Half Yearly Exam 2024
Latest Updates
உலகின் பணக்காரக் கிராமம்......மதாபர்!
இந்தியா என்பது கிராமங்களின் தொகுப்புதான். இந்திய கிராமங்களைப் பற்றி
எழுதுவது என்றால், ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் எழுதலாம். அவ்வளவு
பொக்கிஷங்களை அவை புதைத்துவைத்திருக்கின்றன. எனினும், குஜராத்தின் மதாபரும்
தேசாரும் எதனாலோ திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்!
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசித்திரமான பொதுநல வழக்கொன்று
வந்தது. உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள மனுநீதிச் சோழன் சிலையை அகற்ற
வேண்டுமென்று கோரப்பட்டது. மனுநீதிச் சோழன் பற்றிக் கூறப்படும் கதையிலுள்ள
சம்பவங்கள் தற்போதைய சட்டத்துக்கு ஒவ்வாதவை என்றும் கூறப்பட்டது. உயர்
நீதிமன்றம் அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது.
உண்மையிலேயே மனுநீதிச் சோழன் தனது மகனைக் கொல்ல உத்தரவிட்டது தற்போதைய
நீதிமன்ற நடைமுறையில் சாத்திய மில்லை. மன்னராட்சியில் நிர்வாகத்தையும்
நீதித் துறையையும் அரசன் ஒருவனே கையாண்டிருந்தாலும், தற்போதைய அரசமைப்புச்
சட்டப்படி நீதித் துறைக்கும், நிர்வாக இயந்திரத்துக்கும் அதிகாரப்
பங்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, நீதிபதியே விரும்பினாலும் தன்னுடைய
மகனுடைய வழக்கை அவர் விசாரிக்க முடியாது.
7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை
இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பிரபல மூத்த வழக்கறிஞர் இரட்டைப்பட்டம் சார்பாக வாதாடுகிறார்
பாட வாரியாக தேர்ச்சி விவரப் பட்டியல்: டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர் எதிர்பார்ப்பு
'பாடங்கள் வாரியான தேர்ச்சி விவரப்
பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்,' என, டி.இ.டி.,
தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஓட்டு எண்ணும் ஊழியர்கள் குலுக்கல் முறையில் தேர்வு
தமிழகத்தில், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள, 16 ஆயிரம் ஊழியர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: புதிய அட்டவணை வெளியிடாததால் குழப்பம்
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக,
மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், புதிய அட்டவணையை வெளியிடவில்லை. இது, தனியார்
பள்ளிகளுக்கு, சாதகமாக அமைந்துள்ளது.
10ம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லை: இந்த ஆண்டிலும் பழைய பாட திட்டமே தொடரும்
வரும், கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பில்
(எஸ்.எஸ்.எல்.சி.,) முப்பருவ கல்வித்திட்டம் கொண்டு வரப்படும் என, பள்ளிக்
கல்வித்துறை அறிவித்த நிலையில், அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்திட்டத்தை
செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், பழைய பாடத்திட்டத்தின்
படி, பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணியை கல்வித்துறை துவக்கி உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை
ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்
தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச
புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி
முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான
புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்த தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: திருவள்ளுவர் பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு
விடைத்தாள்களை திருத்த, தகுதியான
ஆசிரியர்களை நியமிக்கும்படி, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு, சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியை பூங்கொடிஉட்பட 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியை பூங்கொடிஉட்பட 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரவீண்குமார் தகவல்
CBSE: JEE MAIN தேர்வு முடிவுகள் வெளியீடு
ஜெஇஇ மெயின் தேர்வு ஆன்லைன் வழியாகவும், ஆப்லைன் வழியாகவும் நடத்தப்பட்டன. ஏப்.,19ம் தேதி ஆன்லைன் வழியாக தேர்வு நடந்து முடிந்தன.
இத்தேர்வில் 50 சதவீத மாணவர்கள் சிறப்பு ஒதுக்கீட்டு மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்டு,தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு மொத்தம் 13.57 லட்ச
மாணவர்கள் தேர்வெழுத பதிவு செய்திருந்தனர். அவற்றில் பிரிவு வாரியாக
ஆப்லைன், மற்றும் ஆன்லைன் வழியாக தேர்வு நடந்து முடிந்தது.
தலைமைஆசிரியரிடம் அனுமதிபெற்றால் போதும் - அரசாணை
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் உயர்கல்வி பயில தலைமைஆசிரியரிடம் அனுமதிபெற்றால் போதும். என்பதற்கான. அரசாணை.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கோர்ட்களில் அரசு வக்கீல்கள் அவசியம் : ஐகோர்ட் அறிவுரை
பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின்
கீழ், பதிவான வழக்குகளை விசாரிக்கும் கீழ் கோர்ட்களில் ஆஜராக, மாநில அரசு
சிறப்பு வக்கீல்களை நியமிக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை
அறிவுறுத்தியுள்ளது.
இணையதளம் வழியாகவும் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
நடப்பு கல்வி ஆண்டில் பி.இ.
படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலை நேற்று வெளியிட்டது. அதன்படி
இன்று 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட
மையங்களில் விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.
திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு
கல்வி உதவித் தொகை பெறத்
தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில்
நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின்
முடிவு வரும் 5-ம் தேதி
(திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக
அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை
வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்
பிற மாநிலங்களில், எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாக நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது. 2012ல் நடந்த, முதல் தேர்வில் இருந்து, தற்போது வரை, குளறுபடி தொடர்கிறது.
TNPSC - பொது அறிவு
* தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்விமுறை சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கலானது எப்போது?
தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த
பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய
வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.
ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விவரங்கள் படிப்புகளில் சேர்க்கப்பட வேண்டும்: யுஜிசி
ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புகள் குறித்த
விவரங்களை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு
(யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்களையும் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய காசோலைகளைப் பயன் படுத்துவது கட்டாயமாகிறது.
வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய காசோலைகளைப் பயன் படுத்துவது ஜனவரி முதல் கட்டாயமாகிறது.
அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை60ஆக தமிழக அரசு உயர்த்த திட்டம்?
தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 1லட்சத்து 45000க்குமேல் அர்சு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளதாகவும், அவர்களின் ஓய்வுக்கால பணப்பலன்கள் என பல லட்சங்கள்
வழங்க வேண்டி உள்ளதால் அவர்களுக்கு வழங்கவேண்டிய தொகை கணக்கிட்டு பார்த்ததில் இவ்வாண்டு தமிழக
அரசுக்கு தாங்க முடியாத நிதிச்சுமை
ஏற்படும் எனக்கணக்கிடப்பட்டுள்ளதாகவும்
அச்சுமையை 2 ஆண்டுக்கு தள்ளிப்போடும் விதமாக ( சட்டசபை தேர்தலுக்கு பின்பு புதிய அரசு அமைந்தபின் நிதிச்சுமையை
சமாளிக்கவும் ,அதற்குள் இரடண்டாண்டுகளில் அரசின் வருவாய் பெருக்க
திட்டங்கள் வகுப்பதன் மூலமாகவும்,சமாளிக்கலாம் என்பதற்காக) அரசு ஊழியர் ஆசிரியர்களின்
ஓய்வு பெரும் வயதை 60ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு
அதன் மீது நிதித்துறை ,பணியாளர் நலத்துறை மட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட்டு
முதல்வரின் முடிவுக்காககோப்பு தயாராக உள்ளதாக
தகவல்............