Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக்கல்வித் துறை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ம் தேதி முதல் தேர்வு தொடக்கம், மே 1 முதல் கோடை விடுமுறை


           மக்களவைத் தேர்தலையொட்டி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தப் பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24 -ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுவதால், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்


          பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் தொடக்கம்: மே இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்?


          பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 21ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. வரும் 25ம் தேதி முடிகிறது. 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர்.
 

லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள்: இன்று நடக்க இருந்த நேர்முக தேர்வு ஒத்திவைப்பு

 
          சென்னை பல்கலையில், உதவி பேராசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு, இன்று நடப்பதாக இருந்தது.
 

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: ஏராளமானோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பு

 
         பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் ஏராளமான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்: கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க தடை

 
           தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று அங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. 
 

12th Latest Study Material

Physics Study Material

Physics 1,2,5 Mark Lesson wise guide | Mr. Rajendran, SRM HSS, Kaveriyampoondi - English Medium

10th Revision Test Question & Key Answers


10th Revision Test Question & Key Answers ( Krishnagiri Dt) - Click Here

Thanks to GHS GUNDIYALNATHAM


பி.டி.எப். கோப்பு உருவாக்கிட, PDF பக்கங்களை Scrap செய்து சேமித்திட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்


          ஆன்ட்ராய்ட் போன்களில் பி.டி.எப் கோப்புகளை உருவாக்க, அவற்றை எடிட் செய்திட, குறிப்புகள் எழுத, PDF Page -ல் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுத்து புதிய கோப்பாக மாற்றிட, குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்செய்து வேண்டிய இடத்தில் ஒட்டிட, இப்படி பல்வேறு வழிகளின் பயன்படும் ஓர் அற்புதமான PDF Slicer, Maker, Scraper அப்ளிகேஷன் உள்ளது.

கற்றவற்றைக் காட்சிப்படுத்துங்கள்!

           நல்ல மதிப்பெண்ணுக்கு கற்றவற்றைக் காட்சிப்படுத்துங்கள்! ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு படம் சொல்லிவிடும்!!

அமெரிக்காவில் ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் அசத்திய இந்திய மாணவன்

          அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் நடந்த, ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி உச்சரிக்கும் (ஸ்பெல்லிங்) போட்டியில்இந்திய வம்சாவளி மாணவர் குஷ் ஷர்மா (13) வெற்றி பெற்றார். 

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி

இந்திய அஞ்சல் துறை Postal Assistant/Sorting Assistant பணிகளுக்கு விண்ணபங்களை வரவேற்கிறது. 

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு

வயதுத் தகுதி: 18-27 வயது வரை எஸ்.சி., எஸ்.டி.,ஓ.பி.சி பிரிவினருக்கு மத்திய அரசின் வயது வரம்புச் சலுகையும் உண்டு.

சம்பளம்: ரூ. 5200 - 20200

காலியிடங்கள்: 8243

         விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டண விலக்கு உண்டு.

எம்.எஸ்.சி படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி


          இந்திய ஜியாலஜிகல் சர்வே துறையில் பணியாற்ற மத்திய அரசின் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிக்கோ அப்துல் ரகுமான்


மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர்
புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்
என்று பாராட்டப்பெறும் சிறப்புக்குரியவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
      'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

கல்வி தகவல் மேலாண்மை முறை: தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

 
        தமிழ்நாடு தொடக்கக் கல்வி துறையில் கல்வி தகவல் மேலாண்மை முறை என்ற பெயரில் தனி நபர் தகவல் தொகுப்பு முறைக்கு ஆசிரியர்களின் பணி விவரங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

One Day Strike -Regarding | இயக்குனரின் செயல்முறை

            7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முறையே 26.02.2014, 06.03.2014 ஆகிய நாள்களில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான சான்று பெறுதல் சார்பான தொடக்கக்கல்வி இயகுனரின் செயல்முறை

கணினி தெரிந்தவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

           தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இளங்கலை / முதுகலை / பட்டயப்படிப்புகள் முடித்த கணினி தெரிந்தவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

அனைத்து ஏழைப் பெண்களும் கல்வியறிவு பெற இந்தியாவிற்கு 56 ஆண்டுகள் தேவை - அறிக்கை

 
           இந்தியாவில் அதிகளவிலான ஏழை இளம் பெண்களுக்கு, கல்வி என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. எனவே, இந்த வகை இளம் பெண்களின் கல்வியில் ஒரு வளர்ச்சி நிலையை எட்ட, குறைந்தபட்சம் இன்னும் 56 ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கும்

 
          பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பிற்கான, 2014 அகடமிக் ஆண்டின் வகுப்புகளை, ஏப்ரல் 1ம் தேதிக்கு பதிலாக, ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து தொடங்குமாறு தனது பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த அடிப்படை பணிகள் இன்று துவக்கம்.

     கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்கான அடிப்படை பணிகள் இன்று முதல் துவங்குகின்றன.

பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமா?; ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம்.


             பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேர மாற்றம் குறித்து தெளிவான அறிவிப்புஇல்லாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

ஏப்ரல் 1–ந்தேதி முதல் கியாஸ் விலை 2 மடங்கு உயர்வு.

  
            வீட்டு உபயோகித்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் விலை தற்போது ரூ. 401 ஆக உள்ளது. பல்வேறு காரணங்களால் சமையல் கியாஸ் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

             மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில்பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 132 பணியிடங்களை நிரப்பதகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

1) வடசென்னை – கிரி ராஜன்
2) தென்சென்னை – டி.கே.எஸ். இளங்கோவன்
3) மத்திய சென்னை – தயாநிதி மாறன்
4) ஸ்ரீபெரும்புதூர் – ஜெகத்ரட்சகன்
5) காஞ்சிபுரம்(தனி) – செல்வம்


விபத்தில் சிக்கி தேர்விற்கு தாமதமாக வருபவர்களை அனுமதிக்கலாம். - விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் ஜன்னல்கள் பூட்டப்பட்டு இருக்க வேண்டும். - செயலர் அறிவுரை


          நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்ச் 2014 மேல்நிலைத் தேர்வு மற்றும் 26.03.2014 அன்று துவங்கவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாகவும், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் நிறைவான பணி மேற்கொள்ளும் வகையில் 08.03.2014 அன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தில் நடைபெற்ற முகாம் அலுவலர் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை, அரசு முதன்மைச் செயலாளரால் கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்வறிவுரைகளை அனைத்து முகாம் அலுவலர்களும் பின்பற்றுமாறும், முகாம் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை பணியாளர்களுக்கும் இவ்வறிவுரைகள் குறித்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாணவர்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

            கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று இனி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தகவல் மேலாண்மை திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
 

தமிழக பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பு: சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன்

 
           தமிழக பள்ளிகளில் தமிழ் ஒதுக்கப்பட்டு வருவதாகவும், கம்பன் இலக்கிய படைப்புகளை இளைஞர்களிடம் கொண்டு சென்றால் செம்மையடைவார்கள் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் பேசினார்.

சிறுநீரகங்கள் குறித்த தகவல்களை தமிழில் அளிக்கும் இணையதளம் தொடக்கம்

          மனித சிறுநீரகங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் தமிழில் தரும் இணையதளம் எழும்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் திங்கட்கிழமை(10.03.14) விசாரணை


          10.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்


எது படிப்பதற்கு ஏற்ற சூழல் ?

           புறாச் சத்தம், புறச் சத்தம் என்று எதுவுமே கேட்காத புறநகர் பகுதியில் அமைந்த அந்த வீட்டில் ஓசைக்கு இடமில்லை. கணவன் - மனைவிகூட சைகையில்தான் பேசிக் கொள்கிறார்கள். மயான அமைதி என்றுகூட சொல்ல முடியாது. ஏனென்றால் மயானத்தில்கூட ஏதாவது சத்தம் இருக்கலாம். அந்த வீட்டில் அதைவிட அமைதி நிலவும். காரணம் வேறொன்றுமில்லை. அந்த வீட்டில் ஒரு மாணவி பிளஸ்2 படிக்கிறாள் . அதுதான் காரணம். தேர்வு நேரங்களில் இதுபோல பல வீடுகள் ஒலிபுகாக் கூடுகளாக மாறுகின்றன.

“மாற்றத்திற்கான பெண்கள்” -வாங்கரி மாத்தாய்

 
 
 
       சமூகத்தின் துயரங்களை காலம்தான் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, பிறந்த மண்ணுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி தன் வாழ்வை முழுவதுமாக மக்களுக்காக அர்பணித்தார் ஆப்பிரிக்காவின் வாங்கரி மாத்தாய்.

மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 
          மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில்பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 132 பணியிடங்களை நிரப்ப  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி..!


           இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive