Half Yearly Exam 2024
Latest Updates
TET - தேர்ச்சிமதிப்பெண்ணை 82 என நிர்ணயித்துள்ளதால் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி
மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து,
ஆசிரியர் தகுதித் தேர்வில்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்
மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண்
பெற்றாலே தேர்ச்சி பெறலாம்.
TET - Pass Mark 82 / 150 - GO Issued.
TRB - TET ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினர் 82 / 150 (55%) மதிப்பெண்கள் பெற்றாலே வெற்றி பெற்றவர்களாவர்கள் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் வராலாறு பாடத்துக்கான தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியல் வாபஸ்
முதுகலை ஆசிரியர் வராலாறு பாடத்துக்கான தமிழ்
வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வாபஸ் பெற்றுள்ளது.
கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதர
பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள்
பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை
மட்டும் டிஆர்பி வாபஸ் பெற்றுள்ளது.
அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி
அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வகுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தொடங்கி வைத்தார்
உண்மை தன்மை அறியும் சான்று கிடைப்பதில் கால தாமதம் : அரசு பணியாளர்கள் தவிப்பு
அரசு பணியில்சேர்பவர்களின், கல்விச்
சான்றிதழ்கள், உண்மை தன்மை அறிதலுக்காக, சம்பந்தப்பட்ட பல்கலைகளுக்கு,
அனுப்பப்படும் போது, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுவதாக
கூறப் படுகிறது. தமிழக அரசு பணியில்சேருவோர், இரண்டு ஆண்டுகளுக்குள்,
அதாவது தங்கள், தகுதிகாண் பருவத்திற்குள், தங்களின் கல்விச் சான்றுகள்
உண்மையானவை என்பதை நிரூபிக்க வேண்டும்.
TET - மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்' என முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்து உள்ளனர்
"ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 5 சதவீத தளர்வு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, நேற்று, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் பதியும் நடைமுறையில் மாற்றம்
திருப்பூர் மாவட்டத்தில் 114 மையங்களில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, நேற்று துவங்கியது. இத்தேர்வு மதிப்பெண் பதியும் நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
TNPSC-2014 : Current Notification for CCSE-II (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES) FOR THE YEAR 2013-2014
tnpsc current notification also its available in www.tnpsc.gov.in website.
13ம் தேதி தமிழக பட்ஜெட்: பள்ளிக்கல்விக்கு 19,000 கோடி?
தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை கருதி பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள், சலுகைகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் தலைமை ஆசிரியர்கள் கலக்கம்
லேப்டாப்' திருடுபோன, பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கும் வரை, "லோப்டாப்'களை தலைமை ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பில் பாதுகாக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி
அகஇ - 2013-14ஆம் ஆண்டிற்கு 40% தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி, குழந்தை உரிமைகளும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் 22.02.2014 அன்று நடைபெற உள்ளது
மாணவரை போல், ஆசிரியர்களை நிற்க வைத்து தண்டனை : தேர்வுத் துறை தடாலடி நடவடிக்கை
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விபரங்களை சரிவர பூர்த்தி செய்யாத ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களை, நேற்று, இயக்குனரகத்திற்கு வரவழைத்து, நீண்ட நேரம் நிற்க வைத்து, தேர்வுத் துறை, தண்டனை அளித்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிப்புக்கான அரசாணை விரைவில் வெளியாகும்
கவர்னர் உரைக்கு பதில் அளித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார்.
பிப்ரவரி 13.ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.
பிப்ரவரி 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. அன்று காலை 10 மணிக்கு 2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை தாக்கல் செய்யப்படும் என சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு முறையில் மாற்றம் எதுவும் இல்லை
பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டம் எதுவும், அரசின் பரிசீலனையில் இல்லை. தற்போதுள்ள நடைமுறையே தொடரும்" என மத்திய அரசு நேற்று அறிவித்தது.
TET Pass Mark 82 ? - ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிப்புக்கான அரசாணை விரைவில்....
கவர்னர் உரைக்கு பதில் அளித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,ஆசிரியர் தகுதி தேர்வில்இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார்.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது
தகுதித்தேர்வு மதிப்பெண் உள் ளிட்ட வெயிட்டேஜ் மார்க் முறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை தேர்வு செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண்பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னு ரிமை வழங்க அரசு முடிவுசெய் துள்ளது.
RTI - குறைவான ஊதியத்திற்கு மறு நிர்ணயம் செய்ய அனுமதி இல்லை என தகவல்
த.அ.உ.சட்டம்-அரசாணை எண்.240-ன்படி மறு ஊதிய நிர்ணயம் ஏற்கனவே நிர்ணயம் செய்த ஊதியத்தை விட குறைவான ஊதியத்திற்கு மறு நிர்ணயம் செய்ய அனுமதி இல்லை என தகவல்
SCIENCE BT's - REGULARISATION ORDER
2010-2011 DSE -DSE - 2010-11 TRB APPOINTED SCIENCE BT - REGULARISATION ORDER ISSUED - ORDER - CLICK HERE
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் கட்டுரை வினாக்களில் மாற்றம் : ஆசிரியர்கள் வேண்டுகோள்
10ம்
வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் எட்டு மதிப்பெண் பெறும், பொதுக்கட்டுரை
குறித்த வினா கேட்கப்படுகிறது. இரண்டு தலைப்புகளில் மட்டுமே வினாக்கள்
கொடுக்கப்படுவதால் கட்டுரை எழுத மாணவர்கள் கடும் சிரமமடைகின்றனர்.
இதுகுறித்து தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோ கூறுகையில், ‘‘
சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் 10 தலைப்புகளில் பொதுக்கட்டுரை உள்ளது.
ஆனால் இவற்றில் இருந்து கேட்பதைவிட பழைய பாடத்திட்டத்தில் இருந்தே கட்டுரை
வினாக்கள் அதிகம் கேட்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்பு
பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
ஆசிரியர்கள் நான்காண்டில் பெறும் ‘டபுள் டிகிரி’ டெட் தேர்வு, பதவி உயர்வுக்கு பொருந்தாது: அரசு உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
ஆசிரியர்
தகுதி தேர்வுக்கு (டெட்) ‘டபுள் டிகிரி’ தகுதியானது அல்ல என்ற அரசின்
கொள்கை முடிவு சரியானதே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
‘‘ஆசிரியர்கள் 4 ஆண்டுகளில் ‘டபுள் டிகிரி’ படித்ததை ஏற்க முடியாது. அந்த
பட்டப்படிப்பானது ஆசிரியர் பணி, பதவி உயர்வு பெற தகுதியானது இல்லை. அதேபோல,
ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் தகுதியானது இல்லை’’ என்று தமிழக அரசு கொள்கை
முடிவு அறிவித்தது. இதை ரத்து செய்யக்கோரி சுமார் 200 ஆசிரியர்கள், உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஏழாவது ஊதியக் குழு - மத்திய அரசு ஊழியர்களும்...
""ஏழாவது
ஊதியக் குழுவுக்கான உறுப்பினர்களை, உடனடியாக நியமிக்க வேண்டும். புதிய
ஊதிய விகிதம் அறிவிக்கும் வரை, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 12, 13 தேதிகளில், வேலைநிறுத்தத்தில்
ஈடுபடுகிறோம்,'' என, மத்திய அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலர், துரை
பாண்டியன் கூறினார்.