Half Yearly Exam 2024
Latest Updates
தனியார் பள்ளிகளுக்கு புது சலுகை; நிர்ணயிக்கப்பட்ட நில அளவு குறைப்பு- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.
தமிழகம் முழுவதும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், குறிப்பிட்ட பரப்பளவில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தளர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 3-வது கட்ட கலந்தாய்வு- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.
குரூப்-4 தேர்வில் சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) பதவிகளில் காலியாக உள்ள 165 இடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட கலந்தாய்வு பிப்ரவரி 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
அரசாணைகளின் தொகுப்பு
தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகுப்பு
2011 Group 2 (30.7.2011) 4th and fifth phase result published...
TNPSC 2011 Group 2 (30.7.2011) 4th and fifth phase result Now Available.
சென்னை மாவட்ட பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு: பிப்.5ம் தேதி தொடக்கம்
சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு
மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 2
வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு
பிளஸ் 2 தேர்வை 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வுக்கு முன்னதாக
அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை
நடத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்.
தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது.
பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்; அரசு ஒதுக்கியது ரூ. 80 லட்சம்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த,மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய்ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை பிப்ரவரி 5க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளை இடமாற்றம்
செய்யும் நடவடிக்கைகளைபிப்ரவரி 5–ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று
தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.
டி.இ.டி., சலுகை மதிப்பெண் தமிழக அரசு தீவிர ஆலோசனை
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட
ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை
நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க,
அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம்
முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர்,
கடுமையாக விமர்சித்து உள்ளார்.
PG/TET I / TET II-வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 29 .01.14 )முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க நீதியரசர் முடிவு.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு
ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள்
)ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்
1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக
விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா
ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
12th Standard Latest Study Materials
Maths
- Maths - Creative Q/A - Mr. S. Manikandan, Jothi Vidhyalaya MHSS, Elampillai, Salem - English Medium
- Maths - Model Question Papers - ERK HrSS, Erumiyampatti - English Medium
Accountancy
Accountancy- 5 Mark Questions - Mr. P. AMMAIAPPAN, GHSS, Thuvarankurichy, Trichy Dt - Tamil MediumComputer
- Star Office - Writer - Model Question - M.GEETHA, V.M.G.R.R.Sri Sarada Sakthi MHSS, Virudhunagar - English Medium
இளம் தலைமையாசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி
இளம் தலைமையாசிரியர்களுக்கு, மூன்று நாட்கள்,
தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த,
இந்தியா - இங்கிலாந்து கூட்டு திட்டத்தின் படி, தலைமைப் பண்பு பயிற்சி,
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு, குஜராத் மற்றும் தமிழகம்
ஆகிய மாநிலங்கள்,தேர்வு செய்யப்பட்டு, அரசு பள்ளிகளை மேம்படுத்த,
பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி: முழுநேர பிஎச்.டி., பட்டதாரிகள் ஏமாற்றம்
உதவி பேராசிரியர்கள் பணியிட நியமனத்திற்கு,
மதிப்பெண்கள் வழங்குவதில், பகுதி நேர, பிஎச்.டி., படித்து, பணிபுரிந்த
அனுபவத்திற்காக, கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால், முழுநேர
படிப்பாக, பிஎச்.டி., முடித்தவர்கள்,
ஏமாற்றமடைந்துள்ளனர்.சரிபார்ப்பு:தமிழக அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள,
1,093 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி: புதிய திட்டம் விரைவில் அமல்
4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் தகவல் தொழில் நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் தொடங்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு கணினி தொடர்பான கல்வி அறிவு இருந்தால்தான் கல்லூரி
படிப்பிற்கு செல்லும்போது எளிதில் எதையும் கையாள முடியும் என்பதால் மத்திய
அரசு கணினிக் கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து
மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது.
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை:மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கடும் எச்சரிக்கை
''இலவச மற்றும் கட்டாயகல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,) கீழ், மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும், ஆரம்பநிலை சேர்க்கையில்,
25 சதவீத இடங்களை, ஏழை, எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்க
வேண்டும். வரும் கல்வி ஆண்டில், இதை கடைபிடிக்காத பள்ளிகள் மீது, கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், பிச்சை
எச்சரித்து உள்ளார்.
கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி?பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
பள்ளி கல்வித் துறைக்கு, வரும் பட்ஜெட்டில், 20
ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.'ஜெட்' வேகம்ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்ச நிதி, பள்ளி
கல்வித் துறைக்கு ஒதுக்கப் படும். முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 10
ஆயிரம் கோடியை தாண்டிய நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இந்த
துறைக்கான நிதி ஒதுக்கீடு, 'ஜெட்' வேகத்தில், எகிறி வருகிறது.