Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாள்

              பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவதற்கும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (புதன்கிழமை) கடைசி நாளாகும். இது குறித்து மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்.

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு சிக்கலாகும் கல்லூரி 'அட்மிஷன்': கவனிக்குமா உயர் கல்வித்துறை

            தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். மாநில பள்ளிகளுக்கான பிளஸ் 2 தேர்ச்சி முடிவு, மே 9 ல் வெளியானது. மாணவர்களுக்கு மே 21ல், மதிப்பெண் பட்டியல் வழங்க இருந்தாலும், மதிப்பெண் விவரப் பட்டியலை, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, விரும்பும் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளை தேர்வு செய்து பி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு

         ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி..டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில்,சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
 

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 3–வது வாரம் தொடங்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்

என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும் என்றும்ஜூன் 3வது வாரம் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அண்ணாபல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார்.

சென்னையில் 10 தனியார் பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து ஆர்.டி.ஓ. அதிகாரிகள் நடவடிக்கை

             சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய விதிமுறைகளை கடைபிடிக்காத 10 தனியார் பள்ளி வாகனங்களுக்கு தற்காலிகமாக தரச்சான்று (எப்.சி.) உரிமம் ரத்து செய்யப்பட்டது. 

'டான்செட்' தேர்வு முடிவு வெளியீடு

             எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுகலை படிப்புகளில் சேர்வதற்காக, அண்ணா பல்கலை நடத்திய, பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) முடிவு, பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த 77 ஆயிரம் பேருக்கு சிறப்பு வகுப்பு

             பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்த, 77 ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளிலேயே, ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் எடுக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தேர்ச்சி குறைந்த அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை: கல்வி துறை அதிரடியால் ஆசிரியர்கள் பீதி - தினமலர்

         பிளஸ் 2 பொது தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் கட்டாய விடுமுறை அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் முடிவு

              இன்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் குறைத்தீர் முகாம் நடத்தப்படுகிறது. 
 

கணினி பயிற்றுநர்களை நியமிக்க கோரிக்கை

        அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

அலகு விட்டு அலகு மாறுதல் குறித்து செயலாளருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் - இயக்குநர்

           அலகு விட்டு அலகு மாறுதல் குறித்து செயலாளருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என இயக்குநர் பதில்; செ.முத்துசாமி பிரத்யேக பேட்டி.

ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்- இயக்குநர் பதில்

          ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு மேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களும்,தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களும் தெரிவித்துள்ளனர்.

தேர்வு அட்டவணை

       2013-2014 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட, 657 கல் லூரிகளில் பி.எட்., எம்.எட்., எம்.பில்., படிப்புகளுக்கான தேர்வு அட்டவணை

சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

               பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து வாங்கிக்கொள்ளலாம்
 

ஒரே நேரத்தில் 2 செட் பள்ளிச்சீருடைகள்: ஜூன் 2-ந் தேதி வழங்கப்படுகிறது

          பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், ஜியோமெண்ட்ரி பாக்ஸ் ஆகியவை போய் சேர்ந்தன. அவை அனைத்தும் பள்ளிகள் தொடங்கும் ஜூன் 2-ந்தேதி வழங்கப்பட உள்ளன.
 

100 சதவீதம் தேர்ச்சி உண்மையான வெற்றியா?

            தேர்வு எழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைவது மூலம் கிடைக்கும் வெற்றி உண்மையல்ல என்பது தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெளிவாகிறது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பங்கள் அதிகரிப்பு! 'கட்ஆப்' அதிகரிக்க கை கொடுக்குமா இயற்பியல்

 
            மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. 'எளிதாக வினாக்கள் அமைந்த இயற்பியல் பாடத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை,' என்ற ஆதங்கம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 

இட ஒதுக்கீட்டில் குழந்தையை சேர்க்க 4 ஆவணம்! பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுரை

              தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி சட்ட இட ஒதுக் கீட்டில் மாணவர்களை சேர்க்க, விண்ணப்பத்துடன் நான்கு ஆவணங்கள் கண்டிப்பாக இணைக்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 

மே 12 இன்றுடன் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவுபெறுகின்றது...

           ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது..
 

வேலைவாய்ப்பக பதிவு எளிய நடைமுறை கடைபிடிப்பு.

              பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியருக்கு, அவர்கள் படித்த பள்ளியிலேயே, மதிப்பெண் சான்று வழங்கும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

விவரம் அறிய முடியாமல் மக்கள் தவிப்பு : முடங்கி கிடக்கும் அரசு இணையதளங்கள்...

              அரசின் செயல்பாடுகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த அரசு துறைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இணையதளங்கள் அனைத்தும் தற்போது முடங்கி கிடக்கிறது.
 

"நாசா' ஆய்வுக்கு விருதுநகர் மாணவர் தேர்வு


   

          அமெரிக்காவின் "நாசா' ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்திற்கு, விண்கலத்தை அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான, திட்டவடிவமைப்பு குழுவில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் விஷ்ணுராம் பரத் இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் விண்?வளி ஆய்வு மையமான "நாசா' நிறுவனம், 2018 ல், 2 விண்வெளி பயணிகளுடன், செவ்வாய் கிரகத்திற்கு, ஒரு விண்கலத்தை அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது
 

TANCET -RESULTS -ANNA UNIVERSITY

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 14-ந்தேதி முதல் பெறலாம்

      பிளஸ்–2 முடிவு வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.
 

பிளஸ்–2 விடைத்தாள் மறுகூட்டல் செய்வதில் புதிய முறை மதிப்பெண் குறைந்தாலும் பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும்

           பிளஸ்–2 விடைத்தாள் மறுகூட்டல் செய்வதில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, மறுகூட்டலில் மதிப்பெண் குறைந்தாலும் பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும்.



+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவனத்திற்கு


         12-5-2014 முதல் தாங்கள் படித்த பள்ளியில் [தனித்தேர்வராக இருந்தால் தேர்வு மையயத்தில்] கீழ்க்கண்ட படி தொகை செலுத்தி துணை தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளலாம் . தோல்வி அடைந்த அனைத்து மாணவர்களும் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுதிக்கொள்ளவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . 

தேர்வில் 5 முறை தோல்வியடைந்தாலும் தன்னம்பிக்கையால் நீதிபதியாக உயர்ந்தேன்': சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்


                          


            பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் 5 முறை தோல்வியைத் தழுவிய பிறகும் தன்னம்பிக்கையுடன் பயின்றதால் நீதிபதி பொறுப்புக்கு உயர்ந்ததாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் தெரிவித்துள்ளார்.

பி.இ. படிப்புக்கான விண்ணப்பத்துடன் இணையதளம் மூலம் பெறப்படும் மதிப்பெண் பட்டியலை இணைத்தால் போதுமானது

           பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது.

           தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டு அடிப்படையின் கீழ் அரசு அனுமதி பெறாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் மீது விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. இந்நிலையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1,296 தொடக்க பள்ளி மற்றும் 723 மழலையர் பள்ளிகளுக்கு அறிக்கை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது.
 

மதிப்பெண் மறுகூட்டல் விடைத்தாள் நகல் பெற்ற 3 நாளில் விண்ணப்பிக்க வேண்டும்

          
           பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் பெற்ற 3 தினங்களுக்குள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 

பிளஸ் 2 தேர்வு : மறுகூட்டலா? மறு மதிப்பீடா? எப்படி எங்கு விண்ணப்பிப்பது


          தேர்வுத்துறையின் குளறுபடியான அறிக்கைகளால் பிளஸ் 2 மாணவர்கள் அலைக்கழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 671 மாணவர்களும், தனித்தேர்வர்களாக 58,679 மாணவர்களும் தேர்வு எழுதினர். இந்த வருடம் 91 சதவீதம் பேர் தேர்வில் வெற்றி பெற்றனர். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள், மறுகூட்டலுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. பள்ளியில் பயின்ற மாணவர்கள், அந்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா - இந்தமுறை எப்படி?


          பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழை முதற்பாடமாக எடுத்து, மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு பணப் பரிசு வழங்குவதுடன், அவர்களின் உயர்கல்வி செலவையும் தமிழக அரசு ஏற்கிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive