இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ்
பொதுத்தேர்வு சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தக்கல்) விண்ணப்பித்துள்ள
தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணைய தளம் மூலம் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
விடைத்தாள் திருத்தும் பணி - தேர்வுத்துறை உத்தரவு
திண்டுக்கல்: "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர்
ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும் என,
தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளையுடன் (மார்ச்
25) முடிவடைகிறது.
10ம் வகுப்பு தேர்வு: 40 ஆயிரம் பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்
பத்தாம்
வகுப்பு தேர்வுகள் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. 10 லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்
படை அமைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வுகள் வரும் 25ம் தேதி முடிகின்றன. அதை
தொடர்ந்து 26ம் தேதியே 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது. தமிழகம்
புதுச்சேரியை சேர்ந்த 6 ஆயிரம் பள்ளிகளில் இருந்து 10 லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொது தேர்வுகள் காலை 10 மணிக்கு
தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு 9.15 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, 12
மணிக்கு முடிகிறது. பொது தேர்வுக்காக 3 ஆயிரம் தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 40 ஆயிரம் பேர்
தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இந்தாண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும்: வானியலாளர்கள் கருத்து
பகல் நேரம் அதிகரிப்பாலும், மழை பெய்யாததாலும், இந்தாண்டு கோடை வெப்பம், கடுமையாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டில் வடகிழக்கு, தென் மேற்கு
பருவ மழைகள் பொய்த்தன; இந்தாண்டும், இதே நிகழ்வு தான் பதிவாகியுள்ளது. இதன் விளைவு, நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.
உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா - ஆசிரியை 'சஸ்பெண்ட்'
உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றதாக கூறி, தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்' செய்தார்.
பத்தாம் வகுப்பு தேர்வு: 9.15 மணிக்குத் தொடங்கும். மாற்றம் எதுவும் இல்லை, தேர்வுத்துறை வட்டாரங்கள்
இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை
தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான
மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் ஆனவர்களுக்கு புதிய ஓய்வூதிய விதிகள் பொருந்தாது ஐகோர்ட்டு உத்தரவு
2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்ட
தொழிலாளர்களுக்கு, 2 மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஓய்வூதிய திட்ட
விதிகள் பொருந்தாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :பென்சிலை பயன்படுத்தி OMR தாளில் மாணவர்கள் Shade செய்யலாம்
பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :
OMR தாளில் வட்டங்களில் Shade
செய்ய வேண்டிய பகுதிகள் அனைத்தும் கருப்பு அல்லது நீல நிற
பந்துமுனை பேனாவை பயன்படுத்த வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தி
இருந்தது . ஆனால் தற்போது பென்சிலை பயன்படுத்தி OMR தாளில் மாணவர்கள் Shade செய்யலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் .
1999 முதல் 2007 வரை பயின்ற மாணவர்கள் தனித்தேர்வு எழுத வாய்பு: நெல்லை பல்கலை அறிவிப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) முனைவர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்த கல்லூரிகளை சேர்ந்த ஏப்ரல் 2014க்கான இளநிலை மற்றும் முதுநிலை தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 16ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளன.
TNPSC GROUP 2, VAO Exam Material
தமிழிலக்கியத்தில் அறிவியல் செய்திகள்
ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டுதிகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், அக்கால மக்களின்அறிவையும், பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக் காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞானப்பூர்வமாக மிளிர்கிறது.
TNTET Paper 2 CV | ஏப்ரல் 7 முதல் டி.இ.டி., – 2 சான்றிதழ் சரிபார்ப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்,7 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
'விலங்கியல்' விடைத்தாள் பகுதியில் 'தாவரவியல்' விடை எழுதியதால் குழப்பம் : அச்சத்தில் மதுரை மாணவிகள்
மதுரையில்,
பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில், தாவரவியல்
பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர்.
அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு
அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில்
வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கண்டிப்பாக 3 சதவீத இடஒதுக்கீடு
வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய-மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத
இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 3 சதவீத இடஒதுக்கீடு அரசு உதவி பெறும்
நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
குழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி!
பிள்ளையை பெற்றால் மட்டும் போதுமா? பேணி
வளர்க்க வேண்டாமா? என்பது பலரும் அறிந்த ஒரு கருத்து. குழந்தை வளர்ப்பு
என்பது சவால்கள் நிறைந்த ஒரு போராட்டம் என்பதும் பலரின் எண்ணம்.
மிருகங்கள், ஏதோ குட்டிப் போடுகின்றன, சிலகாலம் பராமரிக்கின்றன. அவற்றின்
பணி அவ்வளவுதான். ஆனால், மனிதனின் நிலை அப்படியில்லை. அவன் ஏற்படுத்திய
உலகம், வாழ்க்கை முறை மற்றும் சமூகம் ஆகியவற்றில் வாழும் திறமையையும்,
தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, குழந்தை வளர்ப்பு என்பது ஒரு திட்டமிட்ட
மற்றும் நீண்டகால பணியாகிறது. இக்கட்டுரையில், குழந்தை வளர்ப்பு தொடர்பான
சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதல்
தான் வைத்திருக்கும் விளையாட்டு சாமான்கள்
உள்ளிட்டவற்றை, இதர குழந்தைகளிடமும், விளையாடும்போது பகிர்ந்து கொள்ளும்
மனப்பான்மையை, அதிக பொறுமையுடன் குழந்தைகளிடத்தில் கற்றுக்கொடுக்க
வேண்டும். மேலும், கூட்டாக சேர்ந்து விளையாடுகையில், தனது முறை வரும்வரை
பொறுமையாக காத்திருந்து வாய்ப்பை பெற வேண்டுமெனவும், பிறர் கையிலிருக்கும்
பொருளை அவசரப்பட்டு பிடுங்கக்கூடாது என்றும் கூற வேண்டும்.
12th Public Exam Latest Key Answer
March - 2014 Exam | Key Answers
- History - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
வணிகக் கணித கேள்வித்தாள் குழப்பம்
வணிகக் கணித
கேள்வித்தாள் குழப்பம்
கடந்த 20.03.2014 - அன்று நடந்த 12-ம் வகுப்பு வணிகக் கணித தேர்வில் 65 - வது கேள்வி
"கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு x = 4.5 க்கு y-ன் மதிப்பைக் காண்க" என
கேட்கப்பட்டிருந்தது. இவ்வினா பாடப்புத்தகம் தொகுதி - 2 chapter – 7 - ல் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பட்டயப் படிப்பு: ஏப். 2 முதல் 10 வரை செய்முறைத் தேர்வு
ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
மே முதல் வாரத்தில் இருந்து பி.இ., விண்ணப்பம், "சேல்ஸ்'
மே
மாதம், முதல் வாரத்தில் இருந்து, பி.இ., விண்ணப்பங்கள், வழங்கப்பட
இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு,
மே 4 முதல், 20 வரை, அண்ணா பல்கலை மட்டும் இல்லாமல், பல்கலை உறுப்பு
கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன;
2.34 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின.