Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

FLASH NEWS: PG TRB - 2013 APPEAL CASE

           முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று  11.12.13    புதன்கிழமை     மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தது    நீதியரசர்கள் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி  அளித்தனர். 

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கில் வருகிற செவ்வாய்கிழமை உத்தரவு


            தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA) சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்களின் முன்னிலையில் பத்தாவது வழக்காக விசாரணைக்கு வந்தது. ஆசிரியர்கள் சார்பில் வழக்கறிஞ்சர் அஜ்மல் கான் அவர்கள் வாதிட்டார்.
 

30% ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறி


           மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 30 சதவிகிதம் அரசு ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

படமும், பாடமும்... மாநகராட்சி பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்" அறிமுகம்


            மாநகராட்சி பள்ளிகளில், பாடத்திட்டத்தை உள்ளடக்கிய "ஸ்மார்ட் கிளாஸ்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்கும் திறனும், கல்வி அறிவும் மேம்பட்டு வருகிறது.

எஸ்.எஸ்.எல்.சி.,மாணவர்களுக்கு முப்பருவமுறை அமலாகுமா?


          எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறை அமல்படுத்துவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்காததால் ஆசிரியர், மாணவர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குரூப்-2 வினாத்தாள் வழக்கு: குற்றப் பத்திரிகை தாக்கல்


          டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில், ரிஷிகேஷ் குண்டு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 242 பக்க குற்றப்பத்திரிகையை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

“நெட்” தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.

 
           கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட் தகுதித் தேர்வு
 

காலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங்?


            2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில்அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப, அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து பாடப்பிரிவிலும், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வட்டார மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது


              வட்டார மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், மேலும் 1000 வட்டார வளமைய பயிற்றுநர்களை, ஆசிரியர்களாக பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்


       குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு ஒரு சுதந்திரம்


              எனது பள்ளி நாட்களில் வருகைப்பதிவை தவிர என் பெயர் வேறு எப்போதும் அழைக்கப்படாத நாட்களை கடந்திருக்கிறேன்.முதல் மூன்று ரேங்க் எடுப்பவர்கள் தான் கட்டுரை ,பேச்சு மற்றும் கவிதை போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
 

அரசு ஊழியர் மகள் ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்


            அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்களின், திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, 2011ல் அரசாணை வெளியிடப்பட்டது.
 

15 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு கட்டண சலுகை அளிப்பு


            பொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரலில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வை, 9 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

10th Latest Study Material


 Social Science


Geography - Maps & Important Places in Maps -
 Prepared by Mr. Velmurugan, B.T.Asst,Vellagundam 

12th Latest Study Material

Physics
  1. Physice Practical - Sonometer - Power Point - Tamil Medium
  2. Physics Practical - NPN Transistor - Part - 1 - Tamil Medium
  3. Physics Practical - NPN Transistor - Part - 2 - Tamil Medium
Prepared by - Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram

உரிய காரணம் இல்லாமல் 2 மாதத்துக்கு மேல் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்யமுடியாது: ஐகோர்ட்டு தீர்ப்பு


மனுவில் கூறி இருந்ததாவது:–

            நான், 1984–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பழத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 

அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற டிச., 15 முதல் அடையாள அட்டை கட்டாயம்


            தமிழத்தில், ஏழை, எளிய மக்கள் பயன்பெற, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
 

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை சிறப்பு ஆசிரியர் பணியிடம் நிரப்ப டிஆர்பி அலுவலகத்தில் முற்றுகை


          உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை டிஆர்பி உடனடியாக நிரப்ப கோரி சிறப்பு ஆசிரியர்கள் நேற்று டிஆர்பி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 

தொலைநிலையில் படிப்போரே, இது அதுபோன்றதல்ல...


       நேரடியாக கல்லூரிக்கு சென்று ரெகுலர் முறையில் படிக்க முடியாதவர்களுக்காக, அவர்கள் பணி செய்துகொண்டே படிப்பதற்காக கொண்டுவரப் பட்டதுதான் தொலைநிலைக் கல்வி முறை. இக்கல்வி முறையின் ஒரு நியதியே, இது, லெக்சர் என்ற வகுப்பறை நடவடிக்கை இல்லாதது என்பதுதான்.

சிவில் சர்வீஸ் தேர்வு முறையை மாற்ற கோரி போராட்டம்


           யு.பி.எஸ்.சி., நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு முறையை மாற்றி அமைக்க கோரி தேர்வு எழுதுபவர்கள், டில்லியில் பார்லிமென்ட் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்காணிக்க 5 இணை இயக்குநர்கள் பிளஸ் 2 அரையாண்டு தேர்வு இன்று தொடக்கம்


              பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை கண்காணிக்க 5 இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ& மாணவியருக்கு பொதுத் தேர்வு போல ஒரே மாதிரியான தேர்வுகளை நடத்துவது என்று கடந்த 2 ஆண்டுகளாக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
 

50 கல்வி சேனல்கள் பார்க்க ரூ.1,500 விலையில் டிஷ் ஆன்டெனா


          கல்விக்கான, 50 டிவி சேனல்கள் அடங்கிய, டிஷ் ஆன்டெனா விரைவில் விற்பனைக்கு வருகிறது. இதற்கான ஸ்டூடியோ, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நிறுவப்படுகிறது.

பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய ஆசிரியர் மூலம் பயிற்சி


            பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை வரைய, ஓவிய ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிச.,10, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.,12 பிளஸ்2 மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது.
 

வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களின் பெயர்கள் என்ன தெரியுமா? பைலின், ஹெலன், லெஹர். அடுத்து வரவிருப்பது மடி புயல். இந்தப் பெயர்களுக்கு என்ன அர்த்தம்?பைலின் (நீலக்கல்), ஹெலன் (பிரகாச ஒளி), லெஹர் (அலை). சரி, புயலுக்குப் பெயர் வைப்பது அவசியமா? இதற்கான விடையைப் பின்னால் பார்ப்போம்.சாதாரணமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகுகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பக் கனமான குளிர்ந்த காற்று ஓடோடிசெல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன. புயலின் வகைகள் புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.அதேநேரம் புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon (சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன. பெயர் சூட்டுதல் அடுத்ததாக ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள்உதவும்.பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும்இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்தியப் பெருங்கடலில்... வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்துஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு.


          வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களின் பெயர்கள் என்ன தெரியுமா? பைலின், ஹெலன், லெஹர். 

ஒரு நாள்; 72 "பைல்'கள்; திணறும் தலைமையாசிரியர்கள் : சுமையை தீர்க்குமா கல்வித்துறை


            தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், நாள் ஒன்றுக்கு 72 ஆவணங்களை கட்டாயம் கையாள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பள்ளித் தலைமையாசிரியர்களின் பணிச்சுமை மூச்சு முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகின்றன.
 

தமிழ்வழிப் பள்ளிகளின் வளர்ச்சியும் தளர்ச்சியும்


          தமிழ்வழிக் கல்வியை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டும் பள்ளிகள் நம் தமிழ் வழிப்பள்ளிகளும் தாய்த் தமிழ் பள்ளிகளும். அப்பள்ளிகளின் வளர்ச்சியைப் பற்றியும் அவற்றின் தளர்வு நிலைகளைப் பற்றியும் காண்போம்.

MPhil Course Approved by UGC


         நமது ஆசிரியர்கள் பெரும்பாலோர் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில்  எம்.பில் பயின்றுள்ளனர். அதற்கு ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில் தற்போது வரை பல்வேறு காரணங்களால் மறுக்கப்படுகிறது. அப்படியே ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தாலும் தணிக்கையின் போது மறுக்கப்பட்டு பிடித்தம் செய்ய ஆணையிடப்படுகிறது. அதில் மறுக்கப்படுதற்கு மிக முக்கிய காரணமாக யு.ஜி.சி (U.G.C APPROVAL) அனுமதி  இல்லை என்பதாகும். ஏனவே அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பயன் பெறுவதற்காகவே U.G.C APPROVAL நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில்  2005 முதல் 2012 வரை பெறப்பட்ட பட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை இணையதளத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
- திரு. மனோகர், திருவண்ணாமலை.

Vinayaga Mission University's MPhil Course Approved by UGC - Letter Now Available our site. 

NTSE - November - 2013 DGE Official Key Answers Now Published.


NTSE - November - 2013 DGE Official Key Answers Now Published. -

முதுகலை ஆசிரியர் வரலாறு தேர்வு வழக்கு தீர்ப்பு விவரம்


         முதுகலை ஆசிரியர் வரலாறு தேர்வு விடைக்குறிப்பு தவறு என தொடுக்கப்பட்ட இரு வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பு விவரம்.


முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு எனும் வழக்கு தள்ளுபடி


          முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது

Teaching posts in Kendriya Vidyalaya Sangathan.


Employment News - Notice to the candidates for written exam to teaching and misc. teaching posts in KVS.

Kendriya Vidyalaya Sangathan
18, Institutional Area Saheed Jeet
Singh Marg
New Delhi-110016.

NOTICE

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive