Half Yearly Exam 2024
Latest Updates
12th Standard Latest Study Material
Physics
- +2 Physics 3 Mark Notes - Mr.P.Ilayaraja,PG.Asst,Panchantikualam,Nagapatinam-Tamil Medium
- +2 Physics 5 Mark Notes - Mr.P.Ilayaraja,PG.Asst,Panchantikualam,Nagapatinam-Tamil Medium
- +2 Physics 10 Mark Notes - Mr.P.Ilayaraja,PG.Asst,Panchantikualam,Nagapatinam-Tamil Medium
01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயருகிறது!
செப்டம்பர் - 2013 விலைவாசி குறியீட்டு எண் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி 95.59% ஆக உள்ளது. ஆகவே 01.01.2014 முதல்
அகவிலைப்படி உயர்வு 10 சதவீதத்துக்கும் மேலே உயர வாய்ப்பு
உள்ளது. அதாவது 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயரும் வாய்ப்பு அதிகம். மேலும் விவரங்களுக்கு
தீக்காயங்களுக்கான முதலுதவி முறைகள்..!
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் எரிச்சல் அடங்கும் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற
வேண்டும். ஐஸ் வாட்டரை பயன்படுத்தக் கூடாது.
தபால் துறை சார்பில், உடனடி "ஸ்டாம்ப்" வடிவமைக்கும் போட்டி, பள்ளி மாணவர்களுக்கு இடையில் நடத்தப்படுகிறது.
தபால் துறை சார்பில், அவ்வப்போது புதிய கருத்துகளுடன் ஸ்டாம்ப்கள் வடிவமைக்கப்படுவது
உண்டு. சில நேரங்களில், மாணவர்களிடையே இதற்கான போட்டிகள்
நடத்தப்பட்டு, அதில் சிறந்த வடிவமைப்பு தேர்வு செய்யப்படும்.
மறுகூட்டல் / விடைத்தாள் நகல் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்
இடைநிலை / மேல்நிலை துணைத்தேர்வு எழுதியவர்கள் எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் மறுகூட்டல் (Retotalling), பிளஸ்2 மதிப்பெண் மறுகூட்டல் / விடைத்தாள் நகல் ஆன்லைனில் 04.11.13 முதல் 08.11.13 வரை இணையதளம் வாயிலாக விண்ணபிக்கலாம்
பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மத்திய
அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று
விடுமுறையா என்பதில் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை
சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகளுக்கு
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களும் 2ம் தேதி
விடுமுறை அறிவித்துள்ளன.
927 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
"ஆறு ஆண்டுகளாக, பள்ளிகளில் நிரந்தர, கலை ஆசிரியர்கள் பணி நியமனம்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், 927 பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றை
நிரப்ப வேண்டும்" என தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கம்
வலியுறுத்தியுள்ளது.
அலகுத்தேர்வு நேரத்தை மாற்ற மாணவர்கள் கோரிக்கை
"பொதுத்தேர்வு மாணவருக்கு, மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் நேரத்தில்,
அலகுத்தேர்வு நடத்துவதை மாற்றியமைத்து, முதல் வகுப்பு தொடங்கும் காலை
நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும்" என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பாழாகும் கம்ப்யூட்டர்கள்.... பீரோக்களில் பூட்டிவைப்பு
அரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில்
வழங்கிய கம்ப்யூட்டர்கள் லேப்-டாப்கள், ஆசிரியர்களின் ஆர்வமின்மையால்
பயன்பாடின்றி முடங்கி உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு பிறகு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?
"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு
மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு,
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அடுத்தகட்ட விசாரணைக்கு பிறகு
முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில்
வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு இன்று
காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன்
ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
குரூப் 2 தேர்வு தேதியில் மாற்றமில்லை
சென்னை: டி.என்.பி.எஸ்.சி.., யின் குரூப் 2 தேர்வு டிசம்பர்
ஒன்றாம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியை மாற்ற வேண்டும் என
கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, டிசம்பர்
ஒன்றாம் தேதி குரூப் 2 தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணி தேர்வாணயம்
அறிவித்துள்ளது.