Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வி.ஏ.ஓ., தேர்வில் 19 ஆயிரம் பேர் பங்கேற்பு

           புதுச்சேரியில் நேற்று நடந்த வி.ஏ.ஓ ., தேர்வில் ஆயிரம் பேர் பங்கேற்றனர். புதுச்சேரி அரசின் வருவாய் துறையில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
 

Online Classes with Wifi Facilities in Govt Schools

         திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 11 அரசு பள்ளிகளில் "இன்டர்நெட்" வசதியுடன் கம்ப்யூட்டர் மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


பிளஸ் 2 தனித்தேர்வர்கள்: தத்கல் முறையில் இன்று (17.02.2014) முதல் (19.02.2014)வரை விண்ணப்பிக்கலாம் :

            பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தத்கல் முறையில் பிப். 17 முதல் புதன்கிழமை (பிப்.19) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

2012 ல் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி-நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமன ஆணை

 
         ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2012 ல் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணை பெற்றபின் இணையான பட்டம் இல்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட சிலர் வழக்குமன்றத்தை நாடினர். அவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

சம்பளதாரர்களுக்கு வரிமான வரி இல்லாமல் செய்யப்படலாம்

 
          சம்பளதாரர்களுக்கு வரிமான வரி இல்லாமல் செய்யப்படலாம் அல்லது சேவை வகுப்பினருக்கு முழுவரி விலக்கு அளிக்கபடலாம், சுப்பிரமணியசுவாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.
 

அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 90 சதவீதம், விரிவுரை யாளர் பணியிடங்கள் காலி!

 
           "அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 90 சதவீதம், விரிவுரை யாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர். காரைக்குடியில், அரசு மற்றும் உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது.

தமிழக மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க பல்கலை மாநாட்டில் விவாதம்

 
              அமெரிக்காவின் லாங்வுட் பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் கண்டுபிடிப்பு குறித்து விவாதம் நடந்தது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கு, அம்மாணவர், "டெலி கான்பரன்சிங்' மூலமாக விளக்கம் கொடுத்தார். 

மொபைல் போன் கட்டணங்களை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு

          தனியார் நிறுவனங்களின் மொபைல் போன் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படவுள்ளன. நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு, மொபைல் போன் சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்து உள்ளன.

அரசு பள்ளிகளில் கரையும் நிலையில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

         அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப் பிரிவுகள், பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருப்பதால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில், இந்த பாடப் பிரிவுகள் காணாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.
 

RMSA School Buildings - Fund Alloted Now.

தமிழகத்தில் 1,851 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள். 

            தமிழகத்தில் 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்,
          மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2010-11ல் பள்ளிதகவல் மேலாண்மை அறிக்கையின் படி, ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான வகுப்பறைகள் கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

JOB News

 

        கனரா வங்கியில் Specialist Officer பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை – Across India கடைசி தேதி: பிப்ரவரி 22, 2014


இடைக்கால பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்புகள் இருக்காது: பா. சிதம்பரம்

         2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்புகள் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என நிதியமைச்சர் பா. சிதம்பரம் கூறியுள்ளார்.

அரசு பள்ளிகளில் 100 சதவீத இலக்கு ஃப்ளக்ஸ் போர்டு வைக்க அறிவுறுத்தல்

 
          அரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான குறிக்கோள்களை, ஃப்ளக்ஸ் போர்டாக வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 90 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும், 100 சதவீத தேர்ச்சியை இலக்காக வைத்து, பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
 

எதிர்காலத்திற்கான கல்வி

 
         கல்வி எந்த காலத்திலும் ஒரே மாதிரி இருந்ததில்லை. ஏனெனில் கால, பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு கற்க வேண்டிய பாடங்கள், தொழில்நுட்பங்கள், கலைகள் போன்றவை புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஓவ்வொருவரின் தேவை, கற்றல் திறனுக்கு ஏற்ப பாடங்கள் கற்றுத்தரும் ஆசிரியர்களின் தேவைப்பாடும் நாட்டிற்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபட்டே காணப்படுகிறது.


SG Asst Pay Scale - Court News

           இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு !!!

15 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு

        பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம்., விரைவில், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 15,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்காக போடப்பட்ட தமிழக பட்ஜெட்!

 
           கடந்த, 13ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 'ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி யிடத்தாற் செயின்' என்ற, சிறப்பான திருக்குறள் இடம் பெற்றிருந்தது. காலத்தையும், இடத்தையும் அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டால், உலகமே கைகூடும் என்பது, அதன் பொருள்.

TET - ஆசிரியர் பணி நியமனம் தாமதமாகும், புதிய நியமனம் ஜூன் மாதம் நடைபெறும்

 
           ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும் தாமதமாகும். பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடக்கும். அதன் பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன் மாதம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இதனால் அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர்.

Exam Renumeration Raised GO

G.O.306 - DGE - 15% RENUMERATION RAISED FOR SSLC_HSC EXAMS  - Click Here

மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வில் மீண்டும் மாற்றம் முதன்மைத் தேர்வில் கல்வியியல் பாடம் நீக்கம்.


           பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்கள்75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
 

10th Latest Study Material

RMSA - 2014 Guide

SSLC - TAMIL PAPER - I - CLICK HERE
SSLC - TAMIL PAPER - II - CLICK HERE
SSLC - ENGLISH PAPER - I - CLICK HERE
SSLC - ENGLISH PAPER - II - CLICK HERE
SSLC - MATHS - CLICK HERE
SSLC - SCIENCE - CLICK HERE
SSLC - SOCIAL SCIENCE - CLICK HERE

12th Latest Study Material

RMSA - 2014 Guide

SCHOOL EDUCATION DEPARTMENT HSC GUIDE

HSC - TAMIL - I & II - CLICK HERE
HSC - ENGLISH - I - CLICK HERE
HSC - ENGLISH - II - CLICK HERE
HSC - MATHS - CLICK HERE
HSC - PHYSICS - CLICK HERE
HSC - CHEMISTRY - CLICK HERE
HSC - BOTANY - CLICK HERE
HSC - BIOLOGY - CLICK HERE
HSC - ZOOLOGY - CLICK HERE
HSC - COMMERCE - CLICK HERE
HSC - ECONOMICS - CLICK HERE
HSC - HISTORY - CLICK HERE
HSC - ACCOUNTANCY - CLICK HERE
 

TET Posting..- Nice Comment...


              இன்னிக்கி அதிகாலைல ஒரு கனவு கண்டேன்.

           ஒரு பெரிய மைதானம். யப்பா! திரும்புன தெசையெல்லாம் டிப் டாப்பா சனங்க கூட்டம். எல்லாரும் வரிசை வரிசையா அங்கிட்டு இங்கிட்டு திரும்பாம ஒரே தெசைய பாத்துக்கிட்டு நிக்கிறாங்க. என்னாடானு அங்கிட்டுப் பாத்தா ஒரு மேடை. அந்த மேடையில 2ன்னு ஒரு எழுத்து 4ன்னு இன்னொரு எழுத்து அப்பிடியே மின்னுச்சி. திடீர்னு எங்க அம்மா வந்து மைக்கில ஏதோ பேசுச்சி பாருங்க. அம்புட்டுதான். பூரா பேரும் கைதட்றாங்க. என்ன ஆச்சரியம். கைதட்ன கைல எல்லாம் ஒவ்வொரு அட்டைங்க இருக்குது. நான் அப்படியே பறந்து கூட்டத்த சுத்திப் பாத்தேன். எப்படியும் 3000 வயசானவங்க, 17000 எளவட்டங்க அப்புறம் ஒர 4000 சின்னஞ்சிறுசுக இருப்பாங்க (ரெண்டு நாலு மூனு முட்டை). அம்புட்டு பேரும் ஆடுறாங்க. பாடுறாங்க. ஒரே கொண்டாட்டந்தான் போங்க.

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 17.02.2014 அன்று விசாரணைக்கு வருகிறது

 
          இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு வரும் 17.2.14 அன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்கள் ஆஜர் ஆக உள்ளார்.
 

மோடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்செய்வோம் என, அறிவிப்பாரா?

மோடியால் சம்பளதாரர்களுக்கு சலுகை கிடைக்குமா?

           பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி தன் பிரசாரத்தின் போது, தான் பிரதமராக்கப்பட்டால் செய்யப் போகும் காரியங்கள் என, நிறைய திட்டங்களை முன் வைத்துப் பேசுகிறார். அவர், சமீபத்தில் பொதுமக்களுடன் நடத்திய, வீடியோ கான்பரன்ஸ் உரையாடல் பிரசாரத்தில், 'நான் பிரதமரானால், கட்டாயம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும், கறுப்பு பணத்தை மீட்பேன். அப்படி மீட்டு கொண்டு வரப்படும் பணமே, பல ஆயிரம் கோடிகள் இருக்கும் என்பதால், நாட்டில் சரியான முறையில், வருமான வரி செலுத்திக் கொண்டிருக்கும், மாத சம்பளதாரர்களுக்கு, வருமான வரி பிடித்தத்தில், 5 முதல் 10 சதவீத அளவுக்கு, சிறப்பு சலுகை அளிக்கப்படும்' என, தெரிவித்தார். இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது குறித்து, பிரபலங்கள் பகிர்ந்து கொண்ட மாறுபட்ட கருத்துக்கள் இங்கே:

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கி வருகின்றது.

            ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர்
நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கேஜ்ரிவால்

 
          ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால், டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

பொதுத்தேர்வுக்கு வழிகாட்டும் கையேடு- பள்ளி கல்வித்துறை வெளியீடு

 
           பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் சிறப்பாக  தேர்வு எழுதுவதற்கு வசதியாக, அனைத்து பாடங்களுக்கான வழிகாட்டுதல்  கையேடு பள்ளிக் கல்வித்து றை வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஏற்கனவே  கல்வி சார் மேலாண்மை தகவல் முறைமை திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதன்  மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் போன்றவர்களின் முழுமையான தகவல்கள், துறைகளுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்துதல், பள்ளி நிர்வாகம்  மற்றும் கல்விசார்  பாடப் பொருள் பகிர்ந்தளிக்கும் தளம் போன்றவை இணைய தளம்  மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

பிளஸ் 2 'தத்கால்' திட்டம் அறிவிப்பு

 
             பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், 'தத்கால்' திட்டத்தின் கீழ், இம்மாதம், 17 முதல் 19 வரை, தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர் வசதிக்காக, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும், ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 

பத்தாம் வகுப்பு பொது தேர்வு: 10.42 லட்சம் பேர் பங்கேற்பு

 
          மார்ச், 26ல் இருந்து, ஏப்ரல், 9 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வை, 10.42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். 
 

ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்க்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்: அரசு உத்தரவு

 
             ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளதால், 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுத்தவர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஓர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து வழக்கு

 
            ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive