Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வு முடிவால் மன உளைச்சலா'104'ல் ஆலோசனை கிடைக்கும்

          தேர்வு முடிவுகளால், மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள், பெற்றோர், '104' மருத்துவ உதவிக்கு தொடர்பு கொண்டால், தேவையான ஆலோசனைகள் கிடைக்கும்.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டாலோ, தேர்ச்சி பெறாவிட்டாலோ, மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகி, தவறான முடிவு எடுப்பது வழக்கமாக உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தபோதும், இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தன.

ஏ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்


         நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



570 பொறியியல் கல்லுாரிகளின் செயல்பாடு:10 நாளில் வெளியிட அண்ணா பல்கலை திட்டம்

          தமிழகத்தில் உள்ள, 570 பொறியியல் கல்லுாரிகளின் கல்வி செயல்பாடுகளை, தேர்ச்சி சதவீத அடிப்படையில் வெளியிட, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்துள்ளது. 2011 முதல், 2013 வரையிலான, மூன்று ஆண்டு தேர்ச்சி விவரம் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னி ஹோத்ரி, நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்', நேற்று முன்தினம், அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

சிகரெட் பிடித்தால் அரசு வேலை இல்லை: ராஜஸ்தான் அரசு

           சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு வேலை வழங்குவது இல்லை என ராஜஸ்தான் அரசின் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டாம் என மாநில அளவிலான புகையிலை கட்டுப்பாட்டு குழு ராஜஸ்தான் அரசுக்கு கடந்த 2012ல் பரிந்துரை செய்தது. தற்போது இந்த பரிந்துரையை அமல்படுத்த ராஜஸ்தான் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படவுள்ளது. அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் சிகெரெட் பிடிக்க மாட்டேன், புகையிலை பொருட்கள் எதையும் பயன்படுத்தமாட்டேன் என உறுதிமொழி அளிக்க வேண்டும். ராஜஸ்தான் மின் நிறுவனங்களின் இந்த முடிவை, ஜெய்ப்பூரில் உள்ள இனயா பவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் வரவேற்றுள்ளது. 

ரூ.260 கோடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, காலணிகள்

       தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் ரூ.260 கோடியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1 லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள்

         அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக ஒரு லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச கல்வி ஒதுக்கீடு பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள்! மாணவர்கள் அவதி

       கல்வி உரிமை சட்டத்தின் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச கல்வி ஒதுக்கீடு பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளதால், சுயநிதி பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களுக்கு உடனடி வேலை

        என்ஜினீயரிங் படிப்பில் சேருவதை விட கலை அறிவியல் படிப்பில் சேர மாணவ–மாணவிகள் ஆர்வம்; ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களுக்கு உடனடி வேலை

நாமக்கல் பள்ளிகளின் நடைமுறைகள்

            பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள் எவ்வளவு மார்க் எடுப்பார்களோ? அவர்களை எந்தப்பள்ளியில் பிளஸ் 2 சேர்க்க போகிறோ மோ? என கணக்குகள் போட்ட படியேஇருப்பர் பெற்றோர். சமீபத்தில் வெளியான பிளஸ் 2 முடிவுகளை ஒப்பிடும் போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு களும் 90 விழுக்காடுகளுக்கு மேல் தேர்ச்சியிருக்குமென ஊகிக்க முடிகிறது. பெற்றோர்களைப் போலவே இந்த முடிவு களை எதிர்பார்த்து நாமக்கல் வாழ் கல்விச்சேவகர்களும், தங்களின் கல்லாவை கணிசமாக நிரப்ப தயாராகி வருகிறார்கள்.

24.05.2014 முதல் 26.05.2014 பணி நிரவல் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

             தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் 01.09.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம், பணி நிரவல் 24.05.2014 முதல் 26.05.2014 மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

Mobile இன்டர்நெட் விலைகள் உயர காரணம் என்ன தெரியுமா?

       Airtel, Aircel, Vodafone, Docomo போன்ற அனைத்து வினியோகஸ்தகர்களும் Internet Package விலையை அதிகப்படுத்தி இருப்பது நாம் எதிர்பார்த்திடாத ஒன்று 
 

TNPSC: HIGH COURT EXAM Result Released

TNPSC: HIGH COURT EXAM Result Released

Exam Date:23.02.2014

TNTET - Paper 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் - RTI Letter

          ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்

Know your TNPSC VAO Exam 2014 - Application status

Know your TNPSC VAO Exam 2014 - Application status  

         கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப நிலவரங்களை (know your VAO application status) TNPSC வெளியிட்டுள்ளது.

SG to BT Promotion Panel As On 01.01.2014

How to Know SSLC Result Via Cell Phone?

