நெல்லையில் டிரான்ஸ்பருக்கு லஞ்சம் கேட்டதாக, ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
Half Yearly Exam 2024
Latest Updates
தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கும் முடிவு: எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழ்
மொழி பாடத்தை, 10ம் வகுப்புக்கு கட்டாயமாக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின்
இயக்குனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்
தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, விசாரணையை,
வரும், 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கோவை பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு 'பிடிவாரன்ட்'
கோர்ட்
அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத, கோவை பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு
அலுவலருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, ஆஜர்படுத்த, மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கல்வித்துறை அதிரடி ! : சிறப்பு வகுப்பைக் கண்காணிக்க குழு அமைப்பு
கடலூர்:
மாவட்டத்தில் உள்ள 209 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்
தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை சிறப்பு குழு
நியமித்துள்ளது.
Initial தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initial) தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
மழை நீர் சேகரிப்பு கண்காட்சிகள் நடத்தி கொண்டாட பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு
09.06.2014 முதல் 13.06.2014 வரை மழை நீர் சேகரிப்பு வாரத்தினை பள்ளிகளில் கட்டுரை, ஓவியம் போட்டி மற்றும் கண்காட்சிகள் நடத்தி கொண்டாட பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு
சாதனை மாணவிகளை உருவாக்கும் அரசுப் பள்ளிகளின் முயற்சிகள் தொடரட்டும்!
‘குடிசையில் வாழ்க்கை… கோபுரத்தில் மதிப்பெண்’
என்ற தலைப்பில் கடந்த இதழில் வெளியான கட்டுரையில், பன்னிரண்டாம் வகுப்புப்
பொதுத்தேர்வில் 1,139 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவி இசைவேணியைச்
சந்தித்திருப்பீர்கள்.
”11-ம் வகுப்புக்கு தனியார் ஸ்கூல்லதான்
சேருவேன்னு அடம்பிடிச்சேன். வசதி இல்லாத காரணத்தால அரசாங்க
பள்ளிக்கூடம்தான் வாய்ச்சது. ‘ம்… அரசாங்க பள்ளிக்கூடத்துல நல்லா
சொல்லித்தர மாட்டாங்களே’ங்கற நினைப் போடதான் ஸ்கூல்ல கால் வெச்சேன். ஆனா,
அடுத் தடுத்த நாட்கள்ல, அந்த நினைப்பு நொறுங்கிடுச்சி. அங்க இருந்த
ஆசிரியர்கள் எல்லாரும், பெற்றோர்கள் மாதிரியே அக்கறை காட்டினது… நெகிழ
வெச்சிடுச்சி’’ என்று அதில் சொல்லியிருந்தார் இசைவேணி.
விடைத்தாள் நகல்கள் மாற்றி மாற்றி வெளியீடு: பிளஸ் 2 மாணவர்கள் அதிர்ச்சி
பிளஸ்
2 மாணவர்களுக்கு, இணையதளம் வழியாக, விடைத்தாள் நகல் அளிப்பதில், பெரும்
குளறுபடி ஏற்பட்டுள்ளது. உரிய மாணவரின் விடைத்தாள் நகலுக்குப் பதில், வேறு
மாணவர்களின் நகல், இணையதளத்தில் வெளியிடப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
ஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?
உலகிலேயே
மிகப் பெரிய சொத்து, மனித வளம். ஒவ்வொரு நாட்டின் மிகப் பெரிய பலம், அதன்
அறிவார்ந்த சமுதாயம்தான். இந்த அறிவார்ந்த சமுதாயத்தின் அடித்தளம்,
பள்ளிக்கூடங்கள்தான் என்பது அனைவருமே அறிந்த விஷயம்தான். ஆனால்,
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் கல்வி நிலவரம் கவலைக்கிடமான நிலையில்
இருப்பதையும் இதற்குப் புத்துயிர் அளிப்பதற்கான முனைப்பான செயல்திட்டங்கள்
மேற்கொள்ளப்படாததையும், பள்ளிக் கல்வித் துறை சார்ந்தவர்கள், முழுமையாக
உணர்ந்ததாகத் தெரியவில்லை.
அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி தொடங்க கோரிக்கை
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில்
எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கினால் மட்டுமே மாணவர் எண்ணிக்கையை
அதிகப்படுத்த முடியும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு சார்பில் புத்தகம், நோட்டு, உணவு, சீருடை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றஅறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு
ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவோர்எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது.பாடவாரியாக
உள்ள காலிப்பணியிடங்கள்விவரம் கேட்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.ஆசிரியர்
காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றஅறிவிப்பு வருகிற சட்டசபை
கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிப்பு
ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவோர் எண்ணிக்கை
அதிகரிக்க உள்ளது. பாடவாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் கேட்கப்பட்டு
வந்து கொண்டிருக்கிறது.
ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74
ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க
ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த தேர்வில் 74 ஆயிரத் துக்கும்
மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரி யர்களும் தேர்ச்சி
பெற்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு
செல்லும். 7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக்
கொள்ளலாம்.
புதிய வெயிட்டேஜ் உத்தரவால் 58000 பேருக்கு வேலை இல்லை : அதிர்ச்சியில் ஆசிரியர் தேர்வர்கள்
டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய
வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை
கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணை வெளியீடு:
2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணை வெளியீடு: 210 நாட்கள் வேலை நாட்கள் அறிவிப்பு
இனியுமா பொதி சுமப்பது?
சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு
புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும்கூட மாணவர்கள் இன்னமும்
பெரிய மூட்டையை முதுகில் சுமந்து செல்கிறார்கள். இதற்குக் காரணம்,
புத்தகங்கள் சில தொகுப்பாக மாற்றப்பட்டாலும், நோட்டுப் புத்தகங்களின்
எண்ணிக்கை ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தது 15ஆக இருக்கிறது. ஆகவே
மாணவர்களின் முதுகுச் சுமை இன்னும் குறையவில்லை.
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகளுக்கான 'சோதனை: 16ல் இருந்து 26 ஆக அதிகரிப்பு
பத்தாம் வகுப்பில் செய்முறை தேர்வுகளுக்கான
'சோதனைகள்' (எக்ஸ்பிரிமிண்ட்) இந்தாண்டு 16ல் இருந்து 26 ஆக
அதிகரிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், இயற்பியல்,
வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத் தேர்வுகளுக்கு, எழுத்துத்
தேர்விற்கு முன் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும்.
1800 அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் தொய்வு
தமிழகத்தில்
2015ம் ஆண்டுக்குள் 1800 அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் என்ற
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இலக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் 'சர்பிளஸ்': அச்சத்தில் ஆசிரியர்கள்!
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை
குறைந்து வருவதால், 'சர்பிளஸ்' ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்
அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.அரசு விதிப்படி, ஆசிரியர், மாணவர் விகிதம்
தொடக்கப்பள்ளியில் 1:30, உயர்நிலை பள்ளியில் 1:35, 9 மற்றும் பத்தாம்
வகுப்புகளில் 1:40 என இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான
அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. மாறாக, ஆசிரியர்கள்
எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
IGNOU B.Ed & MEd Programme
IGNOU B.Ed Programme- January 2015 session
Eligibility -B.Ed with 55%
Duration - 2 years
மாறுதல் மற்றும் கலந்தாய்வு குறித்து முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை வரும் வரை அது பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம்; தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் செ.மு
ஆசிரியர் பணியிட நிரவல் தற்போது இல்லை? ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஜூன் 5 முதல் 10 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்
மாறுதல் மற்றும் கலந்தாய்வு குறித்து முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை வரும் வரை அது பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம்; தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் செ.மு
மாறுதல் மற்றும் கலந்தாய்வு குறித்து முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை வரும் வரை அது பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம்; தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் செ.மு
SSLC சிறப்பு துணைத் தேர்வு (தட்கல்) விண்ணப்பிக்க அழைப்பு
இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்பு துணைத் தேர்வு, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
பள்ளி வேலை நாட்கள் விவரம்: (1 Page)
2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான தொடக்க நடுநிலைப் பள்ளிகள் வேலை நாட்கள் விவரம்: (1 Page)
PG TRB Cases Listed From Today!
முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் இன்றிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் இடம்பெறுகின்றன.
யார் மீதாவது கோபமா ?
யார் மீதாவது கோபம் வந்தால் ஆபிரகாம் லிங்கன் அவருடைய பெயருக்குக்
கோபமாக ஒரு கடிதம் எழுதுவாராம். தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் கொட்டி, எல்லா
வசவுச் சொற்களையும் போட்டு அந்தக் கடிதத்தை எழுதி முடிப்பாராம்.
கோபமெல்லாம் எழுத்தில் வெளிப்பட்டுக் கரைந்தவுடன், அந்தக் கடிதத்தை எடுத்து
அப்படியே தனியே வைத்துவிடுவாராம். இத்தகைய கடிதங்களில் அவர் எப்போதும்
கையெழுத்திட்டதும் இல்லை, யாருக்கு எழுதினாரோ அவருக்கு அனுப்பியதும் இல்லை.