முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13
புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள்
சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தது
நீதியரசர்கள் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர்.
Revision Exam 2025
Latest Updates
காலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங்?
2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில்அரசு
மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப,
அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள்
கூறுகின்றனர். தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து பாடப்பிரிவிலும், 5
ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
15 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு கட்டண சலுகை அளிப்பு
பொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90
சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும்,
தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மார்ச்,
ஏப்ரலில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்கிறது. பத்தாம்
வகுப்பு தேர்வை, 9 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும்
எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
10th Latest Study Material
Social Science
Geography - Maps & Important Places in Maps -
Prepared by Mr. Velmurugan, B.T.Asst,Vellagundam
12th Latest Study Material
Physics
- Physice Practical - Sonometer - Power Point - Tamil Medium
- Physics Practical - NPN Transistor - Part - 1 - Tamil Medium
- Physics Practical - NPN Transistor - Part - 2 - Tamil Medium
Prepared by - Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram
உரிய காரணம் இல்லாமல் 2 மாதத்துக்கு மேல் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்யமுடியாது: ஐகோர்ட்டு தீர்ப்பு
மனுவில் கூறி இருந்ததாவது:–
நான், 1984–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பழத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை சிறப்பு ஆசிரியர் பணியிடம் நிரப்ப டிஆர்பி அலுவலகத்தில் முற்றுகை
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட
சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை டிஆர்பி உடனடியாக நிரப்ப கோரி சிறப்பு
ஆசிரியர்கள் நேற்று டிஆர்பி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்காணிக்க 5 இணை இயக்குநர்கள் பிளஸ் 2 அரையாண்டு தேர்வு இன்று தொடக்கம்
பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத்
தேர்வுகள் இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை கண்காணிக்க 5
இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ& மாணவியருக்கு
பொதுத் தேர்வு போல ஒரே மாதிரியான தேர்வுகளை நடத்துவது என்று கடந்த 2
ஆண்டுகளாக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களின் பெயர்கள் என்ன தெரியுமா? பைலின், ஹெலன், லெஹர். அடுத்து வரவிருப்பது மடி புயல். இந்தப் பெயர்களுக்கு என்ன அர்த்தம்?பைலின் (நீலக்கல்), ஹெலன் (பிரகாச ஒளி), லெஹர் (அலை). சரி, புயலுக்குப் பெயர் வைப்பது அவசியமா? இதற்கான விடையைப் பின்னால் பார்ப்போம்.சாதாரணமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகுகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பக் கனமான குளிர்ந்த காற்று ஓடோடிசெல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன. புயலின் வகைகள் புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.அதேநேரம் புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon (சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன. பெயர் சூட்டுதல் அடுத்ததாக ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள்உதவும்.பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும்இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்தியப் பெருங்கடலில்... வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்துஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு.
வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களின் பெயர்கள் என்ன தெரியுமா? பைலின், ஹெலன், லெஹர்.
MPhil Course Approved by UGC
நமது ஆசிரியர்கள் பெரும்பாலோர் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பயின்றுள்ளனர். அதற்கு ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில் தற்போது வரை பல்வேறு காரணங்களால் மறுக்கப்படுகிறது. அப்படியே ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தாலும் தணிக்கையின் போது மறுக்கப்பட்டு பிடித்தம் செய்ய ஆணையிடப்படுகிறது. அதில் மறுக்கப்படுதற்கு மிக முக்கிய காரணமாக யு.ஜி.சி (U.G.C APPROVAL) அனுமதி இல்லை என்பதாகும். ஏனவே அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பயன் பெறுவதற்காகவே U.G.C APPROVAL நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் 2005 முதல் 2012 வரை பெறப்பட்ட பட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை இணையதளத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- திரு. மனோகர், திருவண்ணாமலை.
Vinayaga Mission University's MPhil Course Approved by UGC - Letter Now Available our site.
NTSE - November - 2013 DGE Official Key Answers Now Published.
NTSE - November - 2013 DGE Official Key Answers Now Published. -
முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு எனும் வழக்கு தள்ளுபடி
முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9
கேள்விகளை நீக்கியது தவறு என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு
தொடுக்கப்பட்டது