Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்! புதிய நியமன முறை குறித்து விரைவில் முடிவு.

          வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதன் காரணமாக தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்டசிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள் ளது.
 

1.1.2014 Promotion Panel (SG to BT Tamil Panel Released)

1.1.2014 Panel

SG to BT Promotion Panel 


01.08.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் பணி நிர்ணயம் / பணி நிரவல்

      பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் 01.08.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் பணி நிர்ணயம் செய்யப்படவுள்ளது, உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய ஏதுவாக விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

 

பிளஸ் 2 தேர்வு முறையில் மாற வேண்டும் அணுகுமுறை!

           பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒன்றன்பின் ஒன்றாகவெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும் மாணவர் சேர்க்கையும்குறைந்து கொண்டே வருவதும் சி.பி.எஸ்.இ. முறையிலான தனியார்பள்ளிகளின் எண்ணிக்கை மேலதிகமாக அதிகரித்து வருவதும்தெரியவருகிறது. பெருவாரியான அரசுப் பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள்குழந்தைகளை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலான தனியார் பள்ளிகளுக்கும், சமச்சீர் கல்வி அடிப்படையிலான தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும்  அனுப்புவதிலிருந்தே கல்வியின் தரம் எத்தகையது என்பது வெளிப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மேலும் 360 புதிய அம்மா உணவகங்கள்

            தமிழகம் முழுவதும் மேலும் 360 புதிய அம்மா உணவகங்களை திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா!

         மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ போன்ற பாடத் திட்டங்கள் மூலமாகப் படிக்கும் மாணவர்களுக்கே சவாலாக இருக்கக் கூடியது... 'ஐ.ஐ.டி' என்று சொல்லப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ மெயின்). நாடு முழுக்க, பலவிதமான தயாரிப்புகளுடன், பலதரப்பட்ட ஆதரவுகளுடன், வசதியான பள்ளிகளில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் இந்தக் கடினமான களத்தில் தேறுபவர்கள் ஒரு சிலரே. 
 

பாரத ஸ்டேட் வங்கியில் 5092 உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

           வங்கித் துறையில் பெயர் சொன்னாலே ஒவ்வொரு இந்தியரும் அறியும் மிக முக்கியமான வங்கி பாரத ஸ்டேட் வங்கிதான். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முன்னரே துவங்கப்பட்ட இந்த வங்கி பின் நாட்களில் இம்பீரியல் வங்கி என்ற பெயர்பெற்றது.
 

2,172 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 27,876 பேர் விண்ணப்பம்

          தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 27,876 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு

       
       கடலூர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, உயர் தொடக்க நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.

தலைமைஆசிரியர்கள் இல்லாத 60ஆயிரம் ஆரம்பபள்ளிகள்

           பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 73,000 ஆரம்ப பள்ளிகளில் 60,000 பள்ளிகளுக்கு என தனியாக தலைமையாசிரியர்கள் இல்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.இதில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் என தெரியவந்துள்ளது.அதாவது 80 சதவீத ஆரம்பபள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் கிடையாது என்ற நிலை பீகாரில் உள்ளது.

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 'தத்கல்' மூலம் விண்ணப்பிக்கலாம்

          பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, குறித்த காலத்தில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்களுக்கு போதுமான ஆங்கில அறிவு இல்லை - ஆங்கில வழி திட்டத்தில் சிக்கல்

       அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமை ஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,போதுமான ஆங்கில அறிவு இல்லாத ஆசிரியர்கள் மீது, ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப போறீங்களா...! முதல்ல இத படிங்க பெற்றோர்களே

படிப்பு மட்டுமல்ல... பாதுகாப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

      ஒன்றல்ல... இரண்டல்ல... கிட்டத்தட்ட 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறையை குதூகலமாக கழித்து விட்டு இன்று மாணவர்கள் பள்ளிக்கு செல்ல உள்ளனர். விளை யாட்டு, சுற்றுலா, பார்க், சினிமா என்று பெற்றோருடன் உற்சாகமாக கழித்த இந்த நாட்கள் மீண்டும் கிடைக்க 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
 

பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதி

            பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அலைமோதுகின்றனர். இதனால், பழைய புத்தகங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், கடந்த 23ம் தேதி வெளியானது. 90.70 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ஆய்வுக்கு வராத 25% பள்ளி வாகனங்கள்

        ஜுன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், 25 சதவீத பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கே வரவில்லை. இந்த வாகனங்களை இயக்க தடை விதிப்பதுடன், அடுத்த கட்ட நடவடிக்கையிலும், போக்குவரத்துத் துறை இறங்கியுள்ளது.

கல்வி செல்வத்தை அடைய கடன் பெறுவது எப்படி?

        கல்வியே அழியாத செல்வம் என்பது தமிழில் ஒரு புகழ்பெற்ற முதுமொழி. ஆனால், நவீன காலத்தில், அந்த கல்வி செல்வத்தை அடைய, நிறைய செல்வத்தை நாம் இழக்க வேண்டியுள்ளது. வசதியான வாழ்வுக்கும், நல்ல பணி வாய்ப்பை பெறுவதற்கும், தரமான உயர்கல்வி என்பது மிகவும் முக்கியம். ஆனால், அதைப் பெறுவதற்கு ஒருவர் அதிகம் செலவு செய்ய வேண்டுமென்பதால், வங்கிக் கடனை நோக்கி பலரும் செல்கின்றனர்.

என்.சி.எல்.பி., குழந்தைகளுக்கு இன்று(ஜுன் 2) வகுப்புகள் துவக்கம்

          கோடை விடுமுறையை அனுபவிக்காத, என்.சி.எல்.பி., குழந்தைகளுக்கு, இன்று(ஜுன் 2) வகுப்புகள் துவங்கப்படுகிறது.

நெட் தேர்வில் மாற்றம் கொண்டுவருதல் தொடர்பான 10 கேள்விகள்

          தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர, பல்கலை மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) இணையதளத்தில் 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

படிப்புக்கு வயது தடையில்லை: 78 வயதில் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்

       படிப்புக்கு வயது தடையில்லை என்பதை ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் நிரூபித்து இருக்கிறார். அவரது பெயர் ராஜமாணிக்கம். திருச்செங்கோட்டை அடுத்த வேலக்கவுண்டம்பட்டி அருகே உள்ள ஏழுர் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர் திண்ணைப் பள்ளியில் ஆசிரியராக பணியை தொடங்கி பின்னர் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராகவும், சேலம், நாமக்கல், தர்மபுரி, தஞ்சை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றார். என்.சி.சி. கமாண்டராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஜூலை 10-இல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்.

        தமிழக சட்டப் பேரவை ஜூலை 10-ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.""தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை ஜூலை 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்'' என்று பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். துறை வாரியான செலவினங்களுக்காக பேரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

          கோடை விடுமுறைக்கு பிறகு இன்று அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு முடிந்து மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, வெயில் காரணமாக பள்ளி திறப்பதை தள்ளிப் போட வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 



வரிப்பணத்தில் இயங்கும் அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கோருவது மக்களின் உரிமை


         

         மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப்பள்ளிகளின் மூலம் கட்டணமின்றி தரமான கல்வியைத் தங்களது குழந்தை களுக்கு வழங்கக் கோருவது பெற்றோரின் உரிமை; அடிப் படை வசதிகள் உள்ளிட்ட வற்றை உறுதிப்படுத்தி பொதுப் பள்ளிகளை வலுப்படுத்துவது அரசின் கடமை.” இந்த முழக்கங்களோடு அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிக ளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான மாநிலந் தழுவிய பிரச்சார இயக்கம் ஞாயிறன்று சென்னையில் தொடங்கியது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மேற் கொள்ளப்பட்டுள்ள இந்தப் பிரச்சாரத்தை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே. வசந்தி தேவி முரசறைந்து தொடங்கி வைத் தார்.

மாணவர் செல்லும் பஸ்சில் பாடல் ஒலிபரப்ப தடை : போக்குவரத்து துறைக்கு தர்மபுரி கலெக்டர் உத்தரவு

        பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு, தனியார் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும்,   பாடல்கள் ஒலிபரப்பவதையும் தடுக்க, கலெக்டர் விவேகானந்தன்,  போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

RTI- NEWS

1.    மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல்  
       விடுப்பை துய்க்கலாமா ? 

2.    தகவல்களை துறை அலுவர்கள் நடைமுறைபடுத்தலாமா ?

3.    தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும் 
       ஏற்புடையதா?

 இதற்கு பெறப்பட்ட தகவல்களை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்போம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பிரச்சாரம்

      மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தென்சென்னை மாவட்டக் குழு ஞாயிற்றுகிழமை தொடங்குகிறது.

கல்விக் கடனின் இரு பக்கங்கள்

                     அண்மைக்காலத்தில், மத்திய நிதி அமைச்சகம் மற்றும் நீதிமன்றங்களின் தலையீடுகள், ஆணைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிமுறைகள் ஆகிய தொடர் நடவடிக்கைகள் தகுதியுள்ள மாணவர்கள் பலர் தங்கள் உயர் கல்வியை தொடர தேவையான கடன் வசதிகளை வங்கிகளிடமிருந்து பெறுவதற்கு பெரிதும் உதவியிருக்கின்றன. ஆனால், அந்தக் கடனை பெற்று உயர் கல்வியை தொடர்வதற்குள், மாணவர்கள் படும்பாடு சொல்லி மாளாது என்ற பரவலான கருத்து நிலவுகிறது.
 

பிளஸ்–1 வகுப்புகள் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்றன: பள்ளிக்கல்வி இயக்குனர்

      தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றனகோடை விடுமுறை கோடை காலத்தையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டன. தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 200 தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 700 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

இலவச பஸ் பாஸ் வினியோகம்: மாணவர்களுக்கு அழைப்பு

       சேலம் மாவட்டத்தில் இலவச பஸ் பாஸ் பெற விரும்பும் மாணவ, மாணவியர் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாங்கி வருமாறு அரசு போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆங்கில வழி வகுப்பு துவங்க நெருக்கடி: புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது திணிப்பு - DINAMALAR


       அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமை ஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆங்கில புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது, ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், மாணவரின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசின் ஆங்கில வழித்திட்டம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு ஏராள எதிர்பார்ப்பு: வழங்குவாரா பிரதமர் மோடி என காத்திருப்பு


         நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள, பா.ஜ.,வின், பிரதமர் நரேந்திர மோடியிடம், நாட்டு மக்கள் பலதரப்பினரும், பல விதமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அவற்றில், சாதாரண நடுத்தர மக்கள் என்ற பிரிவில் வரும், மாத சம்பளதாரர்களின், வருமான வரி எதிர்பார்ப்புகள், சற்று அதிகமாகவே உள்ளன.

இன்று பள்ளி திறப்பு: குழந்தைகளுடன் விடுமுறைக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப முடியாமல் தவிப்பு

       அரசு பஸ்கள் போதிய அளவு இயக்கப்படாததால், கோடை விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்ப முடியாமல் பொது மக்கள் பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏப்ரல் 31ம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து பலர் சொந்த கிராமங்களுக்கு சென்றனர். தற்போது, கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் கோடை விடுமுறையில் வெளியூர்களுக்கு சென்றவர்கள், கடந்த இரண்டு நாட்களாக சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இதற்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 500 சிறப்பு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.

ஊருக்கு ஒரு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி

       மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிப் பேருந்துகள் ஓ(ட்)டத் தகுதியானவைதானா என்று அண்மையில் ஜரூராகச் சோதனை நடைபெற்றது. இதற்காக, அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று ஆய்வு செய்ததாகவும், தகுதியற்ற நிலையில் இருந்த வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது நல்ல விஷயம்தானே என்று தோன்றினாலும், மிகவும் தாமதமான நடவடிக்கையோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive