Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை தமிழாசிரியர் : பணி நியமன ஆணை

விழுப்புரம் மாவட்டத்தில் 47 பேருக்கு பணி நியமன ஆணை

           தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை வகித்தார். இந் நிகழ்ச்சியில் முதுகலை தமிழ் படித்து தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 

சிவகங்கை மாவட்டத்தில் 17பேருக்கு பணி நியமன ஆணை

        ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 17 பேர் ஆன் லைன்முறையில் பணியிடங்களை தேர்வு செய்ததைத் தொடர்ந்து,சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன்
பணி நியமன ஆணையை வழங்கினார்

தருமபுரி
 
          இந்தத் தேர்வில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 61 பேர் தேர்ச்சி பெற்றனர்.

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு.



          ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இரட்டைப்பட்டம் வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் அடுத்த வாரம் SLP தாக்கல்


           இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி ஆனதால் வழக்கை உச்ச நீதி மன்றம் கொண்டு செல்ல வழக்கின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 18.2.2014 அன்று சென்னையில் வழக்குரைஞரை சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு பின் நம்மை தொடர்பு கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்வதில் உறுதியாக உள்ளதாகவும், அடுத்த வாரம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வழக்குரைஞருடன் புதுதில்லி செல்லவிருப்பதாகவும் அப்பொழுது சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் நம்மிடம் தெரிவித்தனர்.
 

அவசர அறிவிப்பு - NMMS Exam Time Changed.


          EXAM CONDUCTED IN AFTERNOON INSTED OF FORE NOON AS ALREADY ANOUNCED 

          NMMS - தேசிய திறனாய்வுத் தேர்வு 22.02.2014 அன்று நடைபெறுதம் நேரம் கீழ்கண்டவாறு மாற்றப்படுகிறது.

முதல் தாள்  (Mental Ability Test)      - 2.00 PM to 3.30 PM
இடைவேளை (Break Time)    -3.30 PM to 4.00 PM 
இரண்டாம் தாள் (Scholastic Aptitude Test ) - 4.00 PM to 5.30 PM
        

NMMS Exam Materials

Materials
Model Questions. 

PG Tamil - இன்றே பணியில் சேரலாம்


             முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான காலையில் நடந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.


அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பு

         டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு

           டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
 

கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும்

       அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு

முதுகலை தமிழாசிரியர் கலந்தாய்வு காலிப்பணியிடங்கள் 12 மணி நிலவரப்படி நிரப்பப்பட்ட விவரம்.

முதுகலை தமிழாசிரியர் கலந்தாய்வு காலிப்பணியிடங்கள் 12 மணி நிலவரப்படி நிரப்பப்பட்ட விவரம்.
உத்தேச விவரம் இது..மாற்றத்துக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது
1. Chennai. -----------------------------

2. Ariyalur VACANT - 1. FILLED - 1

அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

           அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு கலந்தாய்வு தொடங்கியது...

           முதலில், சொந்த மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி, பின்,  வெளி மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கும், கலந்தாய்வு நடக்கும்.

2012 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது

           ஆசிரியர் தகுதித் தேர்வி தேர்ச்சி பெற்றவர்களில் 152 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு 16பேரும், ஆங்கில பாடத்திற்கு 74பேரும், கணித பாடத்திற்கு 27பேரும், அறிவியல் 14பேரும், சமூக அறிவியல் 21பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
 

ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை முதல்வர் ஜெயலலிதா வெளியிட அதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக் கொண்டார்.

               அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது ஆங்கில திறனை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்குடன் அரசு பள்ளிகளில் 6917 ஆங்கில வழிப் பிரிவுகள் துவங்கப்பட்டன. 
 

Promotion News

         பள்ளி கல்வித்துறையில் 504 பேர், நேற்று முன்தினம்பணி நியமனம் 145 பேர்நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர்

டி.இ.டி., தேர்வில் இதர மாற்றுத்திறனாளிகளை புறக்கணிப்பதா? : தமிழக அரசுக்கு கேள்வி


                "சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), பார்வையற்றோர் மட்டும், அனுமதிக்கப்படுவர்' என்ற, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டி.ஆர்.பி.,) உத்தரவை ரத்து செய்து, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் தேர்வு எழுத, அனுமதிக்க வேண்டும்' என, மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டி.இ.டி., தேர்வில், மாற்றுத் திறனாளிகள், தேர்ச்சி பெறுவதில், பல சிரமங்கள் இருந்ததால், அம்முறையை மாற்ற வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 1995ல் இயற்றப்பட்ட, சமவாய்ப்பு சட்டத்தின் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், பல போராட்டங்களை நடத்தினர்.

Job News

ஆர்.எ ம்.எஸ்.ஏ.: தொகுப்பூதியத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

           புதுகை ஆர்.எ ம்.எஸ்.ஏ., திட்ட ஒருங்கிணை ப்பாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 உதவி மேலாளர் மற்றும் 2 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்துக்கு தொகு ப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விரும்பும் தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 

வருமானவரி பற்றிய தகவல்களுக்கு புதிய இணையதளம் ஒரு வாரத்தில் முழு வீச்சில் செயல்படும் என அதிகாரிகள் தகவல்

          வருமானவரி பற்றிய தகவல்களுக்கு புதிய இணையதளம் நேற்று தொடங்கப்பட்டது. ஒரு வாரத்தில் முழு வீச்சில் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களுக்கான பதவி உயர்வு / பணி மாறுதல் நிரப்பி அரசு உத்தரவு

       தமிழகத்தில் காலியாக உள்ள 5 மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களை பத்வி உயர்வு / பணி மாறுதல் மூலம் நிரப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு:

 
           தேர்வுத் துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, "நாமினல்ரோல்' வெளியிடப்படாததால், இன்று நடக்கவிருந்த, செய்முறை தேர்வு, திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில், 10ம் வகுப்புக்கு, சமச்சீர்கல்வி முறையில், அறிவியல் செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
 

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி

 
             இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 937 இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புது வீடு வாங்கப்போறீங்களா?: மார்ச் 31க்குள் முடிவு எடுங்க இல்லையேல் வரிச்சலுகை கிடையாது.


                 முதல் முறையாக வீடு வாங்க திட்டம் போட்டிருக்கிறீர்களா? கவீடெல்லாம் பார்த்துமுடிவு செய்துவிட்டால் யோசிக்காதீங்க. க மார்ச் 31 ம் தேதிக்குள் முடிவு செய்து வீட்டுக்கடன் வாங்கிடுங்க. இல்லாவிட்டால் கூடுதல் வரிச்சலுகை கிடைக்காது. ஆம், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்தபோது, கடந்தாண்டு போட்ட பட்ஜெட்டில் தரப்பட்ட வரிச்சலுகைகள் சிலவற்றை தொடாமல் விட்டு விட்டார். இடைக்கால பட்ஜெட் என் பதால் கடந்த பட்ஜெட்டில் தரப்பட்ட கூடுதல் வரிச்சலுகைகள் மீண்டும் அறிவிக்கப்படவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் பேர் பார்டரில் பாஸ் - தி இந்து


              ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் பேர், குறைந்தபட்ச அளவான 82 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 26 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.
 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் அகவிலைபடியை வழங்க திட்டம், மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 
           அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை இணைத்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்தால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். லோக்சபா தேர்தலுக்கு முன் இது குறித்த அறிவிப்பு வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணி :தமிழக முதல்வர் 2 பேருக்கு இன்று (20.02.14)பணி நியமன ஆணை வழங்கினார்.

         ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
 

மத்திய அரசு ஊழியர்களுக்கான டி.ஏ.வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க முடிவு..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது

         "ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல்  காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண்  அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய  (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது.

8th STD NATIONAL TALENT SEARCH EXAMINATION STUDY MATERIALS

                       
                       

OC பிரிவினர் பாதிக்காவண்ணம் இட ஒதுக்கீடு

          உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது. அப்படி தாண்ட வேண்டி சட்ட திருத்தத்தை மாநில அரசு கொண்டு வந்தால், அதனால் oc பிரிவினர் பாதிக்காவண்ணம் சட்டம் இயற்ற உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு 69% இட ஒதுக்கீடு கொடுக்கும் போது தர வரிசையில் 31 சதவிகிதத்தில் இருந்து  50 சதவிகிதத்திற்குள்  உள்ள oc பிரிவினருக்கு உபரியாக  பணி இடங்களை ( super   numeracy seats ) உருவாக்கி நியமனம் வழங்க வழி வகை செய்துள்ளது. இதன் G.O. இத்துடன் தரப்பட்டுள்ளது.



தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை ரத்து செய்யக் கோரி வழக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


       ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் பங்கேற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை, ரத்து செய்யக் கோரிய வழக்கில், டி.ஆர். பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐேகார்ட் கிளை உத்தரவிட்டது.

முதுகலை ஆசிரியர்: 4 பாடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு விரைவில்

           விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி இயக்குனர், நிலை - 1, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கானஇறுதி தேர்வு முடிவு, நேற்று முன்தினம்(18.02.14) இரவு வெளியானது. ஹோம்சயின்ஸ் பாடத்துக்கான இறுதிப்பட்டியலில் ஒருவர்கூட இடம்பெறவில்லை.இதனால், ஹோம் சயின்ஸ் தவிற பிற நான்கு பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive