தரமான பள்ளி தனியார் பள்ளிதான்.
அதுவும் அதிகமாக பீஸ் வாங்கும்
பள்ளிகள் தான் தரமான பள்ளிகள்
மற்றதெல்லாம் யோசி்க்கனும் என்று பேசுவதை பொதுவாக
நாம் கேட்கிறோம். அதுமட்டுமல்ல தரங்கெட்டபள்ளிகள் என்றால் முதலில் வருவது
அரசு பள்ளிகள் தான்.
Half Yearly Exam 2024
Latest Updates
Public Exam - A Planned Success! திட்டமிடப்பட்ட வெற்றி என்பது உண்மையா? - சிறப்புக்கட்டுரை
மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்
தேர்வை, 10
லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்வு
எழுதிய 5
லட்சத்து 18 ஆயிரத்து 639 மாணவர்களில் 88 சதவீதமும் பேரும், 5 லட்சத்து 2 ஆயிரத்து 110 மாணவிகளில் 93.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மொத்த
தேர்ச்சி சதவீதம் 90.7
ஆகும். 7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் பெற்று
சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட
இந்த ஆண்டில் தேர்வு சதவீதம் 1. 7 சதவீதம்
அதிகரித்துள்ளது.
கல்வித்தர மேம்பாட்டுக்கு, தேர்வு முறையை மாற்ற வேண்டும்!
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்தஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத
புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதபுள்ளியும், 90ஐ தாண்டி,சாதனை
படைத்துள்ளது. மாணவர்கள்,மதிப்பெண்களை வாரி குவித்துள்ளனர். நேற்று வெளியான
பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவில், 465 பேர்,மாநில அளவில், முதல்மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று காலை வெளியிடப்பட்டது. இதில்
தமிழ்நாட்டில் 887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கல்வியில் சாதித்து வரும் தர்மபுரி மாவட்டம் : மாவட்ட மக்கள் பெருமிதம்
தமிழக அளவில், தர்மபுரி மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலை
இருந்தது. அது, தற்போது மாறிவிட்டது.தர்மபுரி மாவட்ட மாணவ, மாணவியர்
தொடர்ந்து கல்வியில் சாதனை படைத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண்ணை நீட்டிக்க கோரிக்கை ---தின மணி நாளேடு
தமிழகத்தில்
2013-ஆம் நடைபெற்ற தகுதித்தேர்வில் பங்கேற்றவர்களில், இடஒதுக்கீட்டு
பிரிவினரின் கோரிக்கையை ஏற்று 60 சதவீத மதிப்பெண்களில் இருந்து, 5 சதவீதம்
விலக்கு அளித்தது போன்று, 2012-ஆம் ஆண்டு தேர்வில் பங்கேற்றவர்களுக்கும்
சலுகை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவருக்கு 4 பவுன் சங்கிலி வழங்கிய டீக்கடைக்காரர்!
வேலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்எடுத்து
அரசுப் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.நவீன்குமாருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான 4
சவரன் தங்கச் சங்கிலியை வேலூரில் டீக்கடைக்காரர் மகேஸ்வரன், ஆட்சியர்
முன்னிலையில்வழங்கினார். அதை மாணவரின் தாயார் பெற்றுக் கொண்டார். அத்துடன்
மாவட்டத்தில் 2 மற்றும் 3-ஆம் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர் 5 பேருக்கு
வெள்ளி நாணயங்கள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கப் பரிசு ஆகியவற்றையும்
ஆட்சியர் இரா.நந்தகோபாலிடம் டீக்கடைக்காரர்
மகேஸ்வரன் வழங்கினார்.
தருமபுரியைச் சேர்ந்த முதலிடம் பிடித்த 9 மாணவிகளின் எதிர்கால இலட்சியம் என்ன?
தருமபுரி மாவட்டத்தில் 3 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 9 மாணவிகள்,
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநில
அளவில் முதலிடத்தைப் பிடித்தனர்.
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநில
அளவில் முதலிடத்தைப் பிடித்தனர்.
NHIS For Pensioners / Family Pensioners
NEW HEALTH INSURANCE SCHEME FOR PENSIONERS (INCLUDING SPOUSE)/ FAMILY PENSIONERS, 2014
SSLC அறிவியல் பாடத்தில் மட்டும் ஏன் சென்டம் அதிகரிப்பு?
2014ம் ஆண்டின் பொதுத்தேர்வு முடிவுகளில், கணிதப் பாடத்தில் சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது.
10th Result : District Wise Percentage
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை.
3 பேர் 500-க்கு 500
தமிழ் அல்லாத பிற மொழிப்
பாடங்களை படித்தவர்களில் 3 பேர் 500-க்கு 500 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மதுரை டி.வி.எஸ்.
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.துர்கா தேவி (சமஸ்கிருதம்).
பொன்னேரி, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஜி.ஹேமவர்ஷினி (பிரென்சு) மற்றும் கோவை ஜி.ஆர்.ஜி.எம்.
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி (பிரென்சு)
ஆகியோர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 10 மணிக்கு
வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமாகவும்,
எஸ்.எம்.எஸ்.மூலமாகவும் அறிந்துகொள்ளலாம். அதேபோல், தாங்கள்
பயின்றபள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
TNPSC VAO EXAM :1 லட்சம் பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளன
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜூன் மாதம் 16-ந்தேதி காலை கிராம
நிர்வாக அலுவலர் பதவிக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
நீதித்துறை பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு முடிவு இணையதளத்தில்
நீதித்துறை பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு முடிவு இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மோடியிடம் கலாம் கூறிய 3 முக்கிய அறிவுரை
பிரதமராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு பாரதகுடியரசு முன்னாள் தலைவர்
அப்துல் கலாம் தொலைபேசியில்வாழ்த்து தெரிவித்தார். அப்போது அதனைப்
பொறுமையாகக் கேட்டுக் கொண்ட மோடி, அதனைத் தாம் நிறைவேற்றுவதாக உறுதி
அளித்தார். ''உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியைப்பெற்று
சாதனை படைக்க வாழ்த்துகிறேன்'' என்று கூறிய அப்துல் கலாம்,புதிதாக
அமையவிருக்கும் பா.ஜ.க. அரசு எந்தெந்ததிட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும் என்றும் பட்டியலிட்டார்.
ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
கோடை
விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று
தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால், குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்
கல்வித்துறை தெரிவித்துள்ளது. தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள்
சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: கோடை
விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு
அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கை நடக்க
வேண்டியுள்ளது.
தேசியஇளந்திரு விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 8 சிறுவர்கள்தேர்வு
மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசியஇளந்திரு விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 8 சிறுவர்கள்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்
திருப்பூர்
மாவட்டத்தில், அரசு உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாக தரம்
உயர்த்த, பட்டியல் தயாரிக்கும் பணியில், கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக
உள்ளனர்.
தேர்வு முடிவால் மன உளைச்சலா'104'ல் ஆலோசனை கிடைக்கும்
தேர்வு
முடிவுகளால், மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள், பெற்றோர், '104'
மருத்துவ உதவிக்கு தொடர்பு கொண்டால், தேவையான ஆலோசனைகள் கிடைக்கும்.பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. எதிர்பார்த்த மதிப்பெண்
கிடைக்காவிட்டாலோ, தேர்ச்சி பெறாவிட்டாலோ, மாணவர்கள், மன உளைச்சலுக்கு
ஆளாகி, தவறான முடிவு எடுப்பது வழக்கமாக உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தபோதும், இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தன.
ஏ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்
நடுநிலைப்
பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி
தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
570 பொறியியல் கல்லுாரிகளின் செயல்பாடு:10 நாளில் வெளியிட அண்ணா பல்கலை திட்டம்
தமிழகத்தில்
உள்ள, 570 பொறியியல் கல்லுாரிகளின் கல்வி செயல்பாடுகளை, தேர்ச்சி சதவீத
அடிப்படையில் வெளியிட, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்துள்ளது. 2011 முதல்,
2013 வரையிலான, மூன்று ஆண்டு தேர்ச்சி விவரம் வெளியிடப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
பொதுநல மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னி ஹோத்ரி, நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்', நேற்று முன்தினம், அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
சிகரெட் பிடித்தால் அரசு வேலை இல்லை: ராஜஸ்தான் அரசு
சிகரெட்
மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு வேலை வழங்குவது இல்லை என
ராஜஸ்தான் அரசின் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சிகரெட் மற்றும்
புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டாம் என
மாநில அளவிலான புகையிலை கட்டுப்பாட்டு குழு ராஜஸ்தான் அரசுக்கு கடந்த
2012ல் பரிந்துரை செய்தது. தற்போது இந்த பரிந்துரையை அமல்படுத்த ராஜஸ்தான்
மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பான உத்தரவு விரைவில்
வெளியிடப்படவுள்ளது. அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் சிகெரெட் பிடிக்க
மாட்டேன், புகையிலை பொருட்கள் எதையும் பயன்படுத்தமாட்டேன் என உறுதிமொழி
அளிக்க வேண்டும். ராஜஸ்தான் மின் நிறுவனங்களின் இந்த முடிவை, ஜெய்ப்பூரில்
உள்ள இனயா பவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் வரவேற்றுள்ளது.