Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'ரமணா’ கதாபாத்திர திருச்சி பேராசிரியர் ஜான்குமார் ஓய்வுபெற்றார்!

     'ரமணா’ கதாபாத்திர திருச்சி பேராசிரியர் ஜான்குமார் ஓய்வுபெற்றார்: சமூக வலைதளங்களில் அழுது புரண்ட அபிமானிகள்...!

மின் இணைப்பு நடைமுறைகள் அறிவோம் - தி இந்து

#தற்காலிகமாக மின் இணைப்பு பெற முடியுமா?

        பொது இடங்களிலோ, மின் இணைப்பு இல்லாத தனியார் இடங்களிலோ நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்தும்போதும், கட்டிடங்களுக்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும்போதும் மின்சாரம் தேவை எனில் தற்காலிக இணைப்பு பெறமுடியும். இதற்கு சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரியை தொடர்புகொள்ளலாம்.

வீடு, வணிக மின் இணைப்பு பெற விண்ணப்ப வழி முறை

       வீடு அல்லது வணிக மின் இணைப்புக்கு விண்ணப்பப் படிவம் 1ல் விண்ணப்பிக்கவும்.

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

முன் பின் தெரியாதவர் ஆலோசனையை கேட்க வேண்டாம்: பொறியியல் சேர்க்கை செயலர் வேண்டுகோள்

 
     பொறியியல் கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் முன் பின் தெரியாதவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டாம் என, பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் பேசினார்.

புதிய அரசாணை டெட் தேர்வில் மதிப்பெண் தளர்வால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்பா?


                   2013 ஆகஸ்ட் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் புதிய ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பொருட்டு டெட் தேர்வு நடைபெற்றது. இதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 27000 பேர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பிப்ரவரியில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்த்த வேலையில் முதலமைச்சர் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு அறிவித்தார். அப்போது கூடுதலாக 45000 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்.

முதுநிலை ஆசிரியர் நியமனம் கால தாமதம்காலி இடங்களை உடனடியாக நிரப்பக் கோரிக்கை...


           அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கு, முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நிறைவுற்று, 3,000-க்கும் மேற் பட்டோருக்கு 2013 ஜனவரி மாதம் நியமன ஆணை வழங்கப்பட்டது.
 

உபரி பணியிட மாறுதல்களை கைவிட வலியுறுத்தி ஜூன் 12-ல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

      உபரி பணியிட மாறுதல்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்


         தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.
 

மாணவரை கண்டித்த ஆசிரியர் மீது, மாணவியரை ஆபாச படம் பிடித்ததாக வீண்பழி! போலீஸ் விசாரணை!!

      வேப்பங்கொட்டையை மாணவி மீது வீசிய, எட்டாம் வகுப்பு மாணவனை கண்டித்ததே, மாணவியரை ஆபாச படம் பிடித்ததாக, ஆசிரியர் மீது, வீண்பழி சுமத்தியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

பி.இ., 'ரேங்க்' பட்டியலுக்கு முன் பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவு

         வரும், 16ம் தேதி, பி.இ., 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கு, மூன்று நாளுக்கு முன், பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.
 

TNPSC: II PHASE Results for the POSTS INCLUDED IN GROUP-IV SERVICES, 2013-2014

         List of Register Numbers of candidates who have been admitted provisionally for the Certificate Verification and Counselling (II Phase)
 

10/6/14 அன்று.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது

         10/6/14 அன்று.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
 

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை: விரைவில் அமல்?

           வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இனி, ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆறு நாள் வேலை, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும், விரைவில் அமலாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

How to Sorting Detials in Excel? - Tutorial

How to Sorting Detials in Excel WorkSheet? - Tutorial

How to Get Subject wise TET New Weightage Details in Excel?

      TET Weightage Spread Sheet ல் உள்ள விவரங்களை பாட வாரியாக, இன வாரியாக, சாதி வாரியாக, டெட் வெயிட்டேஜ் வாரியாக எவ்வாறு பிரித்தறிவது?

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொந்தப்பணத்திலிருந்து வழங்கினார்




                பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. கி. வீரமணி அவர்கள் தான் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு தனது சொந்தப்பணத்திலிருந்து ரூ.5000 முதல் ரூ.1000 வரை ஊக்கத்தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறார்.

SSLC கணித பாடத்தில் குறைந்த தேர்ச்சி விசாரிக்க அலுவலர்களுக்கு உத்தரவு.

          எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், கணித பாடத்தில், 100 சதவீத தேர்ச்சி குறைந்தது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்விசாரணை செய்ய, மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

டி.டி.எட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டம்.

           தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (டிடிஎட்) எழுத, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்காத தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வுஎழுத விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
 

நடப்பு கல்வியாண்டு காலண்டர் வெளியீடு; 123 நாள் லீவு; மாணவர்களுக்கு"லக்'

       கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களுக்கு மொத்தம் 123 நாட்கள் விடுமுறை கிடைக்கும். கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டன. புதிய கல்வியாண்டு உதயமாகியுள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை 2014-15ம் கல்வியாண்டுக்கான காலண்டர் தயாரித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம்: இந்த ஆண்டு ஆள்குறைப்பு இல்லை

      அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் இந்த ஆண்டு ஆள்குறைப்பு செய்யப்படாது என அந்தத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 385 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கர்நாடகத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்பு: சான்றிதழை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

       கர்நாடகத்தில் 2008-09 ஆம் ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்த மாணவர்களின் சான்றிதழை பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சுமியா, சரண்யா, ஜெகதீஸ்வரி உள்பட 10 பேர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

அழைப்பு கடிதம் இல்லாவிட்டாலும் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கலாம்

          காஞ்சிபுரம்: ''அழைப்பு கடிதம் இல்லாவிட்டாலும், பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்,'' என, அண்ணா பல்கலையின் சேர்க்கை பிரிவு இயக்குனர் நாகராஜன் பேசினார்.

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை

      ஆரம்ப கல்வி முதல் +2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

பி.எப்., வட்டி9 சதவீதம்

        கடந்த நிதியாண்டில், 8.75 சதவீதமாக வழங்கப்பட்ட, பி.எப்., வட்டி வீதம், நடப்பு நிதியாண்டில், 9 சதவீதமாக வழங்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

சீருடை அணிந்திருந்தால் மாணவர்களுக்கு அனுமதி: அரசு பஸ்சில் சலுகை

          பழைய பஸ் 'பாஸ்' இல்லாத மாணவர்கள் சீருடை அணிந்திருந்தால், அரசு டவுன் பஸ்சில் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு வாரம்: பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை

          பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'அனைத்து வகை பள்ளிகளிலும், மழைநீர் சேகரிப்பு வாரம் கொண்டாட வேண்டும்' என, முதல்வர், உத்தரவிட்டுள்ளார். 
 

மாணவியரின் தற்கொலை எண்ணம் தடுக்க 'மொபைல் வேன் கவுன்சிலிங்': பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

           பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவியர் பலர், தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்துள்ள கல்வித்துறை, 'மொபைல் வேன் கவுன்சிலிங்' திட்டத்தை முழுமையாகப்பயன்படுத்த பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியீடு தாமதம்

         பிளஸ் 1 வகுப்பு, வரும் 16ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், தரம் உயர்த்தப்பட உள்ள, மேல்நிலை பள்ளிகளின் பட்டியல் குறித்த, அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாததால், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இலவச நோட்டு, புத்தகம் வினியோகம்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'


          சிவகங்கையில், இலவச நோட்டு, புத்தகம் வினியோகம் தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார்.

டிரான்ஸ்பரை தவிர்க்க லஞ்சம்: பள்ளி ஆசிரியை தற்கொலை

         நெல்லையில் டிரான்ஸ்பருக்கு லஞ்சம் கேட்டதாக, ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கும் முடிவு: எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு


     தமிழ் மொழி பாடத்தை, 10ம் வகுப்புக்கு கட்டாயமாக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, விசாரணையை, வரும், 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive