அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து
வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் முகாம்களுக்கு
அனுப்பப்பட்ட நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1
வகுப்பு விடைத்தாள்களையும் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய பள்ளி
கல்வித்துறை உத்தரவிட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
பெண் ஊழியர் தேர்தல் பணிக்கு நியமித்தது தொடர்பாக RTI தகவல் கேட்டு TNHHSSGTA கடிதம்
பெண் ஊழியர் தேர்தல் பணிக்கு நியமித்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கேட்டு TNHHSSGTA கடிதம்
தேர்தல் பணியில் மரணம் - நிவாரணம் கோரி கலெக்டர் கடிதம்
தேர்தல்
பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மரணமடைந்ததை அடுத்து, அவர்களுக்கு
நிவாரணம் வழங்கக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு, கலெக்டர் கடிதம்
அனுப்பியுள்ளார். தமிழகத்தில், தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் என, 6 லட்சம் பேர் ஈடுபட்டனர். அவர்களுக்கு, கிரேடு
அடிப்படையில், ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட்டது. மேட்டூர், கொளத்தூர்
பெருமாள் கோவில் நத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராசு, 44, தர்மபுரி,
கொளத்தூர் கே.பள்ளிப்பட்டி ஓட்டுச்சாவடியில் பணியாற்றினார்.
30 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க டெண்டர்
அரசு
பஸ்களில் பயணிக்கும், 30 லட்சம் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் தயாரிக்கும்
பணிக்கு, இந்திய சாலை போக்குவரத்து நிறுவனமான, ஐ.ஆர்.டி., சார்பில்,
டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
கல்வி கட்டண விவரம் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை
அரசின் கல்வி கட்டண விவரபட்டியலை, பள்ளிகள் நோட்டீஸ் போர்டில், பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி கட்டண விவரங்களை எழுதி வைக்க வேண்டும்: பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவு
தனியார் பள்ளிகளின் வெளியே கல்வி கட்டண
விபரங்களை தெளிவாக எழுதி வைக்க வேண்டும்‘ என கல்வி அதிகாரிகள்
உத்தரவிட்டுள்ளனர். கோடை விடுமுறைக்கு பின் வகுப்புகள் ஜூன் 2ம் தேதி
திறக்கப்பட உள்ளன. பிளஸ்2 ரிசல்ட் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிக்
பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம்
நேற்று அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள்
முன்னிலையில் நடந்தது. இதில், பிளஸ்2 ரிசல்ட் வரும் 9ம் தேதி வர உள்ளதால்,
மாணவர்களின் பதிவு எண் தொடர்பாக எந்த குழப்பங்களும் இருக்கக்கூடாது.
எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் கலக்கம்
தமிழகத்தில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு
பொதுத்தேர்வு முடிந்த கையோடு விடைத்தாள் திருத்தும் பணியும் மும்முரமாக
நடந்தது. விரைவாக திருத்தும் நோக்கத்துடன் கூடுதல் ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும்
அழைப்பு விடுக்கப்பட்டது. பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏற்கனவே கடந்த 10ம் தேதியே
திருத்தி முடிக்கப்பட்டன. இதுபோல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான
விடைத்தாள்களும், பெரும்பாலான மையங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக திருத்தி முடிக்கப்பட்டன.
பள்ளிகளில் நுழைவு தேர்வு: அரசு எச்சரிக்கை
கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நுழைவுத் தேர்வு வைத்து மாணவர் சேர்க்கை நடத்தியதால் பெற்றோர் அதிருப்தி
அடைந்தனர். கோவை டவுன்ஹால் பகுதியில் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், வரும் கல்வியாண்டில் 6 முதல் 9ம்
வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு நேற்று நுழைவுத் தேர்வு நடந்தது. இதற்கு,
பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது தமிழகத்தில் தனியார்
பள்ளிகளில் கூட மாணவர் சேர்க்கை நடத்திட, மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று கல்வித் துறை தெரிவித்துள் ளது.
தேர்தல் முடிந்தும் ஊதியம் கிடைக்கவில்லை: அதிருப்தியில் அரசு ஊழியர்கள்
மக்களவை தேர்தலில் பணியாற்றிய, தமிழ்நாடு
சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, இதுவரை ஊதியம்
வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மீண்டும் சூடு பிடிக்கும் இரட்டைப்பட்ட வழக்கு
2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தம் முடி
வடைந்த விட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது .ஓராண்டு பட்டம்
பெற்றவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்பு மிகு
நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளனர்.அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதி
மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .அந்த மனுவில் கூறியுள்ளதாவது.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று....
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்”
என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர்
பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்தவர் பாவலரான பாரதிதாசன் அவர்கள்.
மே 14 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பணி வரன்முறை இல்லை பரிதவிக்கும் ஆசிரியர்கள்; அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் நிறைவு
அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர்
கழகத்தின் கீழ் பணியாற்றி வந்த, 271 பேர் பணிநிரந்தரம் செய்யவுள்ளதாக,
தமிழக அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் கடந்தும், எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படவில்லை.
கோடை விடுமுறைக்கு சம்பளம் இல்லை!; பகுதி நேர ஆசிரியர்கள் கவலை
பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மே மாதத்தில் வருகிறது "ரிசல்ட் வெள்ளி'கள்
மே
மாதத்தில், தொடர்ந்து மூன்று வாரமும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமை
வெளிவருவது, அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது.
விடிய, விடிய பஸ் ஸ்டாண்டில் பரிதவித்த பெண் ஊழியர்கள் (ஆசிரியைகள்)
தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், நடு இரவு,
இரண்டு மணிக்கு விடுவிக்கப்பட்டதால், பெண் ஊழியர்கள் விடிய, விடிய, ஈரோடு
பஸ் ஸ்டாண் டில், பஸ் இல்லாமல் பரிதவித்தனர்.
மாணவர்கள் "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு எளிது : தாமதத்தை தவிர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கை
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
பெறும் மாணவ, மாணவியர், தேர்வு முடிவிற்குப் பின், அந்தந்த பள்ளிகளிலேயே,
தாமதம் இன்றி, உடனுக்குடன், "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு செய்ய,
கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
TRB PG TAMIL/TNPSC தொல்காப்பியம் 1
தொல்காப்பியம்
தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.