Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

           தொடக்கக் கல்வி - 25.2.2014 மற்றும் 26.2.2014 ஆகிய நாட்களில் போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் இயக்குனர் உத்தரவு

Tet Cv March 12 for Paper 1

TET 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் சலுகை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

. 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம்.

"டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு ‍-- தின மணி


         ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு டி.இ.டி., தேர்வு எழுதலாம்

          பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்" என தமிழக அரசு அறிவித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும், இலவச டி.இ.டி., தேர்வு பயிற்சி அளிக்க, அரசு உத்தரவிட்டிருந்தது.  

"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்


          "கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம், தேர்வு பணி காரணமாக, நடைமுறைப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், வகுப்பு களை ஒருங்கிணைந்து பயிலும், கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், முதற்கட்டமாக, 160 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், செயல்படுத்த திட்டமிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில், திட்டமிடப்பட்டிருந்தாலும், அதற்கான, நிதி ஒதுக்கீடு, உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகளால், தாமதம் ஏற்பட்டு வந்தது.
 

செய்முறை தேர்வுக்கான அறிவுரைகள்

          இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2014 - செய்முறை தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் அறிவுரைகள் www.tndge.in Website-ல் வழங்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் தங்களுக்கான User Id மற்றும் Password பயன்படுத்தி இவற்றை எடுத்துக்கொள்ள இயலும்.

2014ல் நடைபெற உள்ள பொது தேர்வுகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்

 
          தமிழகத்தில் 2014ல் நடைபெற இருக்கும் அரசு பொது தேர்வுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அலுவலர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 
 

10ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் வருமா? முடிவுக்கான கோப்பு, முதல்வர் மேஜையில்

 
         பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், வழக்கமான பொது தேர்வு இருக்குமா அல்லது முப்பருவ கல்வி முறையின்படி, தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுமா என்பன குறித்து, கல்வித்துறையில், பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இது தொடர்பான கோப்பு, முதல்வரின் அலுவலகத்தில், ஆறு மாதங்களாக, கிடப்பில் உள்ளதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

"லாங் லீவ்" ஆசிரியர்கள்: தேர்வு நேரத்தில் மாணவர்கள் அவதி

 
         தேர்வு நெருங்கும் சமயத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக வாரக் கணக்கில், "லாங் லீவ்" போடுவதால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தால் சிக்கல்

 
        தமிழகத்தில் நாளை (பிப்.,26) ஒரே நாளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்களை வைத்து சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்வித்துறையில் நடைமுறை சிக்கல்

 
         கல்வித்துறை அதிகாரிகளுக்கு, நடைமுறை சிக்கல் தெரியவில்லை. 10ம் வகுப்பு, பொதுத் தேர்வுக்கான நேரத்தை, பழையபடி மாற்றாவிட்டால் தேர்ச்சி சதவீதம் கண்டிப்பாக குறையும்" என தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், சங்க பொதுச் செயலர், சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிரமம் ஆங்கிலம் படும்பாடு: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தவிப்பு

 
         கோவை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில், பல ஆண்டுகளாக ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது. இதனால், பிற பாட ஆசிரியர்கள் ஆங்கில பாடத்தை கையாளும் அவலநிலையில் பள்ளிகள் செயல்பட்டுவருகிறது.

ஒரே பள்ளியில் 28 ஆண்டு பணி: ஆசிரியருக்கு தங்க பேனா, தங்க செயின், பைக், வழங்கி பாராட்டு விழா

 
      ஒரே பள்ளியில், 28 ஆண்டு பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள், பைக், தங்க பேனா, தங்க செயின் வழங்கி கவுரவித்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்?

 
           மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை  அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது சார்பான அறிவிப்பு கடந்த வாரமே எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த வாரத்தில் கூடிய மத்திய அமைச்சரவையில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் மத்திய நிதியமைச்சர் தற்பொழுது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிற 26ம் தேதி இந்தியா வருகிறார்.
 
          பிப்ரவரி 26ம் தேதிக்கு பின் நடக்கவிருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் 10% அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பும் அன்றைய தினமே வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஒய்வு வயதை 62ஆக உயர்த்தும் கோரிக்கையும் பரிசீலினையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதால், அதற்கு முன்னரே மேற்காணும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்பதால் பல்வேறு அறிவிப்புகளுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.   

தமிழ்வழிப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இடது சாரி அமைப்புகள் உறுதுணையாக இருக்கும்: பாலபாரதி எம்எல்ஏ பேச்சு

 
          தமிழ்வழிப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இடது சாரி அமைப்புகள் உறுதுணையாக இருக்கும் என்று பாலபாரதி எம்எல்ஏ பேசினார்.தமிழ்நாடு தமிழ்வழிப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்புஇணைந்து நடத்திய மாநில கோரிக்கைமாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் சனிக்கிழமை மாலை நடந்தது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன

            முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன.
 

