Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.பி.எஸ்.இ. புதிய பாடங்களை ஏற்றுக்கொள்ள பல்கலைகளுக்கு யு.ஜி.சி. கடிதம்

             சி.பி.எஸ்.இ. அமைப்பு, பள்ளி மேல்நிலைப் படிப்பில் அமல்படுத்தியுள்ள 13 புதிய பாடங்களை, இளநிலைப் பட்டப் படிப்பில் ஏற்றுக்கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.

மே.2-ம் தேதி முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக MBBS, BDS சேர விண்ணப்பம்!

      மே.2-ம் தேதி முதல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்பம்.

தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் பதிவு செய்வதில் தாமதம்


              தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய தாமதமானதால் மாவட்டத்தின் கடைகோடியிலிருந்து வந்தவர்கள் விண்ணப்பம் கொடுக்க முடியாமல் தவித்தனர். கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களை, கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வழங்கி அவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கல்வித் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 

8-ம் வகுப்பு மாணவர் திறனாய்வுத் தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியீடு.

          அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ‘என்.எம்.எம்.எஸ்.’ (நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்) என்ற சிறப்பு திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை : மீண்டும் ஜூன் 2ஆம் தேதி திறப்பு

      கோடை விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) மே 1ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட உள்ளது.

Deployment Regarding

          Excess BTs/ SGT Details Called by DEE | ஊராட்சி/ நகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2013ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைப் படி உபரியாக உள்ள இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு

TNTET New Weightage - Marks Entry Form Publish Soon.

          பாடசாலை வலைதளம் தேர்வர்களின் மதிப்பெண் விவரங்களை தங்களாகவே ஒப்பிட்டு கொள்ளும் வகையில் படிவம் வெளியிட உள்ளோம். நீதிமன்ற அறிவுரையின் படி புதிய Weightage முறை இறுதி செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டவுடன் இந்த புதிய ஒப்பீட்டு படிவம் வெளியிடப்படும். 

TNTET: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண்

           தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. 
 

ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’


           உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது.

அரசு ஊழியர் ஜிபிஎப் வட்டி 8.7% ஆக நீடிக்கும்

          அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 

ஒரு மாணவர் கூட பாஸாகாத 54 முன்னணி என்ஜினியரிங் காலேஜ்கள்... அதிர்ச்சியில் பெற்றோர்

          தமிழகத்தில் உள்ள 54 பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள், பள பளா கட்டடங்கள் என்று தமிழகத்தில் புற்றீசல் போல நூற்றுக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் தரம் என்னவோ மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. இதனை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது கடந்த வாரம் வெளியான அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள். அதன்படி, இந்த ஆண்டில் முதல் செமஸ்டரில் 54 கல்லூரிகளில் ஒருவர் கூட பாஸ் ஆகாத கொடுமை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இதற்கு என்ன காரணம் என்பது தான் தெரியவில்லை.
 

கூடுதலாக சிறப்புப் பள்ளி திறக்க மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை: முதல்வருக்கு கடிதம்


         மாற்றுத் திறனாளிகளுக்காக கூடுதல் பள்ளிகள் திறப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலை. அதிரடி: சொத்து கணக்கு காட்ட உத்தரவு; ஆசிரியர் - ஊழியர்கள் அதிர்ச்சி


          அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் சொத்து விவரத்தை அளிக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் பல்கலை நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 13 ஆயிரத்து 500 ஆசிரியர்கள், ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசுஎடுத்த உடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தமிழக அரசின் முதன்மை செயலாளருமான ஷிவ்தாஸ் மீனா நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் அதிரடி நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக நிதி நிலைமையை ஓரளவு சரி செய்தார்.

INDIAPOST : POSTAL ASSISTANT / SORTING ASSISTANT EXAM 2014



Schedule of Examination (Paper I) for the following Postal Circles is as follows:
Postal Circles
Exam Date
Exam Time
Tamil Nadu (29)             
11-May 2014
10:00AM to 12:00 NOON
Maharashtra (24), Uttarakhand (31)             
11-May 2014
02:00PM to 04:00 PM

        Candidates may download the Admit Cards for above stated Postal Circles by Logging into the website. Please keep visiting the website for exam schedules for other Postal Circles & updates.

TNTET - 5% மதிப்பெண் தளர்வினை 2012 க்கு விரிவுபடுத்தினால் குழப்பம் ஏற்படும்

         TET ஆசிரியர் தேர்வில், 2013 தேர்வுக்கு அரசின் 5 மதிப்பெண் சதவீத தளர்வு செல்லும்.2012 க்கு விரிவுபடுத்தினால் குழப்பம் ஏற்படும், என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


TNTET - கிரேடு' முறையை ரத்து செய்து அறிவியல் பூர்வமான புதியமுறையினை அரசு பரிசீலிக்க உத்தரவு


      ஆசிரியர் தேர்வில், ','கிரேடு' முறையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.அறிவியல் பூர்வமான புதியமுறையினை அரசு பரிசீலிக்க உத்தரவு !

TNPSC - குரூப் 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்...


         குரூப்-2-ஏ பணிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2269 பணியிடங்களுடன் மேலும்  புதியதாக மேலும் 577 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது...
 

ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் பழைய முறை ரத்து-Dinamani


           ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNTET: ஆசிரியர் தேர்வில் 'கிரேடு' முறை ரத்து: ஐகோர்ட்

         ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட, 'கிரேடு' முறையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
 

பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி

     பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி: பல்வேறு வழக்குகளால் கையைப்பிசைகிறது கல்வித்துறை.

கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு

    தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை,  தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

200 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

       ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் 200 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு


நூறு விதமான சாதனைகள் நிகழ்த்திய உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகள்

உலக சாதனை நிறுவனம் பரிசுகள் வழங்கி கவுரவிப்பு

         விழுப்புரம் அருகே உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள், ஒரே நேரத்தில் நூறு விதமான சாதனைகளை நிகழ்த்திக்காட்டி உலக சாதனை நிறுவனம் சார்பில் பரிசு பெற்றனர்.

தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள்: மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்

            தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் கிடங்கில் இருந்து அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும், பாடப்புத்தகங்களை பிரித்து, லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அச்சகங்களில் இருந்து நேரடியாக அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பிளஸ் 2 பாடப்புத்தகங்களை, பிளஸ் 1 ரிசல்ட் வெளியிட்ட பிறகு தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குவார்கள்.
 

கணித மேதை காஸ் அவர்களின் பிறந்த தினம்...



கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்

       கணித உலகத்திலேயே எல்லாக் காலத்திய கணித இயலர்களுக்கும் மேல்படியில் வைக்கப்படும் சிறந்த கணித வல்லுனர்.


8ம் வகுப்பு தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

           எட்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மே 1ம் தேதி அன்று பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள், தனித் தேர்வர்களாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால், ஆன்லைன் மூலம் மே 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை தேர்வுத்துறை அமைத்துள்ள மண்டல மையங்களுக்கு நேரில் சென்று தேர்வுத் துறை இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

TNTET வழக்கு தள்ளுபடி - ஜெயா+ செய்திகள்...


          தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது. - ஜெயா+ செய்திகள்...

  1. இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார். மேலும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த மதிப்பெண் தளர்வினை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ததாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்..
  2. 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு குறித்து வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் ”இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது” என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார். 

TNTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet, மதிப்பெண் % கொடுத்தால் போதும்..


புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Click Here For Excel File Download


TNTET - New weightage கணக்கிடும் முறை


தாள் இரண்டுக்கு கணக்கிடும் முறை :

முதலில் உங்களின் +12 மதிப்பெண்
உதாரணமாக  1050,   1050/1200*100=87.5      87.5/100*10=8.75
 பட்டம்         52%  so                                                  52/100*15=7.8
பட்டயம்     86%                                                        86/100*15=12.9
TET         102                 102/150*100=68                    68/100*60=40.80

TOTAL                                                                                              70.25.

இதைப் போன்றே தாள் 1 க்கும் கணக்கீட்டு கொள்ளவேண்டும்.

TET JUDGEMENT ANNOUNCED

          TET CASES JUDGEMENT HAS ANNOUNCED 2012 CANDIDATES 5% CAN NOT GIVE RELAXATION. BECAUSE THAT PROCESS ALREADY FULLY COMPLETED. 2013 CANDIDATES 5% STANDS CORRECT. WEIGHTAGE SHOULD CONSIDER SCIENTIFIC METHOD (INSTEAD OF MECHANICAL METHOD) 12th obtained marks converted to 10 eg. 85% = 8.5 marks degree converted to 15 eg. obtained percentage/ 100 X 15 B.ed obtained percentage/ 100 X 15 tet mark= obtained tet mark/150 X 60

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு - தினகரன்

         அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் முகாம்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள்களையும் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive