" தேசிய கீதம் - பொருள் "
ஜன கண மன அதிநாயக ஜய ஹே -
'பிளஸ் 2 முடித்து, உயர் கல்வி பயில விரும்புவோர், உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்' என, இந்திய அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உத்திப்பிரதேசம்
மாநிலம் லக்னோவில் நிரந்தர வேலை வாய்ப்பு
கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர் இதனால்
அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர் சிறப்பு பஸ் திட்டத்தில் இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் பஸ் இயக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதன் காரணமாக தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்டசிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள் ளது.
பள்ளிக்கல்வி
- அரசு / நகராட்சி உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் 01.08.2013 அன்றைய
நிலவரப்படி ஆசிரியர் பணி நிர்ணயம் செய்யப்படவுள்ளது, உபரி ஆசிரியர்களை பணி
நிரவல் செய்ய ஏதுவாக விவரம் கோரி இயக்குநர் உத்தரவு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒன்றன்பின் ஒன்றாகவெளிவந்து
கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது அரசுப்
பள்ளிகளின் எண்ணிக்கையும் மாணவர் சேர்க்கையும்குறைந்து கொண்டே வருவதும்
சி.பி.எஸ்.இ. முறையிலான தனியார்பள்ளிகளின் எண்ணிக்கை மேலதிகமாக அதிகரித்து
வருவதும்தெரியவருகிறது. பெருவாரியான அரசுப் பள்ளி ஆசிரியர்களும், அரசு
ஊழியர்களும் தங்கள்குழந்தைகளை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலான தனியார்
பள்ளிகளுக்கும்,
சமச்சீர் கல்வி அடிப்படையிலான தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும்
அனுப்புவதிலிருந்தே கல்வியின் தரம் எத்தகையது என்பது வெளிப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மேலும் 360 புதிய அம்மா உணவகங்களை திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மெட்ரிக்குலேஷன்,
சி.பி.எஸ்.இ போன்ற பாடத் திட்டங்கள் மூலமாகப் படிக்கும் மாணவர்களுக்கே
சவாலாக இருக்கக் கூடியது... 'ஐ.ஐ.டி' என்று சொல்லப்படும், 'இந்தியன்
இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக
நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ மெயின்). நாடு முழுக்க,
பலவிதமான தயாரிப்புகளுடன், பலதரப்பட்ட ஆதரவுகளுடன், வசதியான
பள்ளிகளில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் இந்தக் கடினமான
களத்தில் தேறுபவர்கள் ஒரு சிலரே.
வங்கித் துறையில் பெயர் சொன்னாலே ஒவ்வொரு இந்தியரும் அறியும் மிக
முக்கியமான வங்கி பாரத ஸ்டேட் வங்கிதான். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு
முன்னரே துவங்கப்பட்ட இந்த வங்கி பின் நாட்களில் இம்பீரியல் வங்கி என்ற
பெயர்பெற்றது.
தமிழகத்தில்
நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில்
சேர மொத்தம் 27,876 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடலூர்
மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, உயர் தொடக்க
நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த
அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.
பீகார்
மாநிலத்தில் மொத்தம் உள்ள 73,000 ஆரம்ப பள்ளிகளில் 60,000 பள்ளிகளுக்கு என
தனியாக தலைமையாசிரியர்கள் இல்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.இதில்
பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் என தெரியவந்துள்ளது.அதாவது
80 சதவீத ஆரம்பபள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் கிடையாது என்ற நிலை பீகாரில்
உள்ளது.
பிளஸ்
2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, குறித்த காலத்தில் விண்ணப்பிக்க தவறிய
தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளையும், நாளை மறுநாளும்
விண்ணப்பிக்கலாம்.
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமை ஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,போதுமான ஆங்கில அறிவு இல்லாத ஆசிரியர்கள் மீது, ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
படிப்பு மட்டுமல்ல... பாதுகாப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒன்றல்ல... இரண்டல்ல... கிட்டத்தட்ட 45
நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறையை குதூகலமாக கழித்து விட்டு இன்று
மாணவர்கள் பள்ளிக்கு செல்ல உள்ளனர். விளை யாட்டு, சுற்றுலா, பார்க், சினிமா
என்று பெற்றோருடன் உற்சாகமாக கழித்த இந்த நாட்கள் மீண்டும் கிடைக்க 10
மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள்
அலைமோதுகின்றனர். இதனால், பழைய புத்தகங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், கடந்த 23ம் தேதி வெளியானது.
90.70 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ் மற்றும்
மாற்றுச்சான்றிதழ் ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் நிலையில்,
பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், 25 சதவீத பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கே
வரவில்லை. இந்த வாகனங்களை இயக்க தடை விதிப்பதுடன், அடுத்த கட்ட
நடவடிக்கையிலும், போக்குவரத்துத் துறை இறங்கியுள்ளது.
கல்வியே அழியாத செல்வம் என்பது தமிழில் ஒரு
புகழ்பெற்ற முதுமொழி. ஆனால், நவீன காலத்தில், அந்த கல்வி செல்வத்தை அடைய,
நிறைய செல்வத்தை நாம் இழக்க வேண்டியுள்ளது. வசதியான வாழ்வுக்கும், நல்ல பணி
வாய்ப்பை பெறுவதற்கும், தரமான உயர்கல்வி என்பது மிகவும் முக்கியம். ஆனால்,
அதைப் பெறுவதற்கு ஒருவர் அதிகம் செலவு செய்ய வேண்டுமென்பதால், வங்கிக்
கடனை நோக்கி பலரும் செல்கின்றனர்.
கோடை விடுமுறையை அனுபவிக்காத, என்.சி.எல்.பி., குழந்தைகளுக்கு, இன்று(ஜுன் 2) வகுப்புகள் துவங்கப்படுகிறது.
தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர, பல்கலை மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) இணையதளத்தில் 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
படிப்புக்கு
வயது தடையில்லை என்பதை ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் நிரூபித்து
இருக்கிறார். அவரது பெயர் ராஜமாணிக்கம். திருச்செங்கோட்டை அடுத்த
வேலக்கவுண்டம்பட்டி அருகே உள்ள ஏழுர் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர்
திண்ணைப் பள்ளியில் ஆசிரியராக பணியை தொடங்கி பின்னர் இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியராகவும், சேலம், நாமக்கல், தர்மபுரி, தஞ்சை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றார். என்.சி.சி. கமாண்டராகவும் பணியாற்றி இருக்கிறார்.
தமிழக சட்டப் பேரவை ஜூலை 10-ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.""தமிழக
சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை ஜூலை 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு
பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்'' என்று பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.
ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். துறை வாரியான செலவினங்களுக்காக பேரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
கோடை
விடுமுறைக்கு பிறகு இன்று அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்
இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில்
மாணவர்களுக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு முடிந்து மே 1ம் தேதி முதல்
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஜூன் 2ம் தேதி
பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, வெயில்
காரணமாக பள்ளி திறப்பதை தள்ளிப் போட வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப்பள்ளிகளின் மூலம் கட்டணமின்றி தரமான கல்வியைத் தங்களது குழந்தை களுக்கு வழங்கக் கோருவது
பெற்றோரின் உரிமை; அடிப் படை வசதிகள் உள்ளிட்ட வற்றை உறுதிப்படுத்தி
பொதுப் பள்ளிகளை வலுப்படுத்துவது அரசின் கடமை.” இந்த முழக்கங்களோடு அரசு
மற்றும் மாநகராட்சிப் பள்ளிக ளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான
மாநிலந் தழுவிய பிரச்சார இயக்கம் ஞாயிறன்று சென்னையில்
தொடங்கியது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மேற் கொள்ளப்பட்டுள்ள
இந்தப் பிரச்சாரத்தை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள்
துணைவேந்தர் முனைவர் வே. வசந்தி தேவி முரசறைந்து தொடங்கி வைத் தார்.
பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு, தனியார் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும்,
பாடல்கள் ஒலிபரப்பவதையும் தடுக்க, கலெக்டர் விவேகானந்தன்,
போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சி,
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தென்சென்னை மாவட்டக் குழு ஞாயிற்றுகிழமை தொடங்குகிறது.
அண்மைக்காலத்தில்,
மத்திய நிதி அமைச்சகம் மற்றும்
நீதிமன்றங்களின் தலையீடுகள், ஆணைகள் மற்றும் ரிசர்வ்
வங்கியின் வழிமுறைகள் ஆகிய தொடர் நடவடிக்கைகள்
தகுதியுள்ள மாணவர்கள் பலர் தங்கள் உயர்
கல்வியை தொடர தேவையான கடன்
வசதிகளை வங்கிகளிடமிருந்து பெறுவதற்கு பெரிதும் உதவியிருக்கின்றன. ஆனால், அந்தக் கடனை
பெற்று உயர் கல்வியை தொடர்வதற்குள்,
மாணவர்கள் படும்பாடு சொல்லி மாளாது என்ற
பரவலான கருத்து நிலவுகிறது.
தமிழ்நாடு
முழுவதும் பள்ளிக்கூடங்கள் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. கோடை விடுமுறை கோடை காலத்தையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டன.
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 200 தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 700 உயர்நிலைப்பள்ளிகளும்,
6 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
சேலம்
மாவட்டத்தில் இலவச பஸ் பாஸ் பெற விரும்பும் மாணவ, மாணவியர் சம்மந்தப்பட்ட
பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாங்கி வருமாறு அரசு
போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அரசு
உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமை
ஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆங்கில புலமை இல்லாத
ஆசிரியர்கள் மீது, ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால், மாணவரின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசின் ஆங்கில
வழித்திட்டம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள்ளது.