TRB 2012 தமிழ்வழி பொருளாதார பாடத்திற்கு திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

          கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல், பொருளாதார பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் பொருளாதார பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி .திருத்தி அமைத்துள்ளது

We Need Centum Scored Answer Sheets...

100 சதவீதம் பெற்ற விடைத்தாள்களின் தொகுப்பு

அன்புள்ள ஆசிரியர்களே,

          நமது பாடசாலை வலைதளம் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு வினாத்தாள்களின் தொகுப்பை வழங்கி வருகிறது.

                   தற்போது 100 சதவீதம் பெறக் கூடிய மாணவர்களுக்கு உதவும் வகையில் விடைத்தாள்களின் தொகுப்பினை "Centum Scored Answer Sheets" சேகரித்து வெளியிட உள்ளோம். எனவே தங்கள் பிள்ளைகளுடையதோ அல்லது தங்கள் பள்ளி மாணவர்களுடையதோ விடைத்தாள்கள் 100 மதிப்பெண் பெற்று இருப்பின் பாடவாரியாக ஸ்கேன் செய்து நமது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இயன்றால் ஸ்கேன் செய்தவற்றை PDF Format-ல் மாற்றி தொகுத்து அனுப்பலாம்.

நமது இமெயில் முகவரி - Padasalai.net@gmail.com

தமிழகத்தில் உயர்ந்துவரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை!

      தமிழகத்தில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், சுமார் 80 புதிய பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அமைப்புடன் இணைந்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ., வாரிய பள்ளிகளின் நாடு முழுவதுமான மொத்த எண்ணிக்கை 14,841 ஆக உயர்ந்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012:மதிப்பெண் சலுகைக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு -இன்று விசாரணைக்கு வருகின்றது

          ஆசிரியர் தகுதித் தேர்வு 2012:மதிப்பெண் சலுகைக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு -இன்று விசாரணைக்கு வருகின்றது 

கணிதப்பாடத்துக்கு 25 இண்டர்னல் மார்க் வழங்கிட கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

         தமிழ்நாடு கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலப்பொதுக் குழுக் கூட்டம் ராசிபுரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தாய்மொழியில் கற்றால் சுயசிந்தனை வளரும்- மயில்சாமி அண்ணாதுரை

  சுயசிந்தனையை வளர்ப்பதில் தாய்மொழி வழிக் கல்வி பெரும்பங்கு வகிப்பதாக  இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை, பூத் சிலிப் மட்டுமே அனுமதி.


       நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல¢ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 
 

விடைத்தாள் திருத்தும் பணி விரைவில் முடியும்


        நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பல்வேறு மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது. தற்போது, விடைத்தாள்கள் திருத்தும் பணியையும், விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 32 மாவட்டங்களில், 66 மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன; கடந்தாண்டை விட, 36 மையங்கள் அதிகரித்து உள்ளன. திருத்தும் பணி துவங்கி, 10 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.
 

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு: "ஐகோர்ட்டின் இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும்" நீதிபதி அறிவிப்பு

 
          முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு ஐகோர்ட்டின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே உள்ள ராயனூரை சேர்ந்தவர் ஸ்ரீசாய்பிரியா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

அரசுப் பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர்

           கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங் கூறினார். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிக்கும் அமைப்பாக இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்க வந்த அவர் தினமணி நிருபரிடம் கூறியது:
 

டெய்லர்களை அழைத்து விடைத்தாளை தைக்க வேண்டும் கல்வித்துறை புது உத்தரவு

           தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பிளஸ்2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.   பிராக்டிக்கல் தேர்வு அனைத்து பள்ளிகளிலும் கடந்த வாரத்துடன் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: கார் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு 'ரூட் ஆபீசர்' பதவி

 
          பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக, கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள், "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்பட உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. இதற்காக, தேர்வு மையத்தில், புதிய பணியிடம் ஒன்றை, அரசு தேர்வு துறை தோற்றுவித்துள்ளது.
 

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி 10 நாட்களில் முடியும்

 
           நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பல்வேறு மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது.
 

பிளஸ்–2, 10–ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வையொட்டி இரவு நேர மின்தடை வேண்டாம் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை

           பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில், தொடக்கப் பள்ளிகளே இல்லை: ஆர்.நடராஜ்

 
              தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில், தொடக்கப் பள்ளிகளே இல்லை என ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார். சுவாமி விவேகானந் தர் கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில், ஓராசிரியர் பள்ளி திட்டத்தின் 7ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
 

பிளஸ் டூ தேர்வு: தேவையான தூக்கம்... நிறைய மதிப்பெண்கள்!

         பிளஸ் டூ தேர்வு ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. இரவு, பகலாகக் கண் விழித்து மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். எப்படியாவது நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் படாத பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள். ""படித்தவை நன்கு மனதில் பதிய வேண்டுமானால், தேவையான அளவுக்கு நன்றாகத் தூங்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive