Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

துவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

              தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை பயன்படுத்துவதில் ணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, ஆசிரியர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

           அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாநில அரசின் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை; தமிழக அரசுக்கு நோட்டீசு

          மாநில அரசிடம் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கும் பரிந்துரை தேவைப்படும் காலம் விரைவில் வரும்

          அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கும் பரிந்துரை தேவைப்படும் காலம் விரைவில் வரும்: மாவட்ட திட்ட இயக்குநர்

கல்வியில் காட்டப்படும் பிரிவினையும் பாகுபாடும்


           ஆழ்வார்பேட்டையில் உணவருந்த விரும்பினால் அங்குள்ள அம்மா உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய்க்கும், அருகிலிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதே இட்லி ரூ.150-க்கும் கிடைக்கும். இட்லி ஒன்றுதான். ஆனால், விலைதான் வேறுபடுகிறது. இட்லியைப் போன்று கல்வியும் கடைச்சரக்காகிவிட்டது. மாநகராட்சிப் பள்ளி மழலையர் வகுப்புகளில் இலவசச் சேர்க்கையும், தனியார் பள்ளிகள் சிலவற்றில் ஆண்டுக் கட்டணம் இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கப்படுவதையும் பார்க்கிறோம்.

பாடசாலையின் கனவு கட்டுரை!


             கடந்த வருடம் பிரபலமான ஒரு தமிழ் தினசரி செய்திதாளில் வந்த செய்தி ”10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களுக்குள் ஏராளமான மாணவ மாணவிகள் மதிப்பெண் பெற்றுள்ளார்கள். அவர்களில் பலர் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள். ஆனால் இவர்கள் அனைவரும் தனியார் பள்ளியில் படிக்கவைக்கபட்டு மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார்கள். ஒருவர் கூட அரசு பள்ளியில் படிக்கவைக்கவில்லை. ஏன்? அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே அரசு பள்ளி மீது நம்பிக்கை இல்லையா? இதற்கு வெட்கப்பட வேண்டாமா?”

         இந்த செய்தி வந்தபொழுது நாம் மிகவும் வேதனைபட்டோம்!. கோபப்பட்டோம்! சுயபச்சாதாபம் கொண்டோம்!. இயலாமை குறித்து ஆற்றாமை கொண்டோம்! இந்த வருத்தத்தில் விளைந்த கட்டுரை தான் இது.

                    முதற்கட்டமாக பல அரசு பள்ளி ஆசிரியர்கள் கூடிய SSA CRC & RMSA பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களிடம் நாம் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தோம்!... 

கேள்வி 1 - அரசு பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள், உங்கள் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்?

கேள்வி 2 - அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்றால், நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

கேள்வி 3 - அரசு பள்ளிகளின் தரத்தை எவ்வாறு உயர்த்தலாம்? இன்றைய கல்வி முறையில் எந்த வகையிலான கல்வி மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

              இந்த  கேள்விகளுடன் நடந்த கூட்டங்களில் ஆசிரியர்கள் பலரும் தங்கள் கருத்தை ஆர்வமாக பதிவுசெய்தனர். ஆண் ஆசிரியர்களை காட்டிலும் பெண் ஆசிரியர்கள் பலரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூட வெளிப்படையாகவும், தெளிவாகவும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். இக்கருத்துகளின் தொகுப்பே நமது இக்கட்டுரை.

கேள்வி 1 - அரசு பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள், உங்கள் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்?

  • அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் மனமும், கைகளும் கட்டப்பட்டிருக்கிறது. அடியாத மாடு படியாது என்பார்கள்! ஆனால் அரசு பள்ளியில் மாணவர்களை அடித்து திருத்த இயலாது. இதனால் படிக்காமல் ஏமாற்றும் தீய ஒழுக்கங்களையும் கொண்ட மாணவர்களை கண்டு தங்கள் பிள்ளைகளும் கெட்டுவிடுவார்கள்! பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும், அதேசமயம் நாரோடு சேர்ந்த பூவும் கொஞ்சமாவது நாரத்தான் செய்யும். எனவே எங்கள் பிள்ளைகளை அடித்தும், கண்டித்தும் வளர்க்கக்கூடிய தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளோம்!
  • அரசு பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை கிடையாது. ஆனால் பல தனியார் பள்ளிகளிலும் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியும் ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரப்படுகிறது. இதனால் அண்டை மாநிலத்திற்கு செல்லும்போதும், பல உயர்மட்ட தேர்வுகள் எழுதும்போதும் மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது.
  • முந்தைய காலத்தில் பொதுமக்கள் பலரும் இரண்டுக்கும் மேற்பட்ட பல குழந்தைகளை பெற்றிருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவளிக்கவே இயலாத நிலையில் அவர்களை அரசு பள்ளிகளில் படிக்க வைத்தனர். ஆனால் இப்போதோ ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளை மட்டுமே பெரும்பாலோர் பெற்றுகொள்கின்றனர். ஆதலால் தனது பிள்ளைகளுக்கு உரிய வசதி வாய்ப்புகள் அனைத்தும் ஏற்படுத்தி தர வேண்டும் என நினைக்கின்றனர்.  இந்நிலையில் தன் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான கட்டிடம், மின்விசிறி அல்லது ஏசி வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவற்றை வேண்டும் என பொதுமக்கள் நினைத்து இவை பெரும்பாலும் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகளில் சேர்க்கும் போது அரசு பள்ளி ஆசிரியர்களாகிய நாங்களும், ஒரு பெற்றோராக தங்கள் பிள்ளைகளுக்கு மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என நினைப்பது தவறா?




 கேள்வி 2 - அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்றால், நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
  • அரசு பள்ளிகளில் இந்தியும் ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரப்பட வேண்டும்.
  • அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற இதர பணிச்சுமைகளை குறைத்து முழுமையாக கற்பித்தலில் ஈடுபட செய்ய வேண்டும். 
  • சுகாதாரமான கழிவறை, தூய்மையான குடிநீர், பாதுகாப்பு குறைபாடு இல்லாத கட்டிடங்கள், மின்விசிறி, கணிணி கல்வி போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.



















ஜிடிபியில் 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட அமைச்சர் ஸ்மிருதி இரானி திட்டம்

           மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில்(ஜிடிபி) 6 சதவீதத்தை கல்விக்காக செலவிட மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முடிவு செய்துள்ளார். மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றுள்ளார். டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்த அவர் தனக்கு இத்தனை பெரிய பதவி அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  
 

பொறியியல் படிப்பில் சேர ஜூன் 3-வது வாரத்தில் கவுன்சலிங்

          பொறியியல் படிப்பில் சேர 1.70 லட்சம் மாணவ, மாணவிகள் விண் ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் மூன்றாவது வாரத்தில் கவுன்சலிங் தொடங்குகிறது.

ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் சலுகை

          இந்த ஆண்டு ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் சலுகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜெயலலிதா

         தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1 முதல் அறவே நீக்க, தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைசர் தலைமையில் நடந்த ஆய்வுகூட்ட தகவல்

                 பள்ளிக் கல்வித் துறை அமைசர் கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ,மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்ட தகவல்


மகாராஷ்டிர மாநில பாடத்திட்டத்தில் சச்சின் டெண்டுல்கர்

             மகாராஷ்டிரா மாநில அரசின், பள்ளி பாடத்திட்டத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து பாடத்தை சேர்த்துள்ளது.அம்மாநிலம் அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெண்டுல்கரின் சிறப்பை பற்றி படிக்கும் போது மாணவர்களுக்கு பாடத்தின் மீது கவனம் ஏற்படும் என்பதால்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Employment Office Detail - முதுகலை படிப்புடன் இரண்டாம் முறையாக பி.எட் பதிவுசெய்ய வேண்டும்

         முதுநிலைப்படிப்பை பதிவு செய்யும்போது இரண்டாம் முறையாக முதுநிலைப்படிப்புடன் பிஎட் படிப்பையும்தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் சேவை வேகம் அதிகரிப்பு

          வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட் சேவை உட்பட இன்டெர் சேவையின் வேகம் ஜூன் 1ம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனமான சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படுமா?

         நடப்பு கல்வி ஆண்டில் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்புகள் ஜூன், 2 ல் திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டில் குறைபாடு:ஜுன் 19ல் ஆர்ப்பாட்டம்

        தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில துணைத்தலைவர் கே. அகோரம் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினால் ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

குரூப் 1, 2 போன்ற அரசு தேர்வுகளில் வெற்றி பெற வழிகள்...

          அரசு பணி என்பது ஒவ்வொரு மாணவர்களின் கனவாக உள்ளது. இதில், சாதிக்க பல எளிமையான வழிகள் உள்ளன. இம்மாதம் முதல் குரூப் 1 தேர்வுகளும், தொடர்ந்து பல்வேறு தேர்வுகளும் நடக்க உள்ளன. குரூப் 1 தேர்வு, இனி மாநில குடிமைப்பணி என அழைக்கப்படவுள்ளது. குரூப் 1 முதன்மை தேர்வில் தற்போது 4 தாள் கொண்டு வரப்பட்டு குரூப் 2 தேர்விலிருந்த நகராட்சி ஆணையர், சார்பதிவாளர் போன்ற பணி குரூப் 1 தேர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு சலுகை

              ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்வதற்காக, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) மூலம், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 
 

பி.எட். பதிவு செய்யாமல் ஆசிரியர் பணியை இழக்கும் முதுநிலை பட்டதாரிகள்?

               இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப் பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.

இந்தியாவின் புதிய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி!

                                                   
          இந்தியாவில் பதவியேற்ற நரேந்திர மோடி அரசில், மத்திய மனிதவளத் துறையின் கேபினட் அமைச்சராக ஸ்மிருதி சுபின் இரானி நியமிக்கப்பட்டுள்ளார்பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மே 26ம் தேதி மாலை பதவியேற்றது.  

INDIA POST: அஞ்சல் துறை தேர்வுக்கு ஸ்பீடு போஸ்ட்டில் நுழைவுச் சீட்டு

         வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர் பணி நியமன தேர்வுக்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளது.

கட்டிடங்களை உருவகப்படுத்தும் மென்பொருள் கண்டுபிடித்து சென்னை மாணவன் சாதனை

புதிய மென்பொருள் உருவாக்கியுள்ள சென்னை மாணவர் ரிஷி ஹரீஷ்

          இல்லாததை இருப்பதுபோல உருவகப்படுத்தும் புதிய மென் பொருளை கண்டுபிடித்து சென்னையைச் சேர்ந்த பிளஸ் -1 மாணவர் சாதனை படைத்துள்ளார். இந்த மென்பொருளைக் கொண்டு ‘வெர்சுவல் ரியாலிட்டி’ என்ற நவீன தொழில்நுட்பத்தில் பிரமாண் டமான கல்லூரிக் கட்டிடத்தை அவர் உருவகப்படுத்தியுள்ளார்.

மாயமான விமானம் மலேசிய அரசு ரகசியமாக வைத்திருந்த சாட்டிலைட் தகவல் வெளியீடு

             பலியான பயணிகளின் உறவினர்கள் நெருக்கடி காரணமாக, ரகசியமாக வைத்திருந்த மலேசிய விமானத்தின் சாட்டிலைட் தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த மார்ச் 8ம் தேதி 239 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 

துவக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை வீடு, வீடாக ஆசிரியர்கள் பிரச்சாரம்

              தமிழகம் முழுவதும் அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி ஆசிரியர்கள் மூலம், வீடு தோறும் பிரச்சாரத்தில் ஈடுபட, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பள்ளிகளில் குடிநீர்,கழிப்பறை வசதி: ஆய்வு நடத்த கல்வித்துறை உத்தரவு

             பள்ளிகளில், மாணவர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதி குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தயார்! : மாணவர்களுக்கான நோட்டு, புத்தகங்கள்...: பள்ளி திறக்கும் நாளில் வினியோகம்

               பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நோட்டு, புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.

TET மூலமாக 12,000 ஆசிரியர் நியமனம் அறிவித்துவிட்டு - பணி நிரவல் கணக்கிடுவது முரண்பாடானது.

           இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல்


TNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை -TRB

*தமிழ் - 9853.
*ஆங்கிலம் - 10716.
*கணிதம் - 9074. 

மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம்: அரசுத் தேர்வுகள் இயக்குனர் வேண்டுகோள்.

         மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம் என்று மாணவர்களை அரசுத் தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தமிழக அரசு உத்தரவு: 13 அரசு கலைக் கல்லூரிகள் கிரேடு 1 ஆக தரம் உயர்வு.

          தமிழகத்தில் 13 அரசுக் கலைக்கல்லூரிகள் கிரேடு 1 அந்தஸ்துக்கு தரம்உயர்த்தப்பட்டுள்ளது.
 

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தல்!

       பரமத்தி வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில்,தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வைஉடனடியாக நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.


குறைந்தபட்ச இணையதளவேகம் கட்டாயமாகிறது - டிராய்

         மொபைல் போன் வாடிக்கையாளர்கள் விரைவான இணையதள சேவை பெறும் வகையில், குறைந்தபட்ச இணையதள வேகத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) நிர்ணயிக்க உள்ளது.தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு, '2ஜி' மற்றும் '3ஜி' தொழில்நுட்பத்தில் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன.

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஓய்வூதிய துறையை தன்னிடமே வைத்துக்கொண்டுள்ளார்.

        தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்து ஏதேனும் அதிசயம் நிகழ்த்துவாரா மோடி?

CPS கட்டாயம்!

           01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive