டி.இ.டி இம்மாத இறுதிக்குள், ஆசிரியர் தேர்வு பட்டியலை எதிர்பார்க்கலாம்?
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' : டி.ஆர்.பி.,கடைசி
வாய்ப்பு அறிவிப்பு டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு, சான்றிதழ்
சரிபார்ப்பில், பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனவர்கள், கடைசி வாய்ப்பாக,
இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்' என,
டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.
அடுத்த
கல்வி ஆண்டில் (2014-2015) நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு
விண்ணப்பிக்க இருக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் (முதல் முறையாக
பாடங்களையும் தேர்வு எழுத உள்ளவர்கள்), ஏற்கனவே 2012க்கு முன்பு பழைய
பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள்
அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யாமல் இருந்தால் இப்போது
பதிவு செய்து கொள்ள வேண்டும்.அனைத்து தனித் தேர்வர்களும் நாளை முதல் 30ம்
தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள்
பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒதுக்கீடு
செய்துள்ள பள்ளிகளுக்கு சென்று செய்முறை வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.
தமிழகத்தில், தனியார் நடத்தி வந்த, 189
தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும்
தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர, பிளஸ் 2 தகுதி மட்டுமே தேவை
என்பதால், பலர் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு படித்து, சீனியாரிட்டி
அடிப்படையில், அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்தனர்.
குரூப் 4, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 16ம் தேதி முதல் 18ம் தேதி
வரை, சென்னையில் நடக்கும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
சமூக கல்வி அதிகாரி மற்றும்
வட்டார கல்வி அதிகாரி பணிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நீதிமன்றத்தை
அதிகாரிகள் மதிக்காதது வேதனை அளிக்கிறது என்று
உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பி.இ., படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள, 1.75 லட்சம் மாணவர்களுக்கும்,
நாளை காலை, 'ரேண்டம்' எண் ஒதுக்கப்படுகிறது. பி.இ., படிப்பில் சேர, 1.75
லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய
பாடங்களில், 'கட் - ஆப்' மதிப்பெண், 200க்கு, மாணவர்கள் எடுத்த மதிப்பெண்
அடிப்படையில், வரும், 16ம் தேதி, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதற்கு முன்னதாக, விண்ணப்பித்த, 1.75 லட்சம் பேருக்கும், அண்ணா பல்கலையில்,
நாளை காலை, 9:30 மணிக்கு, 'ரேண்டம்' எண் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உயர்கல்வி அமைச்சர், பழனியப்பன், 'ரேண்டம்' எண் ஒதுக்கீட்டை, துவக்கி
வைக்கிறார்.
PG TRB Tamil Cases Listed Today!
HON'BLE MR.JUSTICE V.RAMASUBRAMANIAN
HON'BLE MS.JUSTICE V.M.VELUMANI
தமிழகத்தில்,
ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி, பள்ளி செல்லா குழந்தைகள், 27,400 பேர்
இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பள்ளி செல்லா குழந்தைகளின்
எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆறு
முதல், 14 வயதுடைய குழந்தைகள், 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும்
என்பதற்காக, தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொள்கிறது.
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால், நடப்பாண்டிலும், அரசின் புதிய
சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.தமிழக அரசின்
சத்துணவு திட்டம் மூலமாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில்
பயிலும், ஏழை, எளிய மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்
மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பணி நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள், மீண்டும் பணி
கோரி, ஜூன் 15 முதல் அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன் சாகும் வரை
உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவர்கள்
எழுதிய கடிததத்தில் கூறியுள்ளதாவது:
மெட்ரிக்
பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ்
25 சதவீத ஏழை மற்றும் சமுதாயத்தில்
பின்தங்கிய மாணவர்கள் சேர்க்கப்பட்ட விபரம் குறித்து கணக்கு
எடுக்கப்பட்டு வருகிறது.இலவச மற்றும் கட்டாய
கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார்
பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த மாணவர்களுக்கு
25 சதவீத சேர்க்கை வழங்க வேண்டும் என்ற
நியதி கடந்த கல்வி ஆண்டு
முதல் தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிலும்
சிறுபான்மையினர் அல்லாத அனைத்து தனியார்
மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்களை
சேர்க்கும் பணியை கல்வித்துறை அதிகாரிகள்
தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கப்பட்ட விபரம் குறித்து பள்ளி
முன் அறிவிப்பு வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படத்தின் மீது கிளிக் செய்து முழுமையாக பார்க்கவும்..
'அய்யோ... முப்பருவ தேர்வுமுறை கிடையாதா?' என, 10ம் வகுப்பு சென்றிருக்கும்
மாணவர்கள் பதறுகின்றனர். '25 சதவீத இட ஒதுக்கீட்டுல, என் பிள்ளைக்கு சீட்
கிடைச்சிடுமா?' என, இலவச கட்டாய கல்விச்சட்டத்தின் கீழ்
விண்ணப்பித்திருக்கும் ஏழை பெற்றோர் கலங்குகின்றனர். இப்படி, மாணவர்களை பதற
வைத்து, ஏழைப் பெற்றோரை கலங்க வைத்து, பள்ளிகள் தொடங்கி இருக்கும்
நிலையில், கல்வியில் உள்ள குறைபாடுகளையும், புதிய கல்வியாண்டு
எதிர்நோக்கும் சீர்திருத்தங்களையும் பட்டியலிடுகின்றனர் கல்வியாளர்கள்.
டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில்,
பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனவர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம்
தேதி வரை நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்' என, டி.ஆர்.பி.,
(ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.
ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள,
'அரசாணை 363'ஐ எதிர்த்து, ஓய்வூதியதாரர்கள்
வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரிகள் பட்டியல்: தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் வெளியீடு.
தமிழகத்தில்
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 போன்ற
வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு புவியியல் வரைப்படதிறன் (Map Skill
Training) """"அறிவோம் அகிலத்தை"" என்ற பயிற்சி மாவட்ட அளவில் விடுபட்ட
ஆசிரியர்களுக்கு பயிற்சி
குமரி
மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த 3 பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் 12 ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிரீன்
கார்டு என்ற முறையை அமல்படுத்தி, வாடிக்கையாளர்களை குழப்புவதோடு,
அலைகழிப்பதாகவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மீது புகார்
எழுந்துள்ளது.
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய,
மாவட்ட கல்வி அதிகாரிக்கான முதல்நிலைத்
தேர்வில், விண்ணப்பித்தவர்களில், 50 சதவீதம் பேர், 'ஆப்சென்ட்'
ஆகியுள்ளனர்.
கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக
அமல்படுத்த வலியுறுத்தியும், தனியார் பள்ளிகளில் நடைபெறும்
கட்டணக் கொள்ளையை தடுத்க வலியுறுத்தியும் மாநில
முழுவதும் ஜூன் 11 ல் கல்வி
அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக இந்திய மாணவர் சங்கம்
அறிவித்துள்ளது.
மதுரையில்
இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர்
ஜெயக்கொடி தலைமையில் நடந்தது. சட்ட செயலாளர் வெங்கடேசன்,
தலைமையாசிரியர்கள் கிறிஸ்டோபர் ஜெயசீலன், நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எம்.எட். படிப்பு
தொடங்குவதற்காக தேசிய ஆசிரியர் கல்வி
கவுன்சிலில் (என்.சி.டி.இ.) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் போலியானது என்ற சர்ச்சை கிளம்பியதைத்
தொடர்ந்து, அது குறித்த செய்தி
தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது. இதைத்
தொடர்ந்து, தற்போது எம்.எட்.
படிப்பு குறித்த பிரமாணப் பத்திர
தகவல் இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
அரசு
பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் வெற்றி இலக்கை
எட்டும் வகையில் ஆலோசனை வழங்க, வரும் 16ம் தேதி முதல்'நடமாடும் ஆலோசனை
மையம்' உடுமலையில் செயல்படதுவங்குகிறது. பள்ளி மாணவர்களின் குடும்ப
சூழ்நிலை, அவர்களை சுற்றியுள்ள சமூகப் பிரச்னைகள், மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்குமான இடைவெளி ஆகியவற்றால், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதன் வெளிப்பாடு சமூகத்தின் மீதும், பள்ளியின் மீதும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.
அரசு
உதவிபெறும் பள்ளிகள், மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் வழங்குதல்
தொடர்பாக, மறைமுக கட்டாய கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரும் நிலையில்,
சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
அளிக்கலாம்" என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
இலவச
கல்வி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கட்டணம் செலுத்தாத
குழந்தைகளை, பிரித்து பார்த்தல், தரையில் அமரவைத்தல், வகுப்பறைக்கு வெளியே
நிற்க வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும், மெட்ரிக் பள்ளிகள் மீது,
நடவடிக்கை எடுக்கப்படும்' என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான முதல்நிலை
தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 9 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் எழுத வரவில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களை பங்கேற்க
செய்யும் வகையில், புதிய கல்வி முறை அமைந்துள்ளதால், பள்ளிகள் தோறும்
"சூழல் கிளப்"புகளை உருவாக்க வேண்டும்" என, மாவட்ட கல்வி அதிகாரி
அறிவுறுத்தியுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரும்
கல்வியாண்டு முதல் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வெழுத வேண்டும்
என்ற அறிவிப்புக்கு,'தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்
நலச்சங்கங்கள்' வரவேற்பு தெரிவித்துள்ளன.
விளையாட்டுக்கென, பள்ளிக்கல்வி துறை சார்பில்,
தனியாக நிதி ஒதுக்கப்படாததால், பள்ளிகள் சார்பில் மாணவர்களின் பங்கேற்பு
குறைவாக இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை மூலம், விளையாட்டு,
இளம்செஞ்சுருள் சங்கம், சாரணர், சாரணீயர் இயக்கம் உட்பட பல்வேறு
பிரிவுகளுக்கு சேர்த்து, பள்ளிகளுக்கு குறிப்பிட்ட தொகை அனுப்பப்படுகிறது.
இதில் விளையாட்டுக்கு இவ்வளவு தொகை என, தனியாக குறிப்பிடுவதில்லை.
1.தமிழகத்தில்
எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை
நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக்
கண்டால் உடனே RED Society...யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள்.
அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
'ரமணா’ கதாபாத்திர திருச்சி பேராசிரியர் ஜான்குமார் ஓய்வுபெற்றார்: சமூக வலைதளங்களில் அழுது புரண்ட அபிமானிகள்...!