆய்வு
நடத்தப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர்களுக்கு பவானிசாகர் பயிற்சி
தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி - பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்கள் விவரம்
5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது
31.07 க்குள் 5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது- தொடக்கக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் (த.அ.உ) பதில்
2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்?
FLASH NEWS : 2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.
ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் BRT கட்டாய இடமாறுதல்!
ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய இடமாறுதல்; அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடி
BRT சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…….
ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்கும் முன் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வு கலந்தாய்வு, சொந்த ஒன்றியத்தில் / சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…….
6.25 லட்சம் பேர் எழுத உள்ளகுரூப்2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
6.25 லட்சம் பேர் எழுத உள்ளகுரூப்2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைய ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கவும்
பொதுத்துறை
வங்கி திட்டம் மூலம் ஓய்வூதியம்
பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் புதிய
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைய தங்களது
விவரங்களை ஜூன் 30ம் தேதிக்குள்
உரிய படிவத்தில் அளிக்க வேண்டும் என்றார்
மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது..
உடனடி தேர்வு 'ஹால் டிக்கெட்'
பத்தாம் வகுப்பு உடனடி தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்,'
தேர்வுத் துறை இணையதளத்தில் ெவளியிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொது
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக, வரும், 23ம் தேதியில் இருந்து, 30ம் தேதி வரை, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது.
2,846 காலி பணியிடங்களை நிரப்ப29ம் தேதி குரூப் 2 போட்டி தேர்வு
சென்னை:தமிழக அரசின், பல துறைகளில், குரூப் 2 நிலையில் காலியாக உள்ள, 2,846
இடங்களை நிரப்ப, வரும், 29ம் தேதி போட்டி தேர்வு நடக்கிறது. தகுதியான தேர்வர்களுக்கு,
டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், நேற்று,
'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: வரும், 29ம்
தேதி காலை, 'குரூப் 2ஏ' (நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள்) தேர்வு
நடக்கிறது. 2,846 பணியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதை,
6.25 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
கல்வி மேம்பாட்டில் 7வது இடத்தில்தமிழ்நாடு
கல்வி
மேம்பாடு நிலைப் பாட்டில் உள்ள முதல் 5நகரங் களில் தில்லி இடம் பெறவில்
லை. இந்த பட்டியலில் புதுச் சேரி முதலிடத்தை பெற்று இருக்கிறது.
உத்தரப்பிரதேசம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.
பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு!
தமிழகம்
முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பயன்பெறும்
வகையில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30
வருடங்களாக ஒரே வகையான உணவு வழங்கப்பட்டு வருவதால் குழந்தைகளின் தற்கால
தேவைகள் மற்றும் விருப்பங்களின்
அடிப்படையில் அவர்களது உணவு வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு மையங்களில் 13 வகையான
கலவை சாதம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.