Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்திய அரசியல் அமைப்பு - TNPSC தேர்வுகளுக்காக


1. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர் மாளிகை). 
2. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' 

தேர்தல் பணி: ஆசிரியைகள் அச்சம்


          நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 81 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் 10 கோடி பேர் புதிய வாக்காளர்கள். இந்த முறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து வருவதாலும், வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் கமிஷனின் நோக்கம் நல்ல நோக்கம்தான்.

எச்சரிக்கை: இணையத்தை கண்காணிக்கிறது இந்திய அரசு!

           “உங்கள் மனதில் என்ன இருக்கிறது?” என்பதை பகிர்ந்து கொள்ளச் சொல்லி கேட்கிறது பேஸ்புக். “புதிதாக உள்ளதைப் பகிர்க…” என்று அன்பாகச் சொல்கிறது கூகுள் பிளஸ். நீங்களும் நட்பு, காதல், மொக்கை, சினிமா என்று பகிர்ந்து கொண்டால் பிரச்சினை இல்லை. பெரும்பான்மையினரும் அப்படித்தான் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மே மாதம் முதல் பிஎஸ்என்எல் இன்டர்நெட் வாடகை உயர்வு:

சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

           வீடுகளுக்கான தொலைபேசியுடன் கூடிய அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட் சேவை திட்டங்களுக்கான ஊரக திட்டம் & 500, 950 ஆகியவற்றுக்கான மாதந்திர வாடகை மே 1ம்தேதி முதல் உயர்த்தப்படுகிறது.

இலவச இன்டர்நெட்: ஏர்டெல் புதிய சேவை

           வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களை அறியும் பொருட்டு ஏர்டெல் நிறுவனம் இலவச இன்டர்நெட் சேவையை தந்துள்ளது.
 

12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் : தேர்தல் ஆணையம்.


        வரும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டை தவிர12 இதர ஆவணங்களில் ஒன்றியை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

சி.எம்.எஸ்., தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் - யு.பி.எஸ்.சி அறிவிப்பு.

             UPSC நடத்தும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு(CMS) முற்றிலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

            வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன.

ஒவ்வொரு தேர்விலும் 1.5 கோடி பக்க விடைத்தாள் வீண்.

               பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தேர்வையும், 15 பக்கங்களில் எழுதி முடித்து விடுவதால், ஒவ்வொரு தேர்விலும், 1.5 கோடி பக்க விடைத்தாள் வீணாகி வருகிறது.
 

SSLC - பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை நிர்ணயிக்கும் பாடம் - கணிதம்!


            தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி துவங்கியது. இந்தத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை முதல் துவங்குகிறது. இதில் 750 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.


முடிந்தன பொதுத்தேர்வுகள் தேர்ச்சி 90 சதவீதத்தை தாண்டும்

             பள்ளி பொதுத்தேர்வுகள், நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்கி, 20ம் தேதி வரை, 66 மையங்களில் நடக்க உள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால், இரு தேர்வுகளிலும், தேர்ச்சி, 90 சதவீதத்தை தாண்டும் என, கல்வித் துறை எதிர்பார்க்கிறது.

அனுமதி பெறாத பாட புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்குனர் எச்சரிக்கை.


          பொது கல்வி வாரியத்தின் அனுமதி பெறாத பாட புத்தகங்களை, சில தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதாக, புகார் வந்துள்ளது.
 

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீதம் தெரிவிக்க ஏற்பாடு.


           ஓட்டுப்பதிவு நாளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தைஓட்டுச்சாவடி அலுவலர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

செவ்வாயை நோக்கிய பாதையில் பாதி தொலைவை கடந்த மங்கள்யான்


         செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பாதையில் மங்கள்யான் விண்கலம் பாதி தொலைவைக் கடந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம்(இஸ்ரோ) அறிவித்துள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேர் சம்பளம் பெறுவதில் சிக்கல்

        அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிதித்துறை நிதி ஒதுக்கீடு உத்தரவு இருந்தால் மட்டுமே சம்பளம் பெற முடியும், என கருவூலகத்துறை அறிவித்துள்ளதால் 35 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலையில் 636 ம், ஆயிரத்து 99 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
 

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு மிக, மிக எளிமை

       'பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில்,கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும், மிக,மிக எளிமையாக இருந்தன.இதனால்,சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கூட, 75 சதவீத மதிப்பெண் பெறலாம்,' என மாணவர்கள் கூறினர்.

கல்விக்கடன் பெற பணிந்து போக வேண்டுமா?

         வங்கியில், கல்விக்கடன் பெற, பணிந்து போக வேண்டியது அவசியம் என, வங்கி அதிகாரி குறிப்பிட்டது, புண்படுத்தும் செயல்' என, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழுவின், முன்னாள் உறுப்பினர், மோகன் தெரிவித்துள்ளார்.
 

தபால் ஓட்டு போடாதவர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை

         தபால் ஓட்டு போடாதவர்கள் மற்றும் செல்லாத ஓட்டு போடுபவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ் : மாணவர்களுக்கு பெற்று தர உத்தரவு

            பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் பெற்றுத்தர அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
 

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

          நாடாளுமன்ற தேர்தலில் 18 வயது முடிந்து முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் வரும் 24ம் தேதிக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். இதற்கு காரணம், தான் 18 வயதை கடந்துவிட்டோம் என்ற எண்ணம், ஓட்டுப்போடும் உரிமை கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, இந்திய அரசியலில் தனக்கு ஏற்பட்டுள்ள பங்கு போன்றவையே.
 

தேர்தல் அன்று மாதிரி ஓட்டுப்பதிவு: தேர்தல் கமிஷன் உத்தரவு

          வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தவேண்டும்,” என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலை இலவச கல்வி திட்டம்

         சென்னை பல்கலை இலவச கல்வித் திட்டத்தில், இளங்கலை பயில விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்த, 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேர்தல் பணி மாணவர்களுக்கு ரூ.900 சம்பளம்

      லோக்சபா தேர்தல் நாளில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 'லேப்--டாப்' கையாளும் பணியில், அரசு கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த பணிக்காக மாணவர்களுக்கு, 900 ரூபாய் ஊதியம் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தங்களது கடமையை சரியாகச் செய்யாவிட்டால் நடவடிக்கை - தேர்தல் ஆணையர்

            தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தங்களது கடமையை சரியாகச் செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையர்

பிளஸ் 2-வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவார்கள்

          பிளஸ் 2 தேர்வில் கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கான பயிற்சி ஏட்டிலிருந்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டதால் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்று கல்வித்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சி.எம்.எஸ்., தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் - யு.பி.எஸ்.சி அறிவிப்பு

         UPSC நடத்தும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு(CMS) முற்றிலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன மலேசிய விமானத்தை தேடும் பணியின்போது மீண்டும் சமிக்ஞை கிடைத்தது.


         காணாமல்போன மலேசிய விமானத்தை தேடும் பணியின்போது மீண்டும் சமிக்ஞை கிடைத்தது.ஆஸ்திரேலிய ராணுவ கப்பலான ஓசியன் சீல்டுக்கு நேற்று இருமுறை சமிக்ஞை கிடைத்துள்ளது.
 

மாணவர்களை கவர புதிய சிறப்பு ப்ரீபெய்டு திட்டம் : பி.எஸ்.என்.எல். அறிமுகம்...

     குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கான புதிய ப்ரீபெய்டு திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
 

பென்ஷன் பெற 58 வயதானதும் தகவல் தர ஏற்பாடு.

         தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சந்தாதாரர்களாக உள்ளவர்கள்,தொழிலாளர் பென்ஷன் திட்டம் 1995ன் கீழ், 58 வயது பூர்த்தியானதும் பென்ஷன் பெற முடியும்.
 

வாய்ப்பு கொடுங்கள்! செய்து காட்டுகிறோம்! - பகுதி நேர ஆசிரியர்கள்


புறக்கணிக்க படும் பகுதி நேர ஆசிரியர்கள்

           அன்பு நண்பர்களே விழுப்புரம் மாவட்ட அரசு தேர்வு பணிக்கு பகுதி நேர கணினி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்ட்டுள்ளார்கள். ஆம் அணைத்து தகுதிகளும் இருந்தும், முறையான பணி ஆணை முதன்மை கல்வி அலுவலர்களால் பெறபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் அதே முதன்மை கல்வி அலுவலர்களால் புறக்கணிக்க படும் இந்தநிலை நடக்கிறது. 


அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு

     அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பு டி.இ.டி., தேர்வு: 22க்குள் 'ஹால் டிக்கெட்'

          சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,), 'ஹால் டிக்கெட்' 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பில், 'மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு, மே 21ம் தேதி, 32 மாவட்ட தலைநகரங்களிலும் நடக்கும்.
 

மே 21-ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

          மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட்டு விண்ணப்பதார்களுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
 

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: நாளை முதல் விண்ணப்பம்

         ஜூன் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு, நாளை முதல் 17 வரை, தேர்வுத் துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்து உள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive