12 ஆம் வகுப்பு இயற்பியல் செய்முறைத் தேர்வு மாதிரி வினாத்தாள் -
Click Here
Prepared by Mr.
K.T.MUTHU MOHAMED,
PGT PHYSICS, GOVT HR.SEC.SCHOOL, ANNAVASAL, PUDUKKOTTAI DIST.
சென்னையில் நடைபெற்ற
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பேசிய சம்பத், 'ஆந்திரா, ஒடிசா, சிக்கிம்
மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன; டில்லியில் நாளை நடைபெறும்
அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் லோக்சபா தேர்தல்
நடத்தப்படும் தேதி குறித்து ஆலோசிக்கப்படும்;
மத்திய - மாநில அரசுகளிடமிருந்து எவ்வளவு சலுகைகளை பெற முடியும் என
கணக்கிட்டு பேரணி, தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப் பாட்டம் என்றெல்லாம் அரசு
ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்து
வருகின்றன.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு
சுமார் 8 லட்சம் மாணவ மாணவியர் எழுதுவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக் கால்கு
லேட்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்
படுத்தி வருகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், "கிளர்க்"
என்ற குமாஸ்தா நிலையில், 2,269 பணியிடங்கள், காலியாக உள்ளன. 2012-13ல் ஏற்பட்ட இந்த காலி இடங்களை நிரப்ப, மே 18ல் போட்டி தேர்வு
நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. பட்டதாரிகள், www.tnpsc.gov.in என்ற இணையதளம்
வழியாக, மார்ச் 5ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த நவம்பர் மாதத்தில் எம்.எஸ்சி,
இயற்பியல்,
கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ், எம்.எஸ்சி., பாடனி, எம்.எஸ்சி., விசுவல்
கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.
இரட்டைப்பட்டம் செல்லாது எனவும்,
பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி
மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது என உயர்நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ள நிலையில் இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி
இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு
செய்யப்பட உள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்த
நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை அறிக்கை
வெள்ளிக்கிழமை அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 110 நகரங்களில்
வசிப்பவர்கள், மின் கட்டணத்தை எந்த ஊரிலும் செலுத்தும் புதிய வசதியை
தமிழ்நாடு மின் வாரியம் அமல்படுத்த உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.) நடத்தியதேர்வின் விடைகளை வெளியிடுவதில் நடந்த குழப்பம்
தொடர்பாக இரண்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பல்கலை விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான "செட்"
தேர்வில் யு.ஜி.சி., முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண்
பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும்
என தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து பாரதியார் பல்கலை தாக்கல் செய்த
மேல்முறையீட்டு மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க
ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் அனைவரும் ஒரே
மாதிரியான திறனோடு இருப்பதில்லை. ஒவ்வொருவருக்குமான தேவைகள் மாறுபட்டு
இருக்கிறது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி
ஆசிரியர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளதால், பணியில் சேருவதற்கான
நியமன ஆணை மற்றும் பணியில் சேரும் காலத்தை மே மாத இறுதியில் இருக்கும்
வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
விடுக்கப் பட்டு உள்ளது.
"ஒன்றிய அளவிலான, தொடக்க, நடுநிலைப் பள்ளி
ஆசிரியர்களின் விபரங்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதை அந்தந்த
பள்ளிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என தொடக்க கல்வி இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும்
அடுத்த ஆண்டு முதல் முப்பருவ முறை வருகிறது. அதற்காக 2 பிரிவுகளாக
புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு உண்டா இல்லையா என்பது
குறித்து குழப்பம் நீடித்து வருவதால் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி
மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து,
ஆசிரியர் தகுதித் தேர்வில்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்
மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண்
பெற்றாலே தேர்ச்சி பெறலாம்.
TRB - TET ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினர் 82 / 150 (55%) மதிப்பெண்கள் பெற்றாலே வெற்றி பெற்றவர்களாவர்கள் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் வராலாறு பாடத்துக்கான தமிழ்
வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வாபஸ் பெற்றுள்ளது.
கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதர
பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள்
பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை
மட்டும் டிஆர்பி வாபஸ் பெற்றுள்ளது.
பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண்களை, பிப்., 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வகுப்பு,
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தொடங்கி வைத்தார்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு,
முறையே மார்ச் 3 மற்றும் மார்ச் 26ம் தேதி துவங்குகின்றன. இதற்கு, தனித்
தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய, மாணவ, மாணவியருக்கான, "தத்கல்" திட்ட
அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அரசு பணியில்சேர்பவர்களின், கல்விச்
சான்றிதழ்கள், உண்மை தன்மை அறிதலுக்காக, சம்பந்தப்பட்ட பல்கலைகளுக்கு,
அனுப்பப்படும் போது, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுவதாக
கூறப் படுகிறது. தமிழக அரசு பணியில்சேருவோர், இரண்டு ஆண்டுகளுக்குள்,
அதாவது தங்கள், தகுதிகாண் பருவத்திற்குள், தங்களின் கல்விச் சான்றுகள்
உண்மையானவை என்பதை நிரூபிக்க வேண்டும்.
"ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 5 சதவீத தளர்வு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, நேற்று, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 114 மையங்களில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, நேற்று துவங்கியது. இத்தேர்வு மதிப்பெண் பதியும் நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
tnpsc current notification also its available in www.tnpsc.gov.in website.
தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை கருதி பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள், சலுகைகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
லேப்டாப்' திருடுபோன, பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கும் வரை, "லோப்டாப்'களை தலைமை ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பில் பாதுகாக்க வேண்டும்.
அகஇ - 2013-14ஆம் ஆண்டிற்கு 40% தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி, குழந்தை உரிமைகளும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் 22.02.2014 அன்று நடைபெற உள்ளது
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விபரங்களை சரிவர பூர்த்தி செய்யாத ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களை, நேற்று, இயக்குனரகத்திற்கு வரவழைத்து, நீண்ட நேரம் நிற்க வைத்து, தேர்வுத் துறை, தண்டனை அளித்தது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இந்திய அஞ்சல் துறையின் தமிழக அஞ்சலக
பிரிவில்காலியாக உள்ள MTS பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.