How to Know SSLC Result Via Cell Phone? - Detailed Report Available Now. - Click Here


அறிவிப்பு வெளியிட்டும் ஆசிரியரை நியமிக்கலாம் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

            அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக ளில், வேலைவாய்ப்பு அலுவலகப் பரிந் துரை மட்டுமன்றி, பள்ளியில் உள்ள விளம்பரப் பலகை, பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டும் ஆசிரியர் களை நியமனம் செய்யலாம் என்று உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
 

CPS திட்டத்தை GPF ஆக மாற்றக் கோரி முதல்வருக்கு வேண்டுகோள்

          2003-2006-ல் நியமிக்கப்பட்ட தொகுப்புதிய ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்தும், CPS திட்டத்தை GPF ஆக மாற்றக் கோரி தமிழ்நாடு முன்னாள் தொகுப்பூதிய ஆசிரியர்கள் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

Special TET Tentative Key Answer Within 2 Weeks

          மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு இன்னும் 2 வாரத்தில் இணையதளத்தில் சரியான விடை வெளியிடப்படும்
 

ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டுமே பணிபுரியும் அரசு ஊழியர்கள்: விடுமுறையை குறைக்க வழக்கு

          அரசு அலுவலர்கள் விடுமுறை நாட்கள் தவிர்த்து, ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டும் பணிபுரிவதாகவும், சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி விடுமுறை நாட்களை குறைக்க கோரியும் தாக்கலான வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு

          பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
 

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு 26 முதல் விண்ணப்பிக்கலாம்

          பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டல் கோரி, 26ம் தேதி முதல், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.
 

நாளை காலை 10ம் வகுப்பு "ரிசல்ட்' : 10.38 லட்சம் மாணவர்கள் ஆவல்

       பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை, நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை வெளியிடுகிறது. 10.38 லட்சம் மாணவர்கள், தேர்வு முடிவை, ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
 

சிறப்பு டி.இ.டி., தேர்வில் 4,476 பேர் பங்கேற்பு

           தமிழகத்தில், நேற்று நடந்த, மாற்றுத் திறனாளிக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), 4,476 பேர், பங்கேற்றனர். 
 

பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்

           நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
 

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம் விரைவில் தேர்வு

         பள்ளி மாணவர்களுக்கான, இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம், மூன்று நாட்களில் தேர்வு செய்யப்படவுள்ளது. இதற்கிடையே, பள்ளிகளின் நிர்வாகத்தினர், பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பங்களை, போக்குவரத்துக் கழகங்களில் இருந்து பெற்று செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய, "ஸ்மார்ட் கார்டு' ஆக, வழங்கப்படும் பஸ் பாசை, இந்தாண்டு, 30 லட்சம் மாணவர்கள் பெறுகின்றனர்.

மதிப்பெண் சான்றிதழில் எழுத்து பிழையா? : தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்' உறுதி

  பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக, தேர்வுத் துறை வழங்கிய சுற்றறிக்கையை, சரியாக அமல்படுத்தாத தலைமை ஆசிரியர் மீது, "சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத் துறை நேற்று தெரிவித்தது.
 

அரசு ஊழியர்களிடம் தி.மு.க., செல்வாக்கு சரிவு: லோக்சபா தேர்தலில் வெட்ட வெளிச்சம்

        அரசு ஊழியர்களிடமும், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருவது, தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம். காலம் காலமாக இதுதான் யதார்த்தமாக இருந்து வந்தது. ஆனால், அது தற்போதைய தேர்தல் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது.

உதவித்தொகை மோசடி விவகாரம்: தலைமை ஆசிரியர்களிடம் 2 வது நாளாக விசாரணை

           சுகாதாரக்குறைவாக தொழில்செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1750 கல்வி உதவித்தொகை அளிக்கிறது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை நிர்வாகம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களின் பெற்றோரிடம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகையில் ரூ.68 லட்சம் முறைகேடு நடந்திருப்பதை அப்போதைய கலெக்டர் குமரகுருபரன் கண்டுபிடித்தார். 

ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவருக்கு பள்ளியில் வேலைவாய்ப்பு பதிய 4ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடு

            தஞ்சையில், ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தாங்கள் படித்த பள்ளிலேயே, வரும், 4ம் தேதி வரை, வேலைவாய்ப்பை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது' என, தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் கலைச்செல்வன் தெரிவித்தார்.
 

TNTET -2013: RTI Letter (Maths Subject Regarding)

           TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம் 

Click Here For PDF Format

TNTET -2013: RTI Letter (English Subject Regarding)


              நாகப்பட்டிணத்தை சேர்ந்த திரு. வி. பிரபாகரன் அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 குறித்த சில விபரங்களை கேட்டு பெற்றுள்ளார். அந்த விவரங்கள் தங்களுக்காக,



குமரியில் தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்

           குமரி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததாக இரணியல், படந்தாலுமூடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 

விரைவிலேயே அரசு பள்ளிகளில் சேருவதற்குக்கூட மாணவர்கள் இல்லாத நிலை ஏற்படக்கூடும்?

         பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும் மாணவர் சேர்க்கையும் குறைந்து கொண்டே வருவதும் சி.பி.எஸ்.இ. முறையிலான தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை மேலதிகமாக அதிகரித்து வருவதும் தெரியவருகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive