அரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில்
வழங்கிய கம்ப்யூட்டர்கள் லேப்-டாப்கள், ஆசிரியர்களின் ஆர்வமின்மையால்
பயன்பாடின்றி முடங்கி உள்ளது.
Revision Exam 2025
Latest Updates
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு பிறகு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?
"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு
மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு,
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அடுத்தகட்ட விசாரணைக்கு பிறகு
முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில்
வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு இன்று
காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன்
ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
குரூப் 2 தேர்வு தேதியில் மாற்றமில்லை
சென்னை: டி.என்.பி.எஸ்.சி.., யின் குரூப் 2 தேர்வு டிசம்பர்
ஒன்றாம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியை மாற்ற வேண்டும் என
கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, டிசம்பர்
ஒன்றாம் தேதி குரூப் 2 தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணி தேர்வாணயம்
அறிவித்துள்ளது.
தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு
இந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (30.10.2013) வரிசை எண் 43 ல் விசாரணைக்கு வருகிறது
இன்று (30.10.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசராணைக்கு வருகிறது.மேலும் வரிசை எண் 43-ல் விசாரணைக்கு வருகிறது. இன்றாவது வழக்கு முடியும் என்ற நம்பிக்கையோடு ஆசிரியர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
RMSA-தலைமையாசிரியர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது எப்படி என பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி
திட்டத்தின் மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தருமபுரியில் 29.10.2013 அன்று நடைபெற்றது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில்
காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சிறப்புக்
கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின் வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
Pay Certificate Form
Thanks to Mr. Damodiran, GHRSS, Melatur, Thanjavore Dt.
வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம்
தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14ஆ இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம். சொடுக்கவும்
டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும்,
இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது.
ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு
செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்
நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி பழைய ஆயக்குடி
உச்சமன்புதூரை சேர்ந்த வினோத் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஏ (இங்கிலிஷ் வித் கம்ப்யூட்டர்
அப்ளிக்கேஷன்) படித்துள்ளேன்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே
அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா? இது போன்ற கேள்விகள் பெருமளவில்
பரவலாகக் கேட்கப்படுகிறது..
தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
ஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
ஆங்கில வழிக் கல்வி கொண்டு
வரப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.