Half Yearly Exam 2024
Latest Updates
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிப்புக்கான அரசாணை விரைவில் வெளியாகும்
கவர்னர் உரைக்கு பதில் அளித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார்.
பிப்ரவரி 13.ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.
பிப்ரவரி 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. அன்று காலை 10 மணிக்கு 2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை தாக்கல் செய்யப்படும் என சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு முறையில் மாற்றம் எதுவும் இல்லை
பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டம் எதுவும், அரசின் பரிசீலனையில் இல்லை. தற்போதுள்ள நடைமுறையே தொடரும்" என மத்திய அரசு நேற்று அறிவித்தது.
TET Pass Mark 82 ? - ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிப்புக்கான அரசாணை விரைவில்....
கவர்னர் உரைக்கு பதில் அளித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,ஆசிரியர் தகுதி தேர்வில்இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார்.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது
தகுதித்தேர்வு மதிப்பெண் உள் ளிட்ட வெயிட்டேஜ் மார்க் முறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை தேர்வு செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண்பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னு ரிமை வழங்க அரசு முடிவுசெய் துள்ளது.
RTI - குறைவான ஊதியத்திற்கு மறு நிர்ணயம் செய்ய அனுமதி இல்லை என தகவல்
த.அ.உ.சட்டம்-அரசாணை எண்.240-ன்படி மறு ஊதிய நிர்ணயம் ஏற்கனவே நிர்ணயம் செய்த ஊதியத்தை விட குறைவான ஊதியத்திற்கு மறு நிர்ணயம் செய்ய அனுமதி இல்லை என தகவல்
SCIENCE BT's - REGULARISATION ORDER
2010-2011 DSE -DSE - 2010-11 TRB APPOINTED SCIENCE BT - REGULARISATION ORDER ISSUED - ORDER - CLICK HERE
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் கட்டுரை வினாக்களில் மாற்றம் : ஆசிரியர்கள் வேண்டுகோள்
10ம்
வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் எட்டு மதிப்பெண் பெறும், பொதுக்கட்டுரை
குறித்த வினா கேட்கப்படுகிறது. இரண்டு தலைப்புகளில் மட்டுமே வினாக்கள்
கொடுக்கப்படுவதால் கட்டுரை எழுத மாணவர்கள் கடும் சிரமமடைகின்றனர்.
இதுகுறித்து தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோ கூறுகையில், ‘‘
சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் 10 தலைப்புகளில் பொதுக்கட்டுரை உள்ளது.
ஆனால் இவற்றில் இருந்து கேட்பதைவிட பழைய பாடத்திட்டத்தில் இருந்தே கட்டுரை
வினாக்கள் அதிகம் கேட்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்பு
பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
ஆசிரியர்கள் நான்காண்டில் பெறும் ‘டபுள் டிகிரி’ டெட் தேர்வு, பதவி உயர்வுக்கு பொருந்தாது: அரசு உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
ஆசிரியர்
தகுதி தேர்வுக்கு (டெட்) ‘டபுள் டிகிரி’ தகுதியானது அல்ல என்ற அரசின்
கொள்கை முடிவு சரியானதே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
‘‘ஆசிரியர்கள் 4 ஆண்டுகளில் ‘டபுள் டிகிரி’ படித்ததை ஏற்க முடியாது. அந்த
பட்டப்படிப்பானது ஆசிரியர் பணி, பதவி உயர்வு பெற தகுதியானது இல்லை. அதேபோல,
ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் தகுதியானது இல்லை’’ என்று தமிழக அரசு கொள்கை
முடிவு அறிவித்தது. இதை ரத்து செய்யக்கோரி சுமார் 200 ஆசிரியர்கள், உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஏழாவது ஊதியக் குழு - மத்திய அரசு ஊழியர்களும்...
""ஏழாவது
ஊதியக் குழுவுக்கான உறுப்பினர்களை, உடனடியாக நியமிக்க வேண்டும். புதிய
ஊதிய விகிதம் அறிவிக்கும் வரை, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 12, 13 தேதிகளில், வேலைநிறுத்தத்தில்
ஈடுபடுகிறோம்,'' என, மத்திய அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலர், துரை
பாண்டியன் கூறினார்.
இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - EMIS - தனி நபர் தகவல் தொகுப்பு முறை (PERSONNEL INFORMTION SYSTEM - PIS) - தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களை கொண்டு விவரங்களை உள்ளீடு கோரவேண்டாம் என இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் துவக்க கருத்துருக்கள் அனுப்ப உத்தரவு
பள்ளிப் பண்ணைகள்! வதைபடும் மாணவர்கள்
இந்தப்
பக்கம் கோழிப் பண்ணைகள்... அந்தப் பக்கம் தனியார் பள்ளிகள்... இவை
இரண்டும்தான் நாமக்கல் மாவட்டத்தின் இரு பெரும் வர்த்தக மையங்கள்! இங்கு
மழைக் கால ஈசல்களைப் போல முளைத்து இருக்கும் தனியார் பள்ளிகளில், மாநிலம்
முழுவதும் இருந்தும் பிள்ளைகளைக் கொண்டுவந்து கொட்டுகின்றனர் பெற்றோர்கள்.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு.
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை
நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர்
திரு.சத்தியநாரயணன் அடங்கிய முதன்மை அமர்வில் முதல் வழக்காக வந்த
இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது.
May be 76000 Tet candidates passed? - Dinamalar
புதிய தேர்வர்களுக்கு இந்த மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என்றும், புதிய ஆசிரியர் நியமனம் இப்போதைக்கு இல்லை என்றும் தினமலர் செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டி.ஆர்.பி தெளிவான பதிலை விரைவில் வழங்க வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமேதகுதியானது எனவும் இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
ஒரு வருட பட்டம் சார்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு நகல் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தீர்ப்பு சார்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதியானவர்களுக்கு பிப்.24ல் பணி நியமன உத்தரவு?Dinakaran
பிப்.24ல் பணி நியமன உத்தரவு?
ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுடன், தற்போது மதிப்பெண் சலுகை மூலம் புதிய பட்டியலில் இடம்பிடிப்பவர்களின் சான்றிதழ்களும் அடுத்த இரு வாரங்களுக்குள் சரிபார்க்கப்பட்டு முடிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர்
வேலை நியமன உத்தரவு தயாரிக்கப்பட்டு பாடம் வாரியாக இந்த கல்வி ஆண்டிலேயே ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளவர்கள் விபரம் அறிவிக்கப்படும்.
இவர்கள் அனைவருக்கும் வரும் 24ம் தேதி (ஜெயலலிதா பிறந்த நாள்) முதல்வர் கையால் சென்னையில் வைத்து ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்கப்படலாம் என தெரிகிறது.
எஸ்சி, எஸ்டிக்கு கூடுதல் வாய்ப்பு
கடந்த 2012ம் ஆண்டு நடந்த தேர்வில் எஸ்சி., எஸ்டி பிரிவில் அதிக தேர்வர்கள் தேர்ச்சி பெற வில்லை. இதனால், அவர்கள் பிரிவில் 400 காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போது இடஒதுக்கீடு பிரிவினருக்கு சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பிரிவினருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
சிறப்பு இளைஞர் காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு பிப்.,12ல் நியமன ஆணை.
தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான, பணி நியமன ஆணையை பிப்., 12ல் முதல்வர் ஜெ., வழங்குகிறார். அன்றைய தினமே,
அந்தந்த மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 4 வார கால பயிற்சி துவங்குகிறது.
தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு, 7,500 ரூபாய் சம்பளத்தில் 10,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக, முதல்வர் ஜெ., அறிவித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி.
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்
எஸ்.கண்ணப்பன் கூறினார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கோரிய மனுக்கள் தள்ளுபடி.
ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கேட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
01.01.2014 Panel Preparation Instructions
01.01.2014 Panel Preparation Instructions
BT TO HIGH SCHOOL HEADMASTER PROMOTION 2014-15 - Click Here
TET CV will conduct soon for newly passed candidates.
டி.இ.டி., தேர்வில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது.
PG/TET I / TET II வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் (04.02.2014)விசாரணை நிலை
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
பி.எட்., எம்.எட். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியீடு.
2013 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த பி.எட்., எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகிறது.பி.எட்., எம்.எட்.துணைத் தேர்வு முடிவை www.tnteu.in என்ற இணையதளத்தில் அறியலாம்.தேர்வில் தவறியவர்கள் ஜூன் மாதம் நடக்க உள்ள தேர்வில் கலந்துக்கொள்ள பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
குரூப் 2 தேர்வு: 1,262 பணியிடங்களுக்கு வரும் 10 முதல் கலந்தாய்வு.
குரூப் 2 தொகுதியில் நேர்காணல் அல்லாத ஆயிரத்து 262 பணியிடங்களுக்கு கலந்தாய்வு வரும் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.