Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வு முறைகேட்டை தடுக்க தீவிர சோதனை: மாணவ, மாணவிகள் மன உளைச்சல்

 
         தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் நாளான இன்று, மொழி பாடத் தேர்வு நடைபெற்றது.  8 லட்சத்து 25 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். முறைகேட்டை தடுக்க மாணவர்களிடம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால், மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மொழிப்பாடம் எளிது: தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி

           தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
 

பள்ளிகள் கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் : ஆசிரியர் ஸ்டிரைக் முடிவுக்கு அரசு உத்தரவு

 
              தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், மார்ச் 6ம் தேதி, வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர்; அன்று, அனைத்து பள்ளிகளும், கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தர வேண்டும்; தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்;
 

மத்திய பல்கலைகளில் 5,707 ஆசிரியர் பணியிடங்கள் காலி

 
          தமிழகம் உட்பட, நாடு முழுவதும் உள்ள, மத்திய பல்கலைகளில், 5,707 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழுள்ள, மத்திய உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 42 மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியில், திருவாரூரில் மத்திய பல்கலை துவக்கப்பட்டது.

அரசு ஆணை வெளியீடு

              தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சதுரங்கப் பலகைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு செலவினம் அனுமதித்து தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

NEWS UPDATE TODAY( 03.03.2014 )TRB PG COURT CASE DETAIL

              NEWS UPDATE TODAY( 03.03.2014 )TRB PG வழக்குகள்சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB. PG வழக்குகள் நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணிக்காக பட்டியலிடப்பட்டிருந்தன..நேரமின்மை காரணமாக வழக்குகள் விசாரணை நிலையை எட்டவில்லை. எனவே அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

TET Weightage - Reader's Article

தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி

 

                தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, அரசின் ஆணை பெற்றவுடன் நடத்த தயார் - தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி

தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவருக்கெல்லாம் ஆசிரியர் வேலை கிடைக்காது.Dinakaran News


          இலவசமற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

முதுகலை ஆசிரியர் நியமன இறுதி பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு

            இன்று காலை சுமார் 10.30 மணியளவில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு வாரியத்தின் முன் குவிந்தனர். அப்பொழுது முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் திரு.ஆறுமுகம் அவர்கள் கூறும் போது சென்ற வெள்ளிக்கிழமையே பட்டியல் தயாராகிவிட்டது எனவும் ஆனால் COMMUNAL ROASTERல் சில தவறுகள் இருப்பதால் அவற்றை சரிசெய்து புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

TET தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம்

               இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்ட  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
 

மூன்று நபர் குழு விசாரணை

           ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம்

1. AGRICULTURE DEPARTMENT
2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT
 

தனது முடிவை அவசரமாக திரும்பப் பெற்ற மனிதவள அமைச்சகம்

 
          மொத்தம் 12 மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவை, மத்திய மனிதவள அமைச்சகம் அவசரமாக திரும்பப் பெற்றுள்ளது.

Group 4 Expected Cutoff


              குரூப் -4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம் வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் 3469  உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள் இருந்தால் பணி  கிடைத்துவிடும் என சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள். 

முதுகலை ஆசிரியர்த் தேர்வு சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.

         முதுகலை ஆசிரியர்த் தேர்வு தமிழ் சார்பாக 4வழக்குகளும் மற்ற பாடம் சார்பாக 4வழக்குகளும் நீதியர்சர் நாகமுத்து அவர்கள் முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வருகிறது.

கனவுகள் நனவாகட்டும்! வெற்றி உங்களுக்கே!


இன்று பொதுத்தேர்வு எழுத இருக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலையின் வாழ்த்துக்கள்!



பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது :மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை

          பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது :தேர்வுத்துறை அறிவுரை
          பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு எழுதும்போது செய்யக்கூடிவை பற்றியும் செய்யக்கூடாதவை பற்றியும் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:–

தனியார் பள்ளி ஆசிரியர்களை அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஆய்வு செய்தால் நன்மதிப்பு பாதிக்கும்


              சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகள் சங்க தலைவர் மனோகர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: மெட்ரிக் பள்ளிகளை ஆய்வு செய்ய, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உள்ளது. இந்த இயக்குனரகத்தில் இருந்து, அதிகாரிகள் நேரில் மெட்ரிக் பள்ளிகளுக்கு வந்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்புவர். ஆனால் தற்போது, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆசிரியர்கள், அங்கு தான் பணியாற்றுகிறார்களா என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அதன் அறிக்கையை பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

100 சதவீத, இ-கல்வியறிவு: கேரள மாநில பள்ளிச்சால் தேர்வாகியுள்ளது

 
         கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள, பள்ளிச்சால்  பஞ்சாயத்து, அந்த மாநிலத்தின், முதல், 100 சதவீத, "இ-கல்வியறிவு' கிராமமாக  தேர்வாகியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அனைவரும், இணையதளத்தை பயன்படுத்துவது,  இணைய தளம் மூலம், புதிய தகவல்களை பெற்றுக் கொள்வது போன்ற கல்வியறிவை பெற்றுள்ளனர். 

7–வது சம்பள கமிஷனின் யோசனைப்படி, அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் - தினந்தந்தி

           மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணி பறக்கும்படை :ஆசிரியர்கள் நேர்மையாக செயல்படவேண்டும்

 
             பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும், பறக்கும் படை ஆசிரியர்கள், பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும்,'' என, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். சிவகங்கையில், பிளஸ் 2 அரசு பொதுதேர்வு நடத்துவது குறித்த, ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜாராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஷ்வரன் முன்னிலை வகித்தார். 

பிளஸ் 2 தேர்வு: ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் ஆயுள்கால தடை

 
            மாநிலம் முழுவதும் பிளஸ்2 தேர்வுகள் இன்று துவங்குகின்றன. "ஆள்மாறாட்டத்தில், ஈடுபடும் மாணவர்கள் தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும்" என்று முதன்மை கல்வி அதிகாரி எச்சரித்துள்ளார்.

டிட்டோஜாக் போராட்டம் மார்ச் 6 திட்டமிட்டபடி நடைபெறும்

 
           தற்போது உச்சநீதிமன்றம் அமைத்திருக்கும் குழுவிற்கும் இடைநிலை ஆசிரியர் பிரச்சிணைக்கும் சம்மந்தமில்லை.

ஆசிரியர்களிடம் பென்ஷனுக்காக பிடித்த ரூ.2 ஆயிரம் கோடி எங்கே : ஆசிரியர் சங்கங்கள் கேள்வி

 
           "பங்களிப்பு பென்ஷன் திட்டத்திற்காக, ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த, ரூ.2 ஆயிரம் கோடி எங்கே போனதென,'' சிவகங்கையில் நடந்த உண்ணாவிரதத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, பொதுக்குழு உறுப்பினர் பிரடெரிக் எங்கல்ஸ் பேசினார். சிவகங்கையில், ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில், உண்ணாவிரதம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மாரிராஜன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொருளாளர் இளங்கோவன், உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், நகராட்சி தலைவர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தனர். 

மூன்று நபர் குழு விசாரணை இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டை விசாரணை செய்ய முடியாது

         இதில் இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டை விசாரணை செய்ய முடியாது. நமது SSTA ஊதிய வழக்கில் நாம் இணைத்து விசாரிக்க கோரினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

இடைநிலை ஆசிரியரின் ஊதிய வழக்கு 33399/13 நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

           முதன்முதலாக இவ்வழக்கு கடந்த 2013 நவம்பர் மாதம் நீதியரசர். கிருபாகரன் அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகாக நீதியரசர். சுப்பையா அவர்களிடம் வந்தது. 
 

157 ஆண்டுக்கு முந்தைய ஆங்கிலேயர் கொடுமை அம்பலம்

          பஞ்சாபில், பிரிட்டீஷ்ஆட்சியின் போது, கிணற்றில்தள்ளி படுகொலை செய்யப்பட்ட இந்திய வீரர்கள், 100 பேர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.

ALL UNIVERSITY FEES FOR THE VERIFICATION OF GENUINENESS CERTIFICATES

UNIVERSITY FEES FOR THE VERIFICATION OF GENUINENESS CERTIFICATES....
- Click Here For PDF

TET NEWS - உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடத்துக்கு மவுசு : ஆசிரியர் தகுதி தேர்வில் ஏராளமானோர் தேர்ச்சி


           ஆசிரியர் தகுதித்தேர்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால், உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மவுசு உருவாகியுள்ளது. இரு ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாமல் வைத்திருந்த பள்ளி நிர்வாகத்தினர், தற்போது, பல லட்சம் ரூபாய் வரை, ஆசிரியர் பணியிடங்களை விலைபேசி வருகின்றன.


66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்தில் "ரிசல்ட்' : தேர்வு துறை இயக்குனர் தகவல்


         "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கும். மே, முதல் வாரத்தில், தேர்வு முடிவு வெளியாகும்'' என, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறினார்.

பட்டு: ஆயிரம் ஆண்டு ரகசியம்


          பட்டு என்றவுடன் காஞ்சிபுரம், பனாரஸ், ஆரணி, ராசிபுரம் போன்ற பட்டுக்குப் பெயர்போன இடங்கள் நம் நினைவுக்கு வரும். அத்துடன் பாரம்பர்யம் என்னும் ஒரு சொல்லும். அந்த அளவுக்குப் பட்டு நம் கலாசாரத்துடன் இணைந்து இருக்கிறது.
           நாகரிகம் வளர வளர நம் வாழ்க்கை முறையில், நம் உணவு பழக்கவழக்கங்களில், உடைகளிலும் மாற்றம் வந்துவிட்டன. ஆனாலும் கோயில், குடும்ப விழாக்களில் பட்டாடை என்பது இன்னும் ஒரு கெளரவமான அடையாளமாக இருந்துவருகிறது. அரிதாக உபயோகித்தாலும் பட்டுக்குத் தரும் முக்கியத்துவம் வேறு ஆடைகளுக்கு இல்லை.பட்டுக்கும் கிட்டதட்ட 5000 வருஷத்துக்கும் மேற்பட்ட பாரம்பரியம் உண்டு. ஹாங் டீங் (Huang di) என்னும் ஒரு சீன மன்னனின் மனைவிதான் சீ லீங் காய் (Si-Ling-Chi). அவர் ஒருநாள் அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மல்பெரி மரத்துக்கு கீழ அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்தாள்.
 

பள்ளிகல்வி இயக்குனர் அறிவுரை

          துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற உயர்நிலை/மேல்நிலை தலைமை ஆசிரியர்களை மட்டுமே மாவட்ட கல்வி அலுவலர் தேர்ந்தோர் பட்டியலுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் -பள்ளிகல்வி இயக்குனர்

 

 

உயர் பதவியில் குறைந்த நாட்கள் இருந்தாலும் தகுந்த பென்ஷன் உண்டு


            உயர் பதவியில் குறைந்த நாட்கள் இருந்தாலும், அதற்குரிய பென்ஷனை தான் வழங்க வேண்டும்' என, ராணுவ தீர்ப்பாயம் உத்தரவிட்டது செகந்தராபாத், பிருந்தாவன் காலனியை சேர்ந்த கிருஷ்ணாராவ், சென்னையிலுள்ள ராணுவ தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு.. 

தேர்வு மையம், ரத்து செய்யப்படும்.

 

           தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்கள் : பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால்,சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மையம், ரத்து செய்யப்படும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive