அரசு
உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமை
ஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆங்கில புலமை இல்லாத
ஆசிரியர்கள் மீது, ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால், மாணவரின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசின் ஆங்கில
வழித்திட்டம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
வருமான வரி செலுத்துவோருக்கு ஏராள எதிர்பார்ப்பு: வழங்குவாரா பிரதமர் மோடி என காத்திருப்பு
நடந்து
முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை
கைப்பற்றியுள்ள, பா.ஜ.,வின், பிரதமர் நரேந்திர மோடியிடம், நாட்டு மக்கள்
பலதரப்பினரும், பல விதமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அவற்றில், சாதாரண
நடுத்தர மக்கள் என்ற பிரிவில் வரும், மாத சம்பளதாரர்களின், வருமான வரி
எதிர்பார்ப்புகள், சற்று அதிகமாகவே உள்ளன.
இன்று பள்ளி திறப்பு: குழந்தைகளுடன் விடுமுறைக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப முடியாமல் தவிப்பு
அரசு
பஸ்கள் போதிய அளவு இயக்கப்படாததால், கோடை விடுமுறை முடிந்து சென்னைக்கு
திரும்ப முடியாமல் பொது மக்கள் பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏப்ரல் 31ம் தேதி பள்ளிகளுக்கு கோடை
விடுமுறை விடப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து பலர் சொந்த
கிராமங்களுக்கு சென்றனர். தற்போது, கோடை விடுமுறை
முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் கோடை
விடுமுறையில் வெளியூர்களுக்கு சென்றவர்கள், கடந்த இரண்டு நாட்களாக
சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இதற்காக தமிழக அரசு போக்குவரத்து
கழகம் சார்பில் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 500 சிறப்பு பஸ்கள்
மட்டுமே இயக்கப்பட்டது.
ஊருக்கு ஒரு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி
மாநிலம்
முழுவதும் உள்ள தனியார் பள்ளிப் பேருந்துகள் ஓ(ட்)டத் தகுதியானவைதானா
என்று அண்மையில் ஜரூராகச் சோதனை நடைபெற்றது. இதற்காக, அந்தந்த வட்டாரப்
போக்குவரத்து அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று
ஆய்வு செய்ததாகவும், தகுதியற்ற நிலையில் இருந்த வாகனங்களின் உரிமங்கள்
ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது நல்ல விஷயம்தானே என்று தோன்றினாலும், மிகவும் தாமதமான நடவடிக்கையோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.
10–ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி
10–ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்-மாவட்ட கலெக்டர்
சிறுகச் சிறுக சேமித்து ஏழைகளின் சிகிச்சைக்கு பணம் அனுப்பும் மாணவன்: ஐந்து வயதில் தொடங்கிய சேவை
பெற்றோருடன் சஞ்சய்குமார்
எத்தனையோ
நல்ல உள்ளங்கள் ஏழைகளின் உயிர் காக்கும் மருத்துவ
சேவைக்காக ஓடோடி வந்து உதவுகின்றனர்.
சஞ்சய்குமாரின் சேவை சற்றே வித்தியாசமானது.
பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பைகள், காலணிகள் விலை கிடு கிடு உயர்வு
பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின்
(ஷூ) விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில்,
இவற்றின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பணி நிரவல் டிரான்ஸ்பர் தயார் பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்கள் கடும் பீதி-Tamilmurasu
தமிழகம் முழுவதும் வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், பணி
நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்களை மாற்றம் செய்ய கல்வி துறை முடிவு
செய்துள்ளது. இதனால், பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்கள் கடும்
பீதியில் உள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும்
கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன.
கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு: சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
தமிழகத்தில்,
கோடை விடுமுறை பின், நாளை (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்படுவதால்,
திருச்சியில், பள்ளிகளை சுத்தப்படுத்தப்படும் பணி தீவிரமாக நடந்து
வருகிறது.
சமச்சீர் கல்விக்கு பதிலாக புதுச்சேரி அரசு பள்ளிகளில் CBSE பாடதிட்டம் அமல்
புதுச்சேரியில்
நடப்பு கல்வியாண்டு முதல் அரசு தொடக்கப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்
அமல்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கிலம்,
தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மற்றும்
காரைக்கால் பிராந்தியங்கள் தமிழக கல்வி வாரியத்துடனும், மாகி கேரள மாநில
கல்வி வாரியம், ஏனாம் ஆந்திரா கல்வி
வாரியத்துடன் இணைந்துள்ளது. புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் வரும்
4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில்
நடப்பு கல்வியாண்டு முதல் ஆங்கில வழி துவக்கப்பள்ளிகளில் அதாவது 1ம்
வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்திற்கு பதிலாக
சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை
பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மொபைல்போன்
பயன்படுத்தக்கூடாது,''என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார்
தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:
மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 5ம் தேதி முதல் இரும்புச்சத்து மாத்திரைகள்
வேலூர்
மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 5ம் தேதி முதல்
இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும்’ என்று முதன்மை கல்வி அலுவலர்
சுப்பிரமணி தெரிவித்தார்.
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு ரத்து
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு ரத்து திருவண்ணாமலையில் கல்வித்துறை நடவடிக்கை
அரசு அலுவலகங்களின் கோப்புகளை அந்நியர்கள் பராமரிக்க அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்
முக்கியம்
மற்றும் ரகசியமானதாகக் கருதப்படும் அரசு அலுவலகங்களின் கோப்புகள் அல்லது
ஆவணங்களை வெளிநபர்கள் அல்லது அந்நியர்கள் பராமரிப்பதற்கு அனுமதிக்கக்
கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏழை இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை: பொன். ராதாகிருஷ்ணன் உறுதி
ஏழை
இந்து மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்குவது குறித்து, 2 மாதத்தில் முடிவு
செய்யப்படும், என்று மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் பொன்.
ராதாகிருஷ்ணன் கூறினார்.
பி.எட், எம்.எட் படிப்பு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை
தனியார்
கல்வியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம்
வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் பி.எட்,
எம்.எட் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகள்
மற்றும் அரசு நிதி உதவிபெறும் கல்லூரி என 102 மையங்களில் தேர்வு நடந்து
வருகிறது. இதில் 15 மையங்களாக பிரிக்கப்பட்டு 8 பேர் கொண்ட குழுவினர்
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வித்தாளில் எந்தவித
குழப்பமும் இல்லை.
சத்துணவு திட்ட காலி பணியிடங்களில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளரை பணியமர்த்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
சமூக
நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்த படுகிறது. தமிழகம் முழுவதும்
மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் உள்ளன. தற்போது 40 ஆயிரம் சத்துணவு
அமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
SSLC Mark Sheet Distribute Date: 12.6.2014
SSLC - மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு: கடும் வெயிலால், தள்ளிவைக்க வலியுறுத்தல்
பள்ளி கல்வித் துறை அறிவிப்புப்படி,
தமிழகம் முழுவதும், நாளை (2ம் தேதி)
பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், 'அக்னி நட்சத்திரம்
முடிந்தும், வெயிலின் கொடுமை நீடிப்பதால், பள்ளி
திறப்பு தேதியை, 10 நாட்களுக்கு, தள்ளிவைக்க வேண்டும்' என, அனைத்து தரப்பினரும்
எதிர்பார்க்கின்றனர். 'பத்தாம் வகுப்பு மாணவர்கள்,
வெயிலால் பாதிக்கக்கூடாது என, பொது தேர்வு
நேரத்தை, ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றிய தமிழக அரசு,
இப்போது, மவுனம் காப்பது ஏன்?'
என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் நாளை உதயமாகும் நிலையில் குழப்பம்
பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால் சிக்கல் நீடிப்பு
நாட்டின், 29வது மாநிலமாக, 'தெலுங்கானா' நாளை உதயமாக உள்ள நிலையில், சீமாந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. கிராமங்கள் இணைப்பு, மின்சாரம், நீர் ஆதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் இன்னும் முழுத் தீர்வு காணப்படாததால், மாநிலப் பிரிவினைக்குப் பின்னும், இரு மாநிலங்களிடையே சுமூகமான நிலை ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் ஜுன் 4ம் தேதி திறப்பு
கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகள் வரும்
4ம் தேதி திறக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன்,
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து
கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து
ஜூன் 2ம் தேதி அரசு
பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை; பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு
கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துவிட்டது.