தனியார்
பள்ளிகள், மாணவர் சேர்க்கை நடத்திட, அவர்களுக்கு, நுழைவுத் தேர்வு
நடத்தக்கூடாது. மீறி, நுழைவுத் தேர்வு நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளிகள்
மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம்
தெரிவித்து உள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில்
(ஆர்.டி.இ.,), பள்ளிகளுக்கான விதிமுறைகள் குறித்து, பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில்
இயங்குவதால், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கு
தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக
மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு, கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் அதிகபட்சம் 10 மணி நேரம்
வரையும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது.
தமிழ்நாட்டில்
பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி முடிவுக்காக
காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் கலை அறிவியல் படிப்பில்
சேரும் வழக்கம்தான் நடைமுறையில் உள்ளது.
10-வது மற்றும் 12-வது வகுப்பு முடித்த
மாணவர்களுக்கு அவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கு ஆலோசனை நிகழ்ச்சி ஒவ்வொரு
மாவட்டத்திலும் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்டதால் வாக்களிக்கும் உரிமையை இழந்த ஆசிரியர்கள். மௌனம் காத்த தேர்தல் ஆணையம்; TNPTF கண்டனம்
தேர்தல் பணி என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தேர்தல்
ஆணையத்திடம் நேரில் புகாரளிக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு
தஞ்சை லோக்சபா தொகுதியில், ஓட்டுப்பதிவு
மையத்தில், ஓட்டு இயந்திரத்தில் உள்ள சீல் உடைக்கப்படவில்லை. இயந்திரம்
வைக்கப்படும் பெட்டிக்கு மேலுள்ள சீல் தான், மண்டல தேர்தல் அலுவலரால்
உடைக்கப்பட்டுள்ளது, என, தஞ்சை கலெக்டர் சுப்பையன் கூறினார்.
மே 5ம் தேதி மாவட்டம் முழுவதும் 11ம் வகுப்பிற்கு ரிசல்ட் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
மாவட் டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 991 பேருக்கு
சான்றிதழ் சரிபார்க்கும் பணி 6-ந்தேதி தொடங்கு கிறது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல்நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து தேர்தல்
நடத்தை விதிமுறைகளில்தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.
திமுக
ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து
தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்காக 3 நாள் பயிற்சிக்கு சென்ற
ஆசிரியர்களுக்கு கலெக்டர்கள் உரிய பணம் வழங்கவில்லை. தேர்தல் பணிக்கான
உத்தரவிலும் குழப்பம் இருந்ததால் பல இடங்களில் ஆசிரியர்கள் தேர்தல் பணியில்
ஈடுபட முடியவில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட
வாக்குச்சாவடிகளில் பூத் அதிகாரி உள்ளிட்ட பணிகளில் அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட
மாணவர்களைக் கொண்ட ஒரு பொறியியல் கல்லூரி கூட, 2013 - 14ம் கல்வியாண்டில்,
முதல் செமஸ்டரில், 90%க்கும் மேற்பட்ட தேர்ச்சி சதவீதத்தை அடையவில்லை என்று
தெரியவந்துள்ளது.
ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன.
இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம்
வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியில், பங்கேற்காத ஆசிரியர்கள் குறித்த விவரப் பட்டியல், மாவட்டம் வாரியாக தாயாரகிறது.
வரும், மே 9ல் வெளியாகும்,பிளஸ் 2 தேர்வு முடிவை,நான்கு இணையதளங்களில்,
தேர்வுத்துறை வெளியிடுகிறது;
"பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும்
மறுகூட்டலுக்கு, மே 9 முதல், 14 வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை
இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.
வரும், மே 9ல் வெளியாகும், பிளஸ் 2 தேர்வு
முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது; முகவரிகளை,
தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று வெளியிட்டார்.
சிவகங்கையில் தேர்தல் பணியில் கிட்டதட்ட
5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதில் 20 சதவீத ஆசிரியர்கள்
சமுதாய கூடத்தில் அவசர உதவிக்காகவும், மாற்று பணிக்காகவும் தடுத்து
வைக்கப்பட்டனர். இதில் 80 சதவீதம் பெண் ஆசிரியர்கள். இச்சமுதாய கூடத்தில்
இயற்கை உபாதை கழிக்க கூட வசதி செய்து தரப்படவில்லை. இருந்தாலும் கூட தேச
பணிக்காக அனைத்தையும் பொறுத்து கொண்ட ஆசிரியர்கள் பொறுமை காத்தனர்.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்!
அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகே உள்ள
பால்காரர் சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மத்திய பாதுகாப்பு படையில்
பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி(வயது48).அரக்கோணம் குமினிபேட்டை அரசு உயர்நிலை
பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு சிவராஜ் என்ற மகன், சசிகலா(22) என்ற மகள் உள்ளனர்.
வரும் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலையை
எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 5
நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்துள்ளது.
தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார்.
பள்ளிக்கல்வி -
பள்ளிக்கல்வித்துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத
பணியாளர்களுக்கு 2014-15ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக
பணி நியமனம் வழங்குவது - தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல் சார்பு
இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை
உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தொடப்பட்டுள்ளது. இவ்வழக்கு வருகிற மே 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற, மேலும் 90 பேர் பட்டியலை யு.பி.எஸ்.சி. வெளியிட்டது.
அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி பிரிவுக்கு மாணவர்கள் சேர்க்கையை
அதிகரிக்கும் நோக்கில், ஆசிரியர்கள், விழிப்புணர்வு பிரசாரத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் பள்ளி ஒன்றுக்கு 20 மாணவர்களை சேர்க்க தலைமையாசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கோட்டத்தில் காலியாக உள்ள, கிளை தபால் அலுவலர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்தூக்கு தண்டனை
கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆயுள்தண்டனைக் கைதிகள் நளினி,
ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக
அரசின் முடிவுக்கு எதிராகமத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச
நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல்25) தீர்ப்பு அளிக்கவுள்ளது.
அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற,அரசுக்கு
உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டு
உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின.தருமபுரியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது
"வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்காக, மே,
3ம் தேதியில் இருந்து, 20ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்கப்படும்' என, அண்ணா
பல்கலை, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.