Half Yearly Exam 2024
Latest Updates
கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு
எந்த
குளறுபடியும் இன்றி, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க
வேண்டும்,' என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
'உயிரியல்' ஆசிரியர்களை சோதிக்கும் 'கவுன்சிலிங்': 19 ஆண்டுகளாக தொடருது குழப்பம்
அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் 'உயிரியல்' பாடத்திற்கு ஆசிரியர் பணியிடங்கள்
ஒதுக்குவதில், கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் குழப்பத்திற்கு, இந்தாண்டு
நடக்கும் கலந்தாய்வில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
முப்பருவ கல்வி முறை: திண்டாடும் 10ம் வகுப்பு மாணவர்கள்
முப்பருவ
கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த
மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பு
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில்
விளக்கம் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர் .
'கவுன்சிலிங்'கை புறக்கணித்த ஆசிரியர்கள்
மதுரையில் நடந்த முதல்நாள் ஆசிரியர் 'கவுன்சிலிங்'கை பலர் புறக்கணித்தனர்.
அரசு
மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான
பொதுமாறுதல் 'கவுன்சிலிங்' துவங்கியது. முதல்நாளான நேற்று ஆசிரியர்
பயிற்றுனர்களுக்கான பணிநிரவல் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ
இருதயசாமி தலைமை வகித்தார். மாவட்டத்தில் 67 பேர் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.
இதில், முன்கூட்டியே விருப்ப மாற்றத்தில் 7 பேர் மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதல் பெற்றனர். 13 பேர் மட்டும் பங்கேற்றனர். அவர்களுக்கு மாறுதல்
உத்தரவு வழங்கப்பட்டது. மீதமுள்ள 49 பேர் கவுன்சிலிங்கை புறக்கணித்தனர்.
இதில் சிலர், தாங்கள் பணிபுரியும் இடங்களில் கையெழுத்து போட்டுவிட்டு
சென்றனர்.
பணி மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஓ.டி வழங்கப்படுமா?
அரசுப்
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பணியிட மாறுதல்
கவுன்சலிங் நடத்தி, ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கு மாறுதல் உத்தரவுகள்
வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை
மற்றும் படிக்கும் மாணவர்களின் வருகை என்ற அடிப்படையில் ஆசிரியர்களுக்கு
பணி நிரவலும் வழங்கப்படுகிறது. அதன்படி
இந்த ஆண்டுக்கான கவுன்சலிங் நேற்று தொடங்கியது. நேற்றைய கவுன்சலிங்கில்
உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு நடந்தது.
இன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி
உயர்வு வழங்கப்படுகிறது. 18ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்
மற்றும் பணியிட மாற்ற கவுன்சலிங் நடக்கிறது.
நீதிமன்றத்தில்,அவமதிப்பு மனு தாக்கல்!
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், இழப்பீடு நிர்ணயிக்க, ஓய்வு பெற்றநீதிபதியை
நியமிக்க, அரசு உத்தரவு பிறப்பிக்காததால், சென்னை உயர்
நீதிமன்றத்தில்,அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை,
இம்மாதம், 19ம் தேதிக்கு,தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்
பணியிட
மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை
(ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன்
தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியை ஆதரிப்போம்!
அரசு
பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்
பெறும் மாணவர்களை, சுயநிதிப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு தமிழக அரசு நிதி
உதவி அளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகள்
சிறப்பான வளர்ச்சியை பெற முடியும்.
வேளாண்மைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் படிப்பிற்கானதரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் படிப்பிற்கானதரவரிசைப்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொது கல்வி பிரிவில்
ஆர்.சூர்யமல்லிகராஜ்,
டி.இலக்கியபிரியா ஆகியோர் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள்பெற்றுள்ளனர்.
DEE - பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும் - TNPTF
பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறையிடம் இல்லை-TNPTF
ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதலில் 2013 பேனலும், அடுத்ததாக 2014 பேனலும் கடைபிடிக்கப்படும் - TNPTF
ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதலில் 2013 பேனலும், அடுத்ததாக 2014 பேனலும் கடைபிடிக்கப்படும்; , அதேபோல் பணி நிரவல் குறித்து அச்சமடைய தேவையில்லை TNPTF வேண்டுகோள்.
ஆசிரியர்கள் நியமன ஊழல்!
போபால்:
கடந்த 2011ஆம் ஆண்டு மத்திய
பிரததேச மாநிலத்தில் மாஜி தொழில்நுட்ப கல்வி
அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா,மாநில அரசு
நடத்திய ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம்
செய்வது தொடர்பாக ஊழல் பிரச்சினையால் 6 மாதத்திற்கு
பிறகு தேர்வுதுறையின் அதிரடிபடையால் கைது செய்யப்பட்டார்.பின்னர்
வெளியில் விடுவிக்கப்பட்டார். சர்மா மாநில முதல்வர்
சிவராஜ்சிங் சவுகானுக்கு நம்பகமான உதவியாளராக இருந்துள்ளார்.
பொறியியல் :தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 16) வெளியிடப்படுகிறது
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687
பேரின் தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 16) வெளியிடப்படுகிறது.
ஜூலை யில் போட்டித் தேர்வு அறிவிக்க வாய்ப்பு
ஜூலை யில் போட்டித் தேர்வு அறிவிப்பு :அரசு பொறியியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர்
தொடக்க கல்வி பட்டதாரிகளுக்கு PG பதவி உயர்வு வேண்டும் - கோரிக்கை மனு
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையில் கோரிக்கை மனு -Thanks to State Gen .Sec-TNGTF
சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி CPS திட்டத்தை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்
சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்-அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்"
கவுன்சிலிங்கில் மாணவியருக்கு முன்னுரிமை; பள்ளிக்கல்வித்துறை முடிவு
பள்ளி
மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் 'நடமாடும் ஆலோசனை மைய' சேவையில்,
பெண்கள் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு
செய்துள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் தெளிவான கொள்கை அவசியம்!
பள்ளி
கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் (ஒரு பள்ளியில்
கூடுதலாக உள்ள ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுதல்) கலந்தாய்வு, வரும், 26ம்
தேதியும், தொடக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல்
கலந்தாய்வு, வரும், 18ம் தேதியும் நடக்கிறது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
தமிழகம்
முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி,
மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு
இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.
பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.
சத்துணவு, அங்கன்வாடி மையங்களின் பணிகளை தொண்டு நிறுவனம், தனியாரிடம் ஒப்படைக்க அரசு ஆலோசனை
தமிழகம்
முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களின் சில பணிகளை தொண்டு
நிறுவனங்கள் மற்றும் தனியார் மூலம் செயலாக்கம் திட்டம் குறித்து தமிழக
அரசு ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், சத்துணவுத்
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 1982ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்
மூலம், ஊரக
மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய
மாணவர்களுக்கு சத்துணவு, முட்டை, சுண்டல் உள்ளிட்ட உணவு பொருட்கள்
வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் மற்றும் 54
ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு
மையங்களிலும், ஒரு அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு உதவியாளர்
நியமிக்கப்படுகின்றனர்.
முப்பருவ கல்வி முறை; திண்டாடும் மாணவர்கள்; ஆசிரியர்கள் கவலை
முப்பருவ
கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்,
குறைந்த மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் பல இலட்சம்
கட்டி படிக்க வைக்கின்றனர். ஆனால் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களை
மட்டும் பல்வேறு விதங்களில் சிரமத்துக்குள்ளாக்குகிறார்கள்.
இன்றும் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் அரசு பள்ளி மாணவர்களை
அவரவர்களின் வீட்டில் இருந்து காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற
பலவற்றையும் கொண்டு வரக்கூறி நிர்பந்திக்கிறார்கள். அவ்வாறு கொண்டு வரும்
மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு லீடர் மற்றும் சிறப்பு தனி சலுகைகளை
வழங்குகின்றனர். இது போல் செயல்படும் ஒரு சில அரசு பள்ளி ஆசிரியர்களால்
ஒட்டு மொத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதும் பொதுமக்களிடையே தேவையற்ற
வெறுப்புணர்ச்சி ஏற்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களையும் தங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைக்க வேண்டும் ஆசிரியர்கள.
தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு கோரி வழக்கு
TATA - வின் மாநில அளவில் பதவி
உயர்வு வழக்கு W.P . ( MD ) NO; 4773/2011.
உயர்வு வழக்கு W.P . ( MD ) NO; 4773/2011.
பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடி வைக்க நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
பள்ளிகளில்
உள்ள கிணறுகளை மூடிவைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள
அனைத்து பள்ளிகளிலும் எல்லாவகையான மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி
கட்டாயம் வைத்திருக்க வேண்டும். என்று பள்ளி கல்வி இயக்குநர் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தற்போது மாவட்டங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும்
மழையினால் பள்ளி மாணவ மாணவியருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் மாணவ மாணவியர்,
தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை: பள்ளிகளில் கவுன்சலிங்
பள்ளிகள்
மற்றும் விடுதிகளில் சிறுவர், சிறுமியருக்கு எதிராக நடைபெறும் பாலியல்
தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்துப்
பள்ளிகளிலும் இந்திய மருத்துவக் கழகத்தின் மூலம் கவுன்சலிங்
அளிக்கப்படவுள்ளது.