Half Yearly Exam 2024
Latest Updates
பொதுத் தேர்வு "ஆய்வு அலுவலர்கள் கூட்டம்"
நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2014, மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடத்துவதற்கான முக்கிய அறிவுரைகள் வழங்கும் பொருட்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் தலைமையில் "ஆய்வு அலுவலர்கள் கூட்டம்" 25.02.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.
முதல்வரின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம்
அரசாணைக்கும், முதலமைச்சர் அறிவிப்புக்கும்,
முர ணாக ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பார்வையற்றவர்களுக்கு மட்டும் தனித்தேர்வு என்ற அறிவிப்பை ரத்து
செய்துஅனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கும் நடத்த உத்தரவிடுமாறு, தமிழக முதல்
வருக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்
நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மார்ச், 3ல் துவங்கும் பிளஸ் 2 தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சு! : தேர்வுப்பணியில் 1 லட்சம் பேரை ஈடுபடுத்த திட்டம்
பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும், ஒன்பது நாள்
மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை,
முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. தேர்வுப் பணியில், ஆசிரியர், ஆசிரியர்
அல்லாத ஊழியர், ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மார்ச், 3 முதல்,
25 வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. 8.45 லட்சம் மாணவ, மாணவியர்,
தேர்வை எழுத உள்ளனர்.
"ஆன்-லைன்' குளறுபடியை தவிர்க்க, தேர்வுத்துறை அமைத்த சிறப்பு மையங்கள்
தேர்வுகளுக்காக, மாணவ, மாணவியர், தனியார்,
"பிரவுசிங்' மையங்களில் பதிவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை
தவிர்க்க, முதல் முறையாக, தேர்வுத்துறை, 32 மாவட்டங்களிலும், சிறப்பு
மையங்களை அமைத்து எடுத்த நடவடிக்கை, மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்று
உள்ளது. அதே நேரத்தில், "வருமானம் போய்விட்டதே' என, "பிரவுசிங்' மையங்கள்
புலம்புகின்றன.
பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?
வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச்
சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல்
(Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச்
செல்ல நேரலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன ஆணைவழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர், 498 பேரை, பட்டதாரி ஆசிரியராகபதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்களில், நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு களில்,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, நேரடியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152பேருக்கான பணி நியமன கலந்தாய்வு, இன்று, பிற்பகல்,2:30 மணிக்கு,முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெற்றது.
தொடக்கக் கல்வி - பட்டதாரி / தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு 01.01.2013 Panel தயாரித்து வெளியிட இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி / தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு 01.01.2013 நிலவரப்படி தகுதியுடைய தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்து வெளியிட இயக்குனர் உத்தரவு
Click Here For Download Director's Proceeding
Strike - அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுப்பணி மூலம் செயல்படவேண்டும் என இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 7அம்சக் கோரிக்கையை நடைபெறும் போராட்டத்தால் எந்த பள்ளியும் மூடப்படக்கூடாது எனவும், அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுப்பணி மூலம் செயல்படவேண்டும் எனவும் இயக்குனர் உத்தரவு
Click Here For Download Director's Proceeding
அரசு நடுநிலைபள்ளிகளில் கணித ஆய்வு கூடம் நிறுவுதல் குறித்து அறிவுரை
2013-2014ஆம் ஆண்டு பகுதி 2 திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்தவும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ \மாணவியர்களுக்கான ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் வீதம் 32 மாவட்டத்திற்கு 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ரூ.2.00 இலட்சம் வீதம் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.128.00 இலட்சம் ( 64 x 2) ""நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்துதல்"" திட்டத்தின் மூலம் கணித ஆய்வு கூடங்கள் (Maths Learning in Upper Primary School) நிறுவ நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
வரிந்து கட்டும் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள்
தேர்தலின் போது தான் பொதுமக்கள் தான் அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்று கொடிபுடிப்பார்கள்.
இதற்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களும் விதிவிலக்கல்ல.
ஆசிரியர்கள் 'லீவ்' போராட்டம்: 'பிசுபிசுக்க' அதிகாரிகள் திட்டம்
தமிழகத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 'பிசுபிசுக்க' வைக்க,
ஆசிரியர் பயிற்றுனர்கள் பாடம் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் முடிவு
செய்துள்ளனர்.
தொடக்கக்கல்வித்துறையில் Middle HM & Ele. HM Promotion நாளை(22.02.2014) நடைபெறும்
DEE-பதவிஉயர்வு கலந்தாய்வு.2011 - 12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 65 நடுநிலைப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள 55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் விருப்ப ஓய்வு போன்றவற்றால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்குமான பதவி உயர்வு கலந்தாய்வு, 01.01.2013 தேதிய பேணலின் அடிப்படையில் நாளை(22.02.2014) காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுக்கு தயார் நிலையில் இருப்பது எப்படி? முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வு இயக்குனரகம் சுற்றறிக்கை
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுக்கு தயாராக இருப்பதற்கு உரிய பல்வேறு அறிவுரைகளையும் சுற்றறிக்கையாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் அனுப்பி உள்ளது.
498 இடைநிலை ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு
498 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்விற்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
பொதுத் தேர்வு நேரத்தில் விடுப்பில் சென்ற ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும்: அமைச்சர் எச்சரிக்கை
பொதுத் தேர்வு நேரத்தில் விடுப்பில் சென்ற ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்றும் இல்லையேல் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்தார்.
டிட்டோஜாக் - 06.03.2014ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு
டிட்டோஜாக் - பேச்சுவார்த்தைகளில் எந்த பயனும் ஏற்படாததால் முதலமைச்சர் அழைத்துப் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி, 06.03.2014ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு
தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
இடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வும் இன்றைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வுடன் நடத்தப்படும் என பெரிதும் ஆவலாக எதிபார்க்கப்பட்டது.
தேசிய திறனாய்வு தேர்வு: கேள்வித்தாள் இல்லாததால் தேர்வு நேரம் மாற்றியமைப்பு
பல மாவட்டங்களில், கேள்வித்தாள் கட்டுகளை ஏற்றிய வாகனங்கள், குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால், பள்ளி மாணவர்களுக்கு, இன்று காலை, நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு, 43,051 மையங்கள் மூலம், நாளை 2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாடு முழுவதும்
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஜனவரி 19ம் தேதி மற்றும் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு: விடுமுறையில் செல்ல ஊழியர்களுக்கு அரசு கட்டுப்பாடு.
அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு படிப்பதற்காக, விடுமுறையில் செல்லும் போது, "விடுமுறை காலம் முடிந்ததும், பணிக்கு திரும்புவேன்' என, பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ப்ளஸ் 2 விடைத்தாள்கள்: 16ம் எண் ஊசியால் ஒரு அங்குலத்துக்கு 6 தையல் போடவேண்டும்.
தமிழகத்தில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்காக, பார்கோடு எண் அமைந்த, மேல் தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; மேல் தாளுடன், விடைத்தாள்களை, 6ம் எண் ஊசியில், வெள்ளை நூலால், ஒரு அங்குலத்துக்கு, ஆறு தையல் விழும் வகையில் தைக்குமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.
ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற புது விண்ணப்பம்
ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, "பென்ஷன்' மற்றும் இதரபணபலன்களை வழங்கும்
நடைமுறையை எளிதாக்குவதற்காக, புது விண்ணப்பத்தை,அரசு அறிமுகப்படுத்த
உள்ளது.