News 2
முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிஎஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்தஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர்ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் .சென்ற
வாரம் நீதியரசர்கள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு
தனி நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,,
வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை
மதிப்பெண் வழங்கியும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு
ஒத்தி வைத்தது.
இந்நிலையில் நாளை (20.12.13 ) அவ்வழக்கு
விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 முதல் நீதிமன்றத்திற்கு விடுமுறை
என்பதால்.அத்தேதிக்குள் வழக்கு விசாரணைக்கு வராவிட்டால் அதன் இறுதி முடிவு
தெரிய மேலும் தாமதமாகக் கூடும்
News 1
முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை
வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.