அரையாண்டு தேர்வுகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு
டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12-ஆம்
தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அரையாண்டு தேர்வு, மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த
ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
அதன் விவரம்:
பத்தாம் வகுப்பு அட்டவணை
டிசம்பர் 12 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
டிசம்பர் 13 - வெள்ளிக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
டிசம்பர் 16 - திங்கள்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 17 - செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 19 - வியாழக்கிழமை - கணிதம்
டிசம்பர் 20 - வெள்ளிக்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23 - திங்கள்கிழமை - சமூக அறிவியல்
பிளஸ் 2 அட்டவணை
டிசம்பர் 10 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது.
குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இதில், 1055 பேரின் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி
மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 3625 பேரின் பணிமூப்பு பட்டியல் தயார்
நிலையில் இருந்தும் பல மாதங்களாக பதவி உயர்வு அறிவிக்கப்படாத மர்மம்
குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி
மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம்
செய்யப்பட்டார்.
மாநில அளவில், பொதுத் தேர்வாக, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம்
தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில்
இருந்தும் துவங்குகின்றன. மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை போலவே,
இந்த தேர்வுகளும் நடக்கும்.
உதவிப் பேராசிரியர் பணியிட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் 25ம் தேதி முதல் சென்னையில் நடக்க உள்ள நிலையில் தங்கள்
சொந்த மாவட்டங்களிலேயே சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள்
வெளியிடப்பட்டன.
தொடக்கக்
கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டு - ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி நடுநிலைப்
பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு மற்றும் புதிய தொடக்கப்
பள்ளிகள் தொடக்கம் -அனுமதிக்கப் பட்ட தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 23.11.2013 அன்று நடத்த இயக்குநர்
உத்தரவு
தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிர மித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில்
ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, மத்திய அரசும்,
தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாதிரிப் பள்ளிகள்
என்று தனியே தொடங்கிட முயற்சிப்பதாக வந்துள்ள செய்தி- சரியாக இருக்குமானால் - அதை
நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
2002ஆம்
ஆண்டு முதல் ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 3% காலி பணியிடங்களை நிரப்ப -
சிறப்பு தேர்வு நடத்த விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
தற்போது
இருக்கும் பிரச்சனைகளிலேயே பெரும் பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது
தான். இதனால் தற்போது அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில்
மாசற்ற சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இல்லாதது போன்றவைகளே, இந்த
பிரச்சனைகளுக்கு பெரும் காரணம். அதுமட்டுமல்லாமல், கூந்தலுக்கு போதிய
சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் சரியாக சாப்பிடுவதில்லை.
மதுரை அருகே பள்ளி ஆசிரியைகளை மிரட்டுவதற்காக
விஷக்காய் தின்ற மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை
சேர்க்கப்பட்டுள்ளார்.
ஓய்வூதியத்
திட்டம் அமுல்படுத்துப்பட்ட உரிய நாளுக்கு முன்னர் பணியினை துறப்பு செய்த
ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் விவரம் அனுப்ப உத்தரவு
இன்று தாள் 1ல் தேர்ச்சி பெற்றவர்களின் தற்காலிக விவரம் வருடவாரியாக, இன வாரியாக வெளியிட உள்ளோம்.
பள்ளிக்கல்வி - 01.11.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு
Frequently Asked Questions for TET 1 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச் சான்றிதழ் (Provisional Certificate) வைத்திருந்தால் போதுமா? அல்லது நிரந்தர பட்டச் சான்றிதழ் (Convacation Certificate) அவசியம் தேவையா?
தலைமை நிதிபதி நீதி அரசர்
ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் இன்று 21.11.2013 இவ் வழக்கு விசாரணைக்கு
வருகின்றது என்ற தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு
டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த
சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது. அக்., 2012 ஜூலையில்,
டி.ஆர்.பி.,சார்பில், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடந்தது. தாள்
1, 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது.
வகுப்பறையில் கண்டிப்பதால், தற்கொலைக்கு
முயற்சிக்கும் மாணவர்களால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அலறுகின்றனர்.
மதுரையில் நேற்று, சமயநல்லூர் அரசு இருபாலர் பள்ளியின் பிளஸ் 1 மாணவர்,
அரளி விதையை மென்று, தற்கொலைக்கு முயன்றார்.
எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு நடுநிலைப்
பள்ளிகளில் பயிலும், 14 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 70 உடற்கல்வி ஆசிரியர்
மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமா?' என, தமிழக அரசிடம், உடற்கல்வி
ஆசிரியர் சங்கம், கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்
மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின், மாநில பொதுச்செயலர், தேவி
செல்வம், வெளியிட்ட அறிக்கை:
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெறாத
ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை
இடைக்கால தடை விதித்துள்ளது.பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5
ஆண்டுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்,
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை,
மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதிரடி முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. ''இந்த விவகாரம் குறித்து, முதல்வர், உரிய முடிவை
எடுப்பார்,'' என, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.
ஓய்வூதியதாரர்கள் அனைவரும் உயிர்வாழ் சான்றிதழை
(லைப் சர்டிபிகேட்) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்பு
நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
உங்கள் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய
(Pass Word For Your Face)
கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம்
ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்
நுழையலாம்.
இந்திய ராணுவத்தில்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் சேருவதற்குத் தயார்படுத்துவதை
முக்கிய நோக்கமாகக்கொண்டு 1961ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு சைனிக்
பள்ளிகளை நடத்தி வருகிறது.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1ம்
தேதியில் இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பொது
தேர்வுகள், மார்ச் 3ம் தேதியில் இருந்து நடைபெறலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.எஸ்.இ., வாரிய பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 தேர்வுகளை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு
அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் 1ம் தேதி CBSE பொதுத் தேர்வுகள்
தொடங்கவுள்ளன. அதில் 10ம் வகுப்பு தேர்வை மட்டும் சுமார் 1.8 லட்சம்
மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்தாண்டை விட 10% அதிகம்.
30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை
கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின்
சார்பில், நிலை உயர்த்தப்பட்ட, புதிய பள்ளிகளுக்கான கட்டட நிதியை இரு
ஆண்டுகளாக, மத்திய அரசு வழங்கவில்லை; இதனால், பெரும்பாலான புதிய
பள்ளிகளில், கட்டட வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொபைல் போன் மூலம் ஆங்கிலம் கற்பதற்கு புதிய
மென்பொருளை, பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, "அப்ளைடு
மொபைல் லேப், ஏ.ஏ.எஜுடெக்" ஆகிய நிறுவனங்களுடன், பிரிட்டிஷ் கவுன்சில்
ஒப்பந்தம் செய்துள்ளது.