கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்கான அடிப்படை பணிகள் இன்று முதல் துவங்குகின்றன.
Half Yearly Exam 2024
Latest Updates
பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமா?; ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேர மாற்றம் குறித்து தெளிவான அறிவிப்புஇல்லாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
ஏப்ரல் 1–ந்தேதி முதல் கியாஸ் விலை 2 மடங்கு உயர்வு.
வீட்டு உபயோகித்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் விலை தற்போது ரூ. 401 ஆக உள்ளது. பல்வேறு காரணங்களால் சமையல் கியாஸ் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில்பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 132 பணியிடங்களை நிரப்பதகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விபத்தில் சிக்கி தேர்விற்கு தாமதமாக வருபவர்களை அனுமதிக்கலாம். - விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் ஜன்னல்கள் பூட்டப்பட்டு இருக்க வேண்டும். - செயலர் அறிவுரை
நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்ச் 2014 மேல்நிலைத் தேர்வு மற்றும் 26.03.2014 அன்று துவங்கவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாகவும், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் நிறைவான பணி மேற்கொள்ளும் வகையில் 08.03.2014 அன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தில் நடைபெற்ற முகாம் அலுவலர் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை, அரசு முதன்மைச் செயலாளரால் கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்வறிவுரைகளை அனைத்து முகாம் அலுவலர்களும் பின்பற்றுமாறும், முகாம் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை பணியாளர்களுக்கும் இவ்வறிவுரைகள் குறித்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் திங்கட்கிழமை(10.03.14) விசாரணை
10.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்
எது படிப்பதற்கு ஏற்ற சூழல் ?
புறாச் சத்தம், புறச் சத்தம் என்று எதுவுமே கேட்காத புறநகர் பகுதியில்
அமைந்த அந்த வீட்டில் ஓசைக்கு இடமில்லை. கணவன் - மனைவிகூட சைகையில்தான்
பேசிக் கொள்கிறார்கள். மயான அமைதி என்றுகூட சொல்ல முடியாது. ஏனென்றால்
மயானத்தில்கூட ஏதாவது சத்தம் இருக்கலாம். அந்த வீட்டில் அதைவிட அமைதி
நிலவும். காரணம் வேறொன்றுமில்லை. அந்த வீட்டில் ஒரு மாணவி பிளஸ்2
படிக்கிறாள் . அதுதான் காரணம். தேர்வு நேரங்களில் இதுபோல பல வீடுகள்
ஒலிபுகாக் கூடுகளாக மாறுகின்றன.
மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்மத்திய
இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில்பல்வேறு துறைகளில் காலியாக உள்ள
132 பணியிடங்களை நிரப்ப
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆளுமைத் திறன் வகுப்பறையை இனிப்பாக்க ஒரு புத்தகம்!
படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த, விருப்பமான ஒரு பெயர், ஆயிஷா
இரா.நடராசன். இவரின் ஆயிஷா எனும் குறுநாவல், மிகவும் புகழ்பெற்றது.
அறிவியலை நேசிக்கும் சின்னப் பெண் பற்றிய உருக்கமான கதை. அதனாலேயே, இவரின்
பெயரின் முன்னால் ஆயிஷா ஒட்டிக்கொண்டாள்.
தொடர்ந்து சிறுவர்களுக்கான நூல்களை எழுதிவரும் ஆயிஷா நடராசனின் புதிய
நூலான, 'இது யாருடைய வகுப்பறை?’ கல்வி பற்றி ஆழமான கருத்துகளை
முன்வைக்கிறது.
முதல் மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்த அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு சரி: ஐகோர்ட்டு உத்தரவு
திருவாரூர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலக உதவியாளராக வெங்கன்
பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இருக்கும்போதே,
அவருக்கு தெரியாமல் 2–ம் திருமணம் செய்துகொண்டார். அதுபற்றி தெரிய
வந்ததும், துறை அதிகாரியிடம் முதல் மனைவி புகார் கொடுத்தார். புகாரின்
முகாந்திரம் இருந்ததைத் தொடர்ந்து, நன்னடத்தை விதிகளின்படி, வெங்கனுக்கு
போக்குவரத்துத்துறை செயலாளர் கட்டாய ஓய்வு அளித்து உத்தாவிட்டார்.
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு? ஏப்ரல் முதல், 167 ரூபாய் கூலி
தேர்தல் எதிரொலியாக, ஏப்ரல், 1ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்
தில், கூலித்தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்த, மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது; மேலும், 100 நாள் வேலையை, 150
நாட்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின், தேசிய ஊரக வேலை
உறுதி திட்டம், 2005ம் ஆண்டு, ஆக., 25ல் அமல்படுத்தப்பட்டது. இது, விவசாய
பணிகள் இல்லாத காலத்தில், பொதுப் பணிகள் மேற்கொள்ளும் வகையில், கிராம
மக்களுக்கு, 100 நாட்கள், வேலை அளிக்கும் திட்டமாக கொண்டு வரப்பட்டது.
இத்திட்டம், நல்ல வரவேற்பு பெற்றதால், 2009, அக்டோபரில், "மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லோக்சபா
தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஏப்ரல், 1ம் தேதி முதல், இத்திட்டத்தில்,
நாள் கூலித் தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்தி வழங்க,
மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 100 நாட்கள் வேலை என்பதை, 150
நாட்களாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
3rd Term CCE Exam Time Table Now Published.
பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு I தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் முடிகிறது I ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 25க்குள் முடிக்க வேண்டும் (Link Error Rectified)
12th Physics Study Material Collection
Physics
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
- Physics Unit Test Questions - 5 Set - Tamil Medium
- Physics 2nd Volume Full Study Material - Tamil Medium
RTI - Letter
த.அ.உ.சட்டம் - 2005 - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர் அரசு பள்ளியில் பணியில் சேரும் பொழுது அரசாணை எண்.1072ன் படி ஊதியம் நிர்ணயம் செய்து பெறலாமா? அரசுக் கடிதம்
பிளஸ் 2 முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நாளை தொடக்கம்- அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் தலைமையில் பறக்கும் படைகள்.
தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கான முக்கிய பிளஸ் 2 பாட தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகின்றன.
அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா.
அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என,பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள,32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர்.
மாணவர்கள் இலவச சீருடை திட்டத்தில் சிக்கல் : நிதி ஒதுக்காததால் நூல் தயாரிப்புநிறுத்தம்.
தமிழகத்தில், கூட்டுறவு நூற்பாலைகளுக்கு பஞ்சு கொள்முதல் செய்ய, நிதி ஒதுக்கீடுசெய்வதில் இழுத்தடிப்பு செய்வதால், நூல் உற்பத்திக்கு பஞ்சு இல்லாமல், உற்பத்திநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் எதிரொலி சிபிஎஸ்இ தேர்வு தேதி மாற்றம்.
பாராளுமன்ற தேர்தல் காரணமாக, சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கான 12ம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன
சி.பி.எஸ்.இ., இயற்பியல் வினாத்தாள் "அவுட்' : இன்டர்நெட்டில் வெளியானதாக பரபரப்பு.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பினருக்கு நடந்து முடிந்த, இயற்பியல் தேர்வுக்கான, மூன்று வினாத்தாள், தேர்வுக்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானதாக,"பகீர்' தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பள்ளிகளை பசுமைப்படுத்த மரக்கன்றுகள் நட உத்தரவு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
TET NEW METHOD WEIGHTAGE CALCULATOR
என் பெயர் கார்த்திக் ஆசிரியர் தகுதி தேர்வில் weightage பார்ப்பதற்கு புதிய முறையில் Ms Excell format ல் தயார் செய்துள்ளேன்.இதன் சிறப்பு
ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை கொடுத்தால் போதும் percentage weightage தானாகவே வரும்
50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க கோரி மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு அறிவித்தபடி 50 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
TNPSC Group 4 Expected Cut off Full Detail
குரூப் -4 தேர்வு எழுதியவர்களின்
மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம்
வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை
உதவியாளர்களுக்கு மட்டும் 3469 உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள்
இருந்தால் பணி கிடைத்துவிடும் என சிலர் தவறாக
எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள்.