பள்ளிகள்
மற்றும் விடுதிகளில் சிறுவர், சிறுமியருக்கு எதிராக நடைபெறும் பாலியல்
தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்துப்
பள்ளிகளிலும் இந்திய மருத்துவக் கழகத்தின் மூலம் கவுன்சலிங்
அளிக்கப்படவுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
வேலை நாட்கள் ஆறு நாட்களாக உயர்த்த திட்டமில்லை
அரசு ஊழியர்கள் வேலை நாட்கள் ஆறு நாட்களாக உயர்த்த திட்டமில்லை; மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து இடைகால நிவாரணமாக வழங்குவதில் மாற்றமில்லை
''பிளஸ் 2 மறுகூட்டல் மறுமதிப்பீட்டில் 3,252 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம்.
''பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில், 3,252
மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, தேர்வுத்துறை
இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.
வி.ஏ.ஓ., தேர்வில் 2.45 லட்சம் பேர் 'ஆப்சென்ட்!'
நேற்று நடந்த வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வில், 2.45 லட்சம்
பேர், 'ஆப்சென்ட்' ஆயினர். தேர்வுக்கு, 10 லட்சம் பேர் பதிவு செய்தபோதும்,
7.63 லட்சம் பேர் மட்டுமே, தேர்வை எழுதினர்.
TNPSC VAO Exam Answer Key 2014 Download
TNPSC VAO Exam Answer Key 2016 Download |
TNPSC VAO Exam Answer Key 2016
இன்று (28.2.2016) நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வு தற்காலிக விடைகள் வெளியிடப்பட்டு உள்ளது. - Click Here & Download
எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்: நாமக்கல், ஈரோடு பள்ளிகள் ஆதிக்கம்
எம்.பி.பி.எஸ்
மற்றும் பல்மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று
வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி இயக்குனர்
அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரவரிசை பட்டியலை
வெளியிட்டார்.
9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கொச்சையான வார்த்தைகள்: மாற்றி அமைக்க பெற்றோர் கோரிக்கை
தமிழக
சமச்சீர் பாடத்திட்டத்தில், 9-ம் வகுப்பு முதல் பருவ மொத்த பாடங்களும்,
செய்யுள், உரைநடை, இலக்கணம் 3 என இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளன. உரைநடை
பகுதியில் அதன் துணைப்பாடமாகிய ‘மாமரம்’ என்ற தலைப்பிலான பாடத்தில்,
கொச்சையான(பேச்சு வழக்கு) வார்தைகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
திருச்சிராப்பள்ளியில் புதிதாக ஆசிரியர் இல்லக் கட்டடம்: முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.40 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் தேவையற்ற பணியிட மாறுதல்களை கைவிடக் கோரிக்கை
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்
கூட்டணியினர், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். பள்ளிகளில் அதிகப்படியாக உள்ள பணியிட மாறுதல்களைக் கைவிட
வேண்டும், முறையற்ற மாறுதல் ஆணைகளை ரத்துசெய்து, நேரடியான கலந்தாய்வு
முறையில் மாறுதல் ஆணைவழங்க வேண்டும், சேம நிதிக் கணக்குகளை முறைப்படுத்திக்
கணக்குச் சீட்டுவழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை
முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முப்பருவ கல்வி முறை நல்லதா?
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் திட்டம்
சீர்கெட்டு போய் வருகிறது. அடுத்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
வெளிவரும் போது இது வெளிப்படையாக தெரியும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
காரணம், முப்பருவ கல்வி முறையால் மாணவர்களின் எழுத்தறிவு திறன் குறைந்து
போய் விட்டதுதான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் முப்பருவ
கல்வி முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, பாடப்புத்தகங்கள் மூன்று
பிரிவுகளாக பிரித்து, மூன்று பருவங்களுக்கு தரப்படுகிறது.
பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் சாவு
நாமக்கல்லில்
பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக
இறந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல்
எஸ்.பி. புதூரில் அரசு நிதி உதவி பெறும் அர்த்தனாரி தொடக்கப்பள்ளி இயங்கி
வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகன் (வயது
10), நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தான். இறை வழிபாடு முடிந்தவுடன்
வகுப்புக்கு சென்று உட்கார்ந்த மோகன் பாடங்களை எழுதிக்கொண்டு இருந்தான்.
டியூஷனுக்கு வருமாறு மாணவர்களிடம் நிர்பந்தம்!
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தங்களிடம்
படிக்கும் மாணவர்களை கட்டாயம் டியூஷனுக்கு வர வேண்டும் என நிர்பந்தித்து
வருவதால் ஏழை பெற்றோர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். பிளஸ் 2
பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணே அந்த மாணவனின் வாழ்க்கையை
நிர்ணயிக்கும் என்பதால், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பிளஸ் 2
தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக செலவை பற்றி கவலைப்படாமல்
தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.
பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு
பிளஸ் 2 மாணவர்கள், 3,800 பேர், பல்வேறு பாடங்களில், மறுமதிப்பீடு கோரி,
தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்தனர்; 200 பேர், மறுகூட்டல் கேட்டு
விண்ணப்பித்தனர். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல்
செய்யும் பணி, நேற்று முன்தினம் முடிந்தது. தேர்வு முடிவு தயாரிக்கும் பணி,
நேற்றிரவு வரை நீடித்தது.மருத்துவப் படிப்பிற்கான, 'ரேங்க்' பட்டியல்,
இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுவதால், நேற்றிரவே, மறுமதிப்பீடு
முடிவு, வேகமாக அனுப்பி வைக்கப்பட்டது.
ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு!!
மதுரை:உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு
வருமானவரி
விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு
திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள
ரூ.2 லட்சம் என்ற வருமான வரி உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்துவது குறித்து
மத்திய அரசு பரிசீலிப்பதாக நிதித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது அரசின் சாதனைகளில் ஒன்றாக வருமான வரி வரம்பு உச்சவரம்பை அறிவிக்க மோடி
முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
TRB Special TET Result Now Published
Teachers Recruitment Board College Road, Chennai-600006 |
SPECIAL TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2014 FOR PERSONS WITH DISABILITY (PWD) CANDIDATES
| |
Dated:13-06-2014
|
Member Secretary
|
வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த பிரதமருக்கு "காட்மா கோரிக்கை
தனி நபர் வருமான வரி
உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த
வேண்டும் என்று பிரதமருக்கு கோவை,
திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம்
(காட்மா) கோரிக்கை விடுத்துள்ளது.
ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்
ஏழாவது
ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம்
காட்டி வருகிறது.வரும்
2016ல், மத்திய அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க,
ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராக, நீதிபதி
அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக, விவேக்ரே, ரத்தின்ராய், செயலராக, மீனாஅகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
படிக்காத மாணவர்களை கண்டறியாத ஆசிரியர்கள்அதிகரிக்கும் 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு
எழுத, படிக்க, உச்சரிக்கத்
தெரியாத மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டறியாததால், 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு
அதிகரித்து வருகிறது.பள்ளிகளில் மாணவர்கள் வார்த்தைகளை எழுத ஆரம்பிக்கும்
போது, எழுத்துக்கள் தடுமாற்றம் ஏற்படும். ஆங்கில எழுத்துக்களில் 'பி,
கியூ' எழுத்துக்களுக்கு, வித்தியாசம் தெரியாமல் மாற்றி எழுதுவர். 'டி, பி'
எழுத்துக்களை தலைகீழாக மாற்றி எழுதுவர். ஒன்றாம் வகுப்பில் மாணவர்களின்
இக்குறைபாட்டை ஆசிரியர்கள் கண்டறிய முடியும். மாணவர்களின் நோட்டை
திருத்தம் செய்யும் போது, எழுத்துக்களுக்கான வேறுபாட்டை மாணவர்களுக்கு
தொடர்ந்து வலியுறுத்தினால், மாற்றிக் கொள்ள முடியும்.