ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு
அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின்,
பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை
எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில், 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது
தமிழகத்தில் பொதுக் கல்வி வாரியம் கடந்த
2009ஆம் ஆண்டு கொண்டு வரப் பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும்
சமச்சீர் கல்வி முறை நடை முறைக்கு வந்துள்ளது. பின் னர் 2011இல் ஆட்சிக்கு
வந்த அதிமுக அரசு தொடக்க நடு நிலைப் பள்ளிகளில் முப் பருவ முறையை அறிமுகம்
செய்தது. இந்த ஆண்டு 9ஆம் வகுப்புக்கு முப்பருவ முறை நடைமுறைக்கு வந்தது.
18 வயது முடிந்த புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் சட்ட சிக்கல்
பதினெட்டு வயது முடிந்த இளம் வாக்காளர்களை
உடனடியாக வாக்காளர்கள் பட்டியலில் சேர்ப்பதில், சட்டச் சிக்கல்கள் இருப்பது
தெரியவந்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தின் திட்டம், உடனடியாக நிறைவேற
வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. 18 வயது பூர்த்தியான வாக்காளர்களை
உடனுக்குடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம்
சமீபத்தில் தெரிவித்திருந்தது.
பத்தாம் வகுப்பு தேர்வுஒரு வாரம் 'ஸ்டடி லீவு!'
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, இன்னும், ஏழு நாட்களே உள்ள
நிலையில், தேர்வுக்கு, மாணவ, மாணவியர், சிறப்பாக தயாராவதற்கு வசதியாக, பல
தனியார் பள்ளிகள், ஒரு வாரம், விடுமுறை அறிவித்து உள்ளன.வரும், 25ம்
தேதியுடன், பிளஸ் 2 தேர்வு முடிகிறது. மறுநாள், 26ம் தேதியில் இருந்து,
பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்குகிறது. இதற்கு, இன்னும், ஒரு வாரம்
மட்டுமே உள்ளது.அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை முடித்துவிட்ட மாணவ,
மாணவியர், எழுத்து தேர்வுக்கு, ஆயத்தமாகி வருகின்றனர்; பள்ளிகளில்,
மாணவருக்கு, இறுதிகட்டமாக, தேர்வு நுணுக்கங்கள், ஆலோசனை வழங்கப்படுகின்றன.
தேர்தல் விதிமுறைகள் மீறும் சத்துணவு மைய பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
தேர்தல் விதிமுறைகள் மீறும் சத்துணவு
மைய பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலையொட்டி சத்துணவு மைய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் விழுப்புரம் கலெக்டர்
அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சந்திரசேகரன்,
இளம்பருதி, அன்னம்மாள் ஆகியோர் லோக்சபா தேர்தலையொட்டி சத்துணவு மைய பொறுப்பாளர்கள்
கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினர்.
Public Exam - 2014 | Instructions
அ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - முதன்மை விடைத்தாள், முகப்புச் சீட்டு வழங்குதல், தேர்வு நடத்துவதற்கான முன்பணிகள் முடித்தல், முகப்புச் சீட்டினை இணைத்து தைப்பதற்கான அறிவுரைகள் - Click Here
Passport NOC for Elementry Education Teachers
Passport NOC for Elementry Education Teachers
தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு
click
here to download DEE proceeding - PASSPORT - DELEGATION OF POWERS TO
DEEOs (APPOINTMENT AUTHORITY) REG ISSUING NOC FOR PASSPORT FOR "B" "C"
& "D" CATEGORY EMPLOYEES & TEACHERS REG ORDER - Click Here
தணிக்கை விரைவாக மேற்கொள்ள உத்தரவு
தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு - ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களுக்கு கணக்குத்தாள் வழங்குதல் சார்பாக தணிக்கை விரைவாக மேற்கொள்ள உத்தரவு
ஆசிரியர் தகுதிதேர்வு இட ஒதுக்கீட்டை அழிக்கும் தமிழக அரசு? அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு
தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் 15000
ஆனால் அறிவித்த காலிப்பணியிடம் 13000
.
12th Chemistry Exam Key Answer
March - 2014 Exam | Key Answers
- Chemistry - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
- Chemistry - March 2014 | Public Exam | Expected 1 Mark Key Answers - Tamil Medium
மாயா மான மலேசிய விமானம்: விமானத்தின் பாதை கம்யூட்டரில் மாற்றி அமைத்து கடத்தல்
கோலாலம்பூரில்
இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற
மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன்12
நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா,
சீனா, வியட்நாம் உள்பட 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆனால் எந்த வித தகவலும்
இதுவரை தெரியவில்லை.இருந்தும் அது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அந்த விமானம் விபத்தில் சிக்கியதா?
தகுதி இல்லாத ஆசிரியர்கள், கவலைப்படாத அரசு-Dinamalar Article
கடந்த 2009ம் ஆண்டு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
TET PG TRB Court Case Details
18.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பணிநியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
முதுகலை பட்டம் பெற்றபின்னர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற
காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் சான்றிதழ்
சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம் மறுக்கப்பட்ட கனிமொழி எனும் தேர்வருக்கு
உரிய கட் ஆப்மதிப்பெண் பெற்றிருப்பின் 4 வாரகாலத்திற்குள் பணிநியமனம் வழங்க
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
'டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது": தேர்தல் அதிகாரிகள்
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
தேர்வு அறிவிப்புக்குப் பொருந்தாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40,000 ஆசிரியர்கள்
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்
பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு
செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும்
66 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலையொட்டி, விடைத்தாள்
திருத்தும் பணிகளை ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வளாகத் தேர்வு: தமிழ் வழி பி.இ. மாணவர்கள் புறக்கணிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பி.இ.
சிவில் பிரிவு படிக்கும் மாணவர்களை வளாகத் தேர்வுக்கு வந்த எந்தவொரு
நிறுவனமும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. அதேபோல், மெக்கானிக்கல்
பிரிவிலும் ஒரு சில மாணவர்களே பணி நியமனம் பெற்றுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ஆங்கிலவழி கல்வி சேர்க்கைக்கு 'டார்கெட்!'; விழிபிதுங்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்
அரசு ஆரம்பப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியில்
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, மறைமுகமாக இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மாநில அளவில், 23 ஆயிரத்து 522 அரசு ஆரம்பப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதில், 14 லட்சத்து 63 ஆயிரத்து 767 மாணவர்கள் படித்துவருகின்றனர்.
விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவி: ஆசிரியை உதவியுடன் தனி அறையில் தேர்வு எழுதினார்
விபத்தில் சிக்கிய மாணவி, ஆம்புலன்சில் அழைத்து
வரப்பட்டு, ஆசிரியை உதவியுடன், பிளஸ் 2 தேர்வு எழுதினார். கன்னியாகுமரி
மாவட்டம், பூதப்பாண்டியைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மகள் ராஜகுமாரி, 17.
நேற்று காலை, பிளஸ் 2 தேர்வு எழுத, ஆட்டோவில் சென்ற போது, குறுக்கே வந்த
பைக் மீது மோதாமல் இருக்க முயன்றதில், ஆட்டோ கவிழ்ந்தது.
2,342 வி.ஏ.ஓ., பணி: ஜூன் 14ல் போட்டி தேர்வு
வருவாய்த்துறையில், 2,342 கிராம நிர்வாக
அலுவலர் (வி.ஏ.ஓ.,) காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 14ல், போட்டிதேர்வு
அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.