பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி
விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய
கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Special TET Key Answers (Tentative)
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன...
ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு
ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி
மாற்றியமைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்
20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்
TNPTF 12.06.2014 அன்று அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்பாட்டம்
மாநில அமைப்பின் வேண்டுகோளுக்கினங்க 12.06.2014 திங்கள் மாலை அனைத்து ஒன்றியங்களிலும் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஆர்ப்பாட்டம்.
தமிழ் நாட்டில் ஏன் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை? மத்திய அரசு அறிக்கை
தமிழ் நாட்டில் ஏன் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை? மத்திய அரசு அறிக்கை
மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: கல்வி அலுவலர் எச்சரிக்கை
பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், கட்டணம்
வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் அய்யண்ணன், கடும் எச்சரிக்கை விடுத்தார்.
புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை பாராட்டுங்கள்: தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
பள்ளி
மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த,அதிக புத்தகங்கள் படிக்கும்
சிறுவர்களை,பள்ளியிலே பாராட்டுங்கள், என, தலைமை ஆசிரியர்களை, தொடக்க கல்வி
இயக்குனர் கேட்டு உள்ளார்.
பாட புத்தகத்தில் என் வாழ்க்கையை சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்
குஜராத் மாநில முதல்– மந்திரியாக இருந்த
நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். இதன் மூலம் குஜராத் மாநில மக்கள் மோடி
தங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடக்கக்கல்வி Promotion & Transfer சார்பான பணிகள் விரைவில் தொடங்கும்.
பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தவுடன் கலந்தாய்வு பணிகள் தொடங்கும் என இயக்குனர் தகவல்
50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு
50 மாணவர்களும்,
அதற்கு மேலும் உள்ள இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்
கல்வியை நிகழாண்டில் தொடங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்? பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!
டிஇடி ஆசிரியர் தேர்வில் பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716,
கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு
6,210,
புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000
ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாகபள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
தொடக்கக்கல்வி துறையில் பதவு உயர்வு கலந்தாய்வு எப்போது? - ஏக்கம்
தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை அதிர்ச்சி தகவல்
பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை
கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு
தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை
அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள்
வழங்கப் பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள் எம்.எட். படிப்பில் சேரலாம்.
அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும்
பள்ளியிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற
தனியார் பள்ளியிலோ தற்போது பணியில் இருக்க
வேண்டும்.
ஓரிரு நாளில் விடைத்தாள் நகல்தேர்வு துறை இயக்குனர் தகவல்
''பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு
விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, ஓரிரு நாளில், விடைத்தாள் நகல், தேர்வுத்
துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்,'' என, துறை இயக்குனர்,
தேவராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பிளஸ் 2, விடைத்தாள் நகல் கேட்டு,
80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் கேட்டு, 3,000 பேர்
விண்ணப்பித்தனர்.விடைத்தாள் நகல் கேட்ட மாணவர்களின், விடைத்தாள்கள்,
சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அவை, 'ஸ்கேன்' செய்யப்பட்டு வருகின்றன.
செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க திட்டம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன்
அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி
தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இடவசதி இல்லாமல் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க முடியாமல் தவிப்பு
தர்மபுரி மாவட்ட தனியார் நர்சரி, பிரைமரி,
மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தர்மபுரியில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின்
கூட்டமைப்பு மாநில செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது: பள்ளி
கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஒருபள்ளியில் நான்கு பிரிவுக்கு (செக்ஸன்) மேல் கூடுதலாக வகுப்பு
துவக்கினால் கல்வித்துறையில் முன்
அனுமதி பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை வாகனங்கள் எப்சி செய்து, வட்டார
போக்குவரத்து அலுவலகத்தில் கட்டாயமாக அனுமதிபெற வேண்டும். 10 ஆண்டு அனுபவம்
பெற்ற டிரைவர்களை நியமித்து பள்ளி வாகனங்கள் ஓட்டவேண்டும். பள்ளிகளுக்கு
பரவலான இடங்கள் வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு - சீருடை 2ம் தேதி முதல் கிடைக்கும்
பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 2ம் தேதி முதல்
புத்தகம், நோட்டு, சீருடைகள் உள்ளிட்ட அனைத்து இலவச பொருட்களையும் வழங்க
வேண்டுமென மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறை
முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும்
நாளில் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் 14 வகை
பொருட்களில் பெரும்பாலானவற்றை வழங்கிட மாநில பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 படிக்காத மாணவி பிஎட் தேர்வு எழுத அனுமதி
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச்
சேர்ந்த சங்கரேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:நான் 10ம்
வகுப்பு முடித்து, பிளஸ் 2 படிக்காமல் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் டிப்ளமோ
படித்தேன். தொடர்ந்து பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பட்டம்
பெற்றேன்.
வரதட்சணை வாங்கினால் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்: கேரள முதல்வர்
கேரள
முதல்வர் உம்மன்சாண்டிக்கு அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கு உள்ளது. இதில்
நேற்று அவர் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நாட்டில் வரதட்சணை
கொடுமை தலைவிரித்தாடுகிறது.
பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி: பிற மொழி மாணவர்கள் தவிப்பு!
கட்டாய
தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும், 2015 - 16ல் நடக்கும் பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, முதல் பாடமாக எழுத
வேண்டும். தமிழ் அல்லாத இதர மொழியை, தாய்மொழியாகக்கொண்ட மாணவ,
மாணவியருக்கும், இந்த விதிமுறை பொருந்தும்,'' என, மெட்ரிக் பள்ளிகள்
இயக்குனர் பிச்சை உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், பெரும்பாலான தனியார்
பள்ளிகளில், கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தை அமல்படுத்தாததால், தமிழ்
அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், அவர்களது மொழிப் பாடத்தை,
முதல் பாடமாக படித்து வருகின்றனர். இவர்கள், எப்படி, தமிழை, பொது தேர்வாக
எழுதுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மே 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும்: கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர்
கடலூர்
மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் மூன்று நாட்கள் மணவர்கள்
பள்ளிக்கு நேரில் சென்று புத்தகம், சீருடைகளை பெற்றுச் செல்லலாம் என மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதவிக்கு நான் தகுதியானவளா, இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்! - ஸ்மிருதி இரானி
என்
கவனத்தை திசை திருப்பவே, கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சையை, காங்கிரசார்
எழுப்பியுள்ளனர். எனக்கான அமைச்சர் பொறுப்பை, நான் எப்படி கவனிக்கிறேன்
என்பதைப் பார்த்து, அந்தப் பதவிக்கு நான் தகுதியானவளா, இல்லையா என்பதை,
மக்கள் தீர்மானிக்க வேண்டும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார்.
மழைநீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு!
மழைநீர்
சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் பள்ளிக்கு பரிசு
வழங்கப்படும்' என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளிகல்வித்துறை
முதன்மை செயலர் சபீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாநில குடிநீர் வினியோகம்
தொடர்பான ஆய்வுக்கூட்டம், முதல்வர் ஜெ., தலைமையில் நடத்தப்பட்டது.
தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்பு
தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி,
மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம்
தெரிவித்துள்ளது.
ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: மதிமுக தீர்மானம்
தமிழக அரசு, 2013-14 கல்வி
ஆண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும்
ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு
வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட
பிரிவுகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டு, முதற்கட்டமாக
ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கில
வழிப் பிரிவுகளைத் தொடங்கியது. நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) இரண்டாம்
வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கில
வழிப் பிரிவுகளைத் தொடங்க உள்ளது.
குஜராத் பள்ளி் பாடத்திட்டத்தில் மோடி
2015ம்
கல்வியாண்டிலிருந்து பிரதமர் மோடி குறித்த
பகுதி, பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற
உள்ளதாக குஜராத் கல்வித்துறை தெரிவித்துள்ளது.