மாணவர்கள்
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு
மே 9 முதல் 14-ஆம் தேதி வரை
தங்களது பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
மே 12-ஆம் தேதி முதல் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்மே 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
வங்கி கணக்குகளை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும் இயக்கலாம்
வங்கி கணக்குகளை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும் இயக்கலாம் என
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில்
ரிசர்வ் வங்கி திருத்தங்களை மேற்கொண்டு அறிவித்துள்ளது. அதன்படி சிறுவர்கள்
(மைனர்) அனைவரும் தங்களது பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் வங்கி கணக்கு
தொடங்கலாம். இவர்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பிக்சட், ரெக்கரிங்
அல்லது சேமிப்பு கணக்குகளை தாங்களே தொடங்கவும் இயக்கவும் செய்யலாம் என
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
TNTET Weightage Survey - இன்றுடன் முடிவடைகிறது.
Survey: TNTET Weightage -ல் Employment Seniority & Experience - க்கு 5% + 5% மதிப்பெண் வழங்கலாமா?
ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்டு சிறை
சென்னையில் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியரை கொலை செய்த வழக்கில் மாணவனுக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி; கல்வித்துறை அறிவிப்பு
ஒன்பதாம்
வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக
அறிவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு ‘‘செயல்படாத கணக்கில் இருப்பு இல்லாவிட்டால் அபராதம் கூடாது’’
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருந்து, அதை நடைமுறையில்
பராமரித்து வராத வாடிக்கையாளர்களின் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை
இல்லாவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை சில வங்கிகள்
பின்பற்றி வருகின்றன.
பயணிகளுக்கு ரெயில்வே அங்கீகரித்த அடையாள அட்டைகள்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரெயில்வே டிக்கெட் கவுண்டர்கள், இணையதளம் மற்றும் தட்கல் முறையில் டிக்கெட்
முன்பதிவு செய்த பயணிகள் இரண்டாம் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு உள்ளிட்ட
அனைத்து வகுப்புகளிலும் பயணம் செய்வதற்கு ரெயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட
அடையாள அட்டை தங்களுடைய பயணத்தின்போது எடுத்து செல்லவேண்டும் என்பது
கட்டாயம் ஆகும்.
இன்று போய் நாளை வா: சான்றிதழ்களுக்காக அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்
பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள
நிலையில் பல்வேறு சான்றிதழ்களுக்காக வருவாய்த்துறையை அணுகும் மாணவர்கள்,
கிராம நிர்வாக அலுவலர் உட்பட உடுமலை தாலுகாவில் காலியாக உள்ள பணியிடங்களால்
அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலனுக்காக சான்றிதழ்களை
குறித்த நேரத்தில் வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரட்டைப்பட்ட வழக்கு இன்று (7.5.2014) உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம்
பட்டப்படிப்பு படித்தவர்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட வழக்கு இன்று (7.5.2014) தேதி விசாரணைக்கு வருகிறது .
5% மார்க் தளர்வு அடிப்படையில் சான்று சரிபார்ப்பில் மீண்டும் வெயிட்டேஜ் - Dinakaran
டிஇடி தேர்வில் அரசு அறிவித்த 5 சதவீத
மதிப்பெண் தளர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று
சரிபார்ப்பு நேற்று தொடங்கியது.
Flash News: முல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்.
- முல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்.
- அணை பாதுகாப்பை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு
ஒரே நாளில் 'நெட்', டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள்: குழப்பத்தில் பட்டதாரிகள்
'நெட்', டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால், 'எந்த தேர்வை எழுதுவது'
என, பட்டதாரிகள் குழப்பத்தில் தவிக்கின்றனர். கல்லூரி
விரிவுரையாளர்களுக்கான, மத்திய அரசின், தேசிய தகுதித்தேர்வு
('நெட்'-நேஷனல்எலிஜிபிலிட்டி டெஸ்ட்) ஜூன் 29ல் நடக்கிறது. அன்று, தமிழக
அரசின் 'குரூப் 2' தேர்வும்நடக்கிறது. இரண்டு தேர்வுகளுக்கும், தமிழகத்தில்
ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், எதில் பங்கேற்பது என்ற குழப்பம்
ஏற்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?
இந்த ஆண்டுக்கான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, பிளஸ்
2 தேர்வு முடிவுகள், வரும் 26ம் தேதி
வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி (FBF) பெறுவது எப்படி?
நல நிதி திட்டத்தைப் போலவே,
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான காப்பீடு
திட்டம் குறித்து தமிழக அரசு கடந்த
ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ஓர்
அரசாணை வெளியிட்டது. அந்த திட்டத்தின் கீழ்
ஓய்வூதியர்கள் 4 ஆண்டுக்கு ஒருமுறை ரூ.2 லட்சம்
வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும். இதற்கு
ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்யப்படாது.
மாதிரி பள்ளிகளுக்கு மே 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாதிரி பள்ளிகளுக்கு மே 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
25 சதவீத ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளுக்கு 3 மாதங்களில் கட்டணம் திருப்பி வழங்கப்படும்
தனியார்
பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான
கட்டணம் மூன்று மாதங்களில் திருப்பி வழங்கப்படும் என தனியார் பள்ளி
நிர்வாகிகளிடம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை செவ்வாய்க்கிழமை
உறுதியளித்தார்.
சுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவரை சேர்க்க மே 18 வரை விண்ணப்பம்
சுயநிதி
பள்ளிகளில் ஏழை மாணவரை சேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.
மெட்ரிக் உள்ளிட்ட பள்ளிகளில் 25% இடம் ஏழை மாணவர்களுக்கு சட்டப்படி
ஒதுக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டது. விண்ணப்பம் அந்தந்த பள்ளியில்
மட்டுமின்றி கல்வித்துறை அலுவலகத்திலும் விநியோகிக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது
தனியார் பள்ளிகளுக்கு ரூ.25 கோடி வழங்க அரசு ஒப்புதல் 25% ஒதுக்கீட்டில் நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின்
கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான செலவு தொகை ரூ.25 கோடியை தமிழக அரசு
வழங்கும் என்று உறுதி அளித்ததை அடுத்து தனியார் பள்ளிகளில் நாளை முதல்
மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கைக்கு புதிய அட்டவணை வெளியீடு
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை
நடத்துவதற்கானபுதிய அட்டவணையை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு
உள்ளது.
வெயிட்டேஜ்' மதிப்பெண் குளறுபடி: பட்டதாரிகள் பாதிப்பு
ஆசிரியர்
பணி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அரசு கல்லூரியில் பயின்ற
பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினரை கட்டுப்படுத்தாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி
கல்வி உரிமை சட்டம், அரசியல்
சாசன சட்டப்படி செல்லத்தக்கதே. எனினும், அந்தச் சட்டம், அரசிடமிருந்து
நிதியுதவி பெறும் அல்லது நிதியுதவி
பெறாத, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது'
என, சுப்ரீம் கோர்ட்டின், அரசியல் சாசன பெஞ்ச்,
நேற்று உத்தரவிட்டது.
ஆசிரியர் நியமன வழக்குகளை விரைவாக முடிக்க வலியுறுத்தல்
மாணவர்கள்
நலன் கருதி, ஆசிரியர் நியமன
வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க, தமிழக அரசு, நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என, முதுகலை தேர்வர்கள்,
கோரிக்கை விடுத்துள்ளனர்.