Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET - 15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு பட்டியல் இருபது நாளில் வெளியிட திட்டம்

          ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிட்டதை அடுத்து, 72 ஆயிரம் பேரில், தகுதியான, 15 ஆயிரம் பேர் தேர்வுப் பட்டியல், 20 நாளில் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்றிரவு தெரிவித்தது.


TNTET - 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’

         ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண் உயர் நீதிமன்ற உத்தரவால் அதிரடி மாற்றம் உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8- வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும்.

TNTET NEW WEIGHTAGE GO NOW PUBLISHED.

        School Education - Recruitment of Secondary Grade Teachers and Graduate Assistants in Government schools - Revised criteria for sele ction of candidates for appointment to the post of Secondary Grade Teachers and Graduate Assistants in Government schools from among those who have cleared Tamil Nadu Teacher Eligibility Test - Orders - Issued


        புதிய முறைப்படி weightage மதிப்பெண் கணக்கிடும்போது பலர் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பின் வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: 65 ஆயிரம் மாணவர்கள் பதிவிறக்கம்

         
           பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 79,953 மாணவர்களும், மறுகூட்டல் கோரி 3,346 மாணவர்களும் விண்ணப்பித்தனர். பிளஸ் 2 விடைத்தாள் நகலை முதல் நாளான புதன்கிழமை 65 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர்.

495 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை: அண்ணா பல்கலை அறிவிப்பு

       கடந்த, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 495 பொறியியல் கல்லூரிகளில் நடந்த பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின் அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்று: பிழை சரிபார்க்க உத்தரவு

        எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து, பிழைகளற்ற வகையில் வினியோகிக்க, தேர்வுத்துறை அவகாசம் அளித்துள்ளது. 
 

நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு

         நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது.

சுகாதாரமற்ற தின்பண்டங்களை பள்ளி கேன்டீன்களில் விற்க தடை?

       உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்களை, பள்ளி கேன்டீன்களில் விற்பனை செய்வதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

அங்கன்வாடியில் ஊழியர் பற்றாக்குறை; மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பு

         அங்கன்வாடி மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களால், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை குறையக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

ஏழை குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீடு மறுக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து : ஐகோர்ட்டில் வழக்கு

         மதுரையை சேர்ந்த ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், ஏழை மக்களின் குழந்தைகளுக்கு துவக்க நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். 
 

மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவிதொகை சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்

           மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விரைவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அப்துல்ரஹிம் உத்தரவிட்டுள்ளார்.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட திட்ட பணிகள் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச் சர் அப்துல்ரஹிம் தலைமையில் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் அமைச் சர் அப்துல்ரஹிம் பேசியதாவது:பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்கள், கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகளின் ரேங்க் பட்டியல் தேர்வுத்துறை வெளியீடு

      நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது சென்னை மாவட்டத்தில் எத்தனை பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன என்ற ரேங்க் பட்டியலை தேர்வுத் துறை தயாரித்தது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 163 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. மேலும், நிர்வாக வாரியாக பள்ளிகள் பெற்றுள்ள சதவீதப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெறாத 36 'ஏ' பள்ளி குழந்தைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவு

         சென்னையில் உள்ள செட்டிநாடு அறக்கட்டளை நடத்திய 36 "ஏ' பள்ளி மாணவர்களை அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சிபிஎஸ்இ பாடப்பிரிவு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை

       5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்: ஒரு தனியார் கல்லூரியில் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை

         சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.

பி.எஃப். வரம்பு: புதிய அறிவிப்பு

            தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) நிறுவனங்களின் பங்களிப்பை குறைந்தபட்சமாக நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதிகாரிகள் தவறால் பணி நிரந்தரம் மறுப்பு: பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்

         அதிகாரிகள் தவறால் பணி நிரந்தரம் மறுக்கப்பட்டதாக தொழில்கல்வி ஆசிரியர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

School Calander (2014-2015)

         பள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு, தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்

Plus 2 Answer Sheet Xerox Copy Download From Today!

 

Click Here For Download Your Xerox Copy

         பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், மாணவர்கள் இன்று (ஜூன் 4) முதல் பதிவிறக்கம் செய்யலாம்,' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.


TNPSC VAO முழுமையான மாதிரி தேர்வு

TNPSC VAO முழுமையான மாதிரி தேர்வு  ( விடைகளுடன் )
தமிழ் - 80 வினாக்கள், திறனறி - 20 வினாக்கள், பொது அறிவு - 75 வினாக்கள், கிராம நிர்வாகம் - 25 வினாக்கள் உள்ளது.

”பணிநிரவல்” குறித்து தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்.

         உபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் : ஆசிரியர்கள், தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்; கல்வித்துறை வட்டாரம்


652 கணினி ஆசி்ரியர்கள் கவலைக்கிடம்!


 652 கணினி ஆசி்ரியர்களின் கவலைக்கிடம்.
             மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்,  நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டநாளிலிருந்துமிகுந்த வேதனையில் உள்ளோம்எங்கள் குடும்பம்மனைவிபிள்ளைகள் அணைவரும் மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம்
         நாங்கள் கடந்த 1998 முதல் அரசுபள்ளிகளில் கணினி ஆசிரியராக மாதம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கிகொண்டு வேலை செய்தோம்.  அவர்கள் 14 வருடம் அரசு பள்ளிகளில் அவர்களுடைய உழைப்பையும், அவர்களுடைய இளமை அறிவையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவழித்து விட்டோம்

அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உத்தரவு

           அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 என்பதில் இருந்து மாற்றி பிற மாநிலங்களில் உள்ளது போல் 60 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
 

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்களின் விவரம் வெப்சைட்டில் பதிய உத்தரவு.

           அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர் பெயர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
 

உபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் :ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி

               அரசு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை, 'டிரான்ஸ்பர்' செய்ய, கல்வித்துறை எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக, ஆசிரியர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

ஒரே நாளில் 'குரூப் - 2' மற்றும் வங்கி தேர்வு

         வரும் 29ம் தேதி, தமிழக அரசின், 'குரூப் -2' தேர்வும், பாரத ஸ்டேட் வங்கியின்புரபஷனரி அலுவலர் தேர்வும் நடப்பதால், இத்தேர்வுகளுக்குவிண்ணப்பித்தவர்கள் தவித்துவருகின்றனர்.
 

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு.

           பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், மாணவர்கள் இன்று (ஜூன் 4) முதல் பதிவிறக்கம் செய்யலாம்,' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
 

அங்கன்வாடி குட்டீஸ்களுக்கு இலவச ஆங்கிலப்பயிற்சி.

             உடுமலை அருகே கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளியை புறக்கணிப்பதை தடுக்க, அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு இலவச ஆங்கில பயிற்சியளித்தல் என்ற புதிய நடைமுறையை பள்ளி நிர்வாகத்தினர் செயல்படுத்த துவங்கியுள்ளனர்.
 

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: விண்ணப்பிக்க காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு

              தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை அறிவித்துள்ளார்.

ஜூன் 30-க்குள் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம்: பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

        அனைத்துப் பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஜூன் 30-க்குள் ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சம்பளம் இல்லை: பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் புலம்பல்

           தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக கோடை விடுமுறையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.
 

சூளகிரி அருகே 1ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மரியாதை

                                            

         சூளகிரி அருகே 1ம் வகுப்பில் சேர்ந்தமாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சூளகிரி அருகே சென்னப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசினர் தொடக்கப்பள்ளியில் நேற்று 1ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடந்தது.

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க

          அங்கன் வாடி பள்ளிகள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் வர வேண்டும்அங்கன் வாடி பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தத்கல் திட்டத்தின் கீழ் 6,7 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

           பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், வரும், 6,7ம் தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்யலாம். தேர்வுத்துறை அறிவிப்பு:
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive