Half Yearly Exam 2024
Latest Updates
கலவரத்தில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு
CPS - குறைபாடுகள்
புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் - சட்டப்பிரிவு 12(5)ன் படி அரசு, ஏற்கனவே மற்ற ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களையும் பு.ப.ஒ.திட்டத்தில் சேர்க்கலாம்
தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா?மாவட்ட கல்வி அலுவலர்கள் கேள்வி.
வி.ஏ.ஓ., தேர்வில் பிரிவு ஒதுக்கீட்டில் குளறுபடி: மாற்றுத்திறனாளிகள் தவிப்பு.
10ம் வகுப்பு தமிழ் முதல்தாளில் எழுத்து பிழை: மாணவர்கள் அதிர்ச்சி.
பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் மிக எளிது: மாணவர்கள், ஆசிரியர் கருத்து.
தேர்தல் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது: தலைமை தேர்தல் அதிகாரிக்கு குழந்தைகள் மனித உரிமைக்குழு கடிதம்
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிரம்
இன்றைய கல்வி முறை குறித்து தமிழ் தி ஹிந்து பத்திரிக்கையின் தலையங்கம்
TET Court Case Detail
தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு: முறைகேடு நடக்காமல் இருக்க உஷார்
கற்றல் திறனை சோதிக்க தேசிய அளவில் தேர்வு; ஏப்ரல் 10-ல் தொடக்கம்.
மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் வகையில், தமிழகத்தில், ஐந்தாம் வகுப்பு மாணர்களுக்குரிய தேசிய அடைவுத்திறன், ஏப்ரல் 10,11, 15,16 ஆகிய தேதிகளில் நடத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் திட்டமிட்டுள்ளது.
பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக, தேசிய அளவில், அடைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், ஐந்தாம் வகுப்பு, மாணவர்கள் கற்றலில், அடைந்த திறன் குறித்து, தமிழ், கணிதம், சூழ்நிலையியல், பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு மாணவர், இரண்டு பாடத்தில் தேர்வெழுத வேண்டும். அதுமட்டுமன்றி, பள்ளி, ஆசிரியர்,மாணவர் விபரங்களையும், அதற்கு என வழங்கப்பட்ட படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 15 மாவட்டங்களில், 275 பள்ளிகளில் இந்த அடைவுத்திறன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், ஏப்ரல் 10,11,15,16 ஆகிய தேதிகளில்,நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.