Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

           வீரச்செயல் புரிந்த மாணவர் / ஆசிரியர்கள் இருப்பின் மத்திய அரசின் ”அசோகச் சக்கரா” விருதுக்கு பரிந்துரைக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

தவிக்கும் ஆசிரியர்கள்


பாடம் நடத்த முடியாமல் திணறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
ஜெ. கு. லிஸ்பன் குமார்
 
 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான நலத்திட்ட பணிகளை கவனிப்பதிலேயே நேரத்தை செலவிடுவதால், பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகம், சீருடை, பஸ் பாஸ், சைக்கிள், லேப்-டாப், காலணி, நோட்டு, புத்தகப்பை, ஜியாமென்டரி பாக்ஸ், அட்லஸ், கலர் பென்சில், கிரையான் என 14 விதமான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களுக்கான நலத்தி ட்டங்களை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களுக்கு தனித்தனி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. லேப்-டாப் என்று எடுத்து க்கொண்டால் அந்த பொறுப்பு வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு எத்தனை லேப்-டாப் வந்துள்ளது? எத்தனை பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது? யார் யாருக்கு கிடைக்கவில்லை? என அனைத்து கணக்கு வழக்குகளையும் பார்க்க வேண்டும். இதேநிலைதான் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும்.

பாதிக்கப்படும் படிப்பு

மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நலத்திட்டங்களுக்கான கணக்குகளைப் பார்த்து பராமரிக்கவே பெரும்பாலான நேரம் சென்றுவிடுகிறது. கணக்கில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் அதிலேயே அவர்கள் மண்டையைப் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டியதுதான்.

நலத்திட்ட பணிகளை கண்காணிப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு ஆசிரியர்கள் கடும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களால் சரியாக பாடம் நடத்த முடிவதில்லை.

இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்ச்சி குறைந்தால் அதற்கும் ஆசிரியர்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

காலணிக்கு அளவு எடுக்கும் அவலம்

ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலணி வழங்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பாத அளவை எடுக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்காகவா ஆசிரியர் பயிற்சியும், பி.எட். படிப்பும் படித்துவிட்டு வந்தோம் என்று நொந்துகொள்கிறார்கள் ஆசிரி யர்கள் .

அனைத்து நலத்திட்ட பணிகள் தொடர்பான கணக்குகளை ஒருங்கிணைத்து கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டிய தலைமை ஆசிரியர்களின் நிலை இன்னும் பரிதாபம். அவர்களால் பள்ளி நிர்வாக பணிகளை சரிவர கவனிக்க முடிவதில்லை.

“கல்வி அதிகாரிகள் அனுப்பும் இ-மெயில்களுக்கு பதில் அனுப்பி அனுப்பியே நேரம் எல்லாம் போய்விடுகிறது. பள்ளி நிர்வாகத்தை எப்படி கண்காணிக்க முடியும்” என்று சென்னையில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் வேதனையுடன் கூறினார்.

“மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க, அரசு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

நலத்திட்டப் பணிகளை கவனிக்க ஒவ்வொரு பள்ளியிலும் தனியாக ஒரு அதிகாரியை நியமித்துவிட்டால், ஆசிரியர்கள் நிம்மதியாக பாடம் நடத்துவார்கள்” என்று இந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகன்.
         அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான நலத்திட்ட பணிகளை கவனிப்பதிலேயே நேரத்தை செலவிடுவதால், பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள்.



தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!

           ஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு முதல் அடியில்தான் தொடங்குகிறது. மிக உயர்ந்த கல்வி பெற்றவர்களுக்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது தொடக்கக் கல்வியே!

தீபாவளி போனஸ் : பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை


          அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவதுபோல, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

12th Latest Study Material - Biology

  1. How to get Full Marks in Biology - Prepared by Mr. Bernatsha- தமிழ் வழி 
Thanks to Mr. Bernatsha,
PG Asst, 
Global Metric Higher Secondary School,
Kangeyam, Tirupur Dt.

ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப் - Dinamalar


           அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

"கேட்" தேர்வில் பெண்கள் ஆர்வம்


          "காமன் அட்மிஷன் டெஸ்ட்" எனப்படும் "கேட்" தேர்விற்கு, விண்ணப்பித்த பெண்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்து உள்ளது.

தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவு


            தொடக்கக்கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் நிர்வாக மாறுதல் குறித்து பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. 
 

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தடையேதும் இல்லை!... ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட தடை - உயர்நீதிமன்றம்


           முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது .முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில்,மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள்டி.ஆர்.பி.இணையதளத்தில் வெளியிடப்பட்டன.     

 

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு திட்டமிட்டபடி நடக்கும்.

ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட உயர்நீதிமன்ற கிளை தடை
 
           நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுத்துள்ளது. ஆனால் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் வெளியிடவுள்ள இறுதிப்பட்டியலுக்கு தடை விதித்துள்ளது. 
 

விடுதிகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை


            விடுதியில் மாணவன் கொலை செய்யப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் விடுதிகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மாணவன் கொலை நடந்த பள்ளியின் விடுதியை மூடுவதற்கு, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டள்ளார்.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்


              சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 
 

12th Latest Study Material


CCE Activities - Album


CCE Activities - Album - Click Here

Thanks to Mr. Sanjeevan Kannaiyan,
PUMS, Othiyathur.

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விடயங்கள்! ! !


1. பசி என்று குழந்தை சொன்னால்,உடனே உணவு கொடுங்கள்,அரட்டையிலோ, சோம்பலிலோ,வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

பயிற்சியில் இருவேறு நிலைப்பாடு: ஆசிரியர்கள் குழப்பம் - Dinamalar


          "ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இருவேறு நிலைபாடு உள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.

அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம்

            சென்னையில் நடைபெற்ற கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் 10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்குநர் பழைய உத்தரவு

            ஆசிரியர்கள் முன் அனுமதி பெற வேண்டிய நிலையில், முன் அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு மேற்கொண்டால் அதற்கு விதிகளின்ப்படி தக்க ஒழுங்கு நடவடிக்கை தான் எடுக்க வேண்டுமே தவிர ஊக்க ஊதிய உயர்வினை இரத்து செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குநர் பழைய உத்தரவு


ஆசிரியர்கள் தாமத வருகை

 
            ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகிறார்களா என்பதைக் கண்டறிய மாவட்டத்தில் 300-க்கும் அதிகமான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பு வகுப்புகளில் பயன்படுத்த உத்தரவு


           பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்கள், "ஆப்சென்ட்" ஆவதை தவிர்க்கும் பொருட்டு, விடுமுறை நாட்களில், அவர்களை சிறப்பு வகுப்புகள் எடுக்க, பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு சத்தான உணவோடு மருத்துவப் பரிசோதனை


             விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதோடு, சத்தான உணவு வகைகளை வழங்க வேண்டும்," என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரசு முதன்மை செயலர் அறிவுறுத்தினார்.

ஆன்-லைன் மருத்துவ நுழைவுத் தேர்வு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


             மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வை, ஆன் - லைன் மூலம் நடத்த அனுமதிக்குமாறு, தேசிய தேர்வு வாரியம், சுப்ரீம் கோர்ட்டிடம் அனுமதி கோரியுள்ளது; இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது.

வனவிலங்கு போட்டோகிராபராக இந்திய சிறுவன் தேர்வு


           "இளம் வனவிலங்கு போட்டோகிராபர்" விருதுக்கு, இந்தியாவைச் சேர்ந்த சிறுவன், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.41 கோடி


          ஆறு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு, 2012-13, 13-14ம் கல்வி ஆண்டுக்கு, ரூ.41 கோடியை சிறப்பு கட்டணமாக (ஸ்பெஷல் பீஸ்) அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சேதமடைந்த கட்டடங்களில் பாடம் நடத்தாதீர்: பள்ளி கல்வித்துறை


           "பருவமழை துவங்கிவிட்டதால், சேதமடைந்த, அரசு பள்ளி கட்டடங்களில், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்" என தலைமையாசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

வன்முறையின் ஊற்றாக உள்ளது தொலைக்காட்சி: குழந்தைகள் மாநாட்டில் தகவல்


           பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது. யுனிசெப் தொடர்பாளர் சுகாட்டாராய், முதன்மை அலுவலர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்


           அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள்-தமிழ்நாட்டில்ஒன்று உள்ளது

 
       இந்தியாவில், 21 போலி பல்கலைக் கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, பல்கலை கழக மானியக்குழு அறி வித்துள்ளது.பல்கலை மானியக்குழு விதிகளின்படி, மத்திய, மாநில அரசால் நிறுவப்பட்டுள்ள பல்கலைகள் மட்டுமே, யுனிவர்சிட்டி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். 


ஒரே நாளில் குரூப்-2, ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு - மாணவர்கள் குழப்பம்


               ஒரே நாளில் குரூப்-2 தேர்வும், ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வும் நடத்தப்படுவதால் எந்தத் தேர்வை எழுதுவது? என்று மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக பிரிவு அதிகாரி உள்பட பல்வேறு பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்பும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. டிசம்பர் 1-ம் தேதி குரூப்-2 முதல்நிலைத்தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு ஏறத்தாழ 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Equivalence of Degree Orders – Issued

Higher Education – Equivalence of Degree – B.A. English (Vocational) awarded by Madurai Kamaraj University as equivalent to B.A. English Literature – Recommendation of Equivalence Committee – Orders – Issued.

பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

          
           01.01.2014ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மே.நி.க) / அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய உரிய படிவத்தில் விவரம் கோரி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்க உத்தரவு

      தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்) நேரடி நியமனம் - 2010-11ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்களுக்கு முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்க உத்தரவு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive