Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சேதமடைந்த கட்டடங்களில் பாடம் நடத்தாதீர்: பள்ளி கல்வித்துறை


           "பருவமழை துவங்கிவிட்டதால், சேதமடைந்த, அரசு பள்ளி கட்டடங்களில், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்" என தலைமையாசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

வன்முறையின் ஊற்றாக உள்ளது தொலைக்காட்சி: குழந்தைகள் மாநாட்டில் தகவல்


           பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது. யுனிசெப் தொடர்பாளர் சுகாட்டாராய், முதன்மை அலுவலர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்


           அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள்-தமிழ்நாட்டில்ஒன்று உள்ளது

 
       இந்தியாவில், 21 போலி பல்கலைக் கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, பல்கலை கழக மானியக்குழு அறி வித்துள்ளது.பல்கலை மானியக்குழு விதிகளின்படி, மத்திய, மாநில அரசால் நிறுவப்பட்டுள்ள பல்கலைகள் மட்டுமே, யுனிவர்சிட்டி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். 


ஒரே நாளில் குரூப்-2, ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு - மாணவர்கள் குழப்பம்


               ஒரே நாளில் குரூப்-2 தேர்வும், ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வும் நடத்தப்படுவதால் எந்தத் தேர்வை எழுதுவது? என்று மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக பிரிவு அதிகாரி உள்பட பல்வேறு பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்பும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. டிசம்பர் 1-ம் தேதி குரூப்-2 முதல்நிலைத்தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு ஏறத்தாழ 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Equivalence of Degree Orders – Issued

Higher Education – Equivalence of Degree – B.A. English (Vocational) awarded by Madurai Kamaraj University as equivalent to B.A. English Literature – Recommendation of Equivalence Committee – Orders – Issued.

பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

          
           01.01.2014ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மே.நி.க) / அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய உரிய படிவத்தில் விவரம் கோரி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்க உத்தரவு

      தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்) நேரடி நியமனம் - 2010-11ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்களுக்கு முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்க உத்தரவு

மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண்: மாணவருக்கு கலெக்டர் பாராட்டு


          பிளஸ் 2 தேர்வில் மறு கூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவரை கலெக்டர் பாராட்டினார்.

சார்க் நாட்டு பல்கலை படிப்புகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்!...


          சார்க் நாடுகளின் பல்கலைகளில், 5 வகையான முதுநிலைப் படிப்புகளுக்கு, ஒரேவிதமான பாடத்திட்டத்தைப் பின்பற்றக்கூடிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

 
          அமெரிக்க ஐக்கிய நாடுகள் - இந்திய கல்வி பவுண்டேஷன்(USIEF) என்ற அமைப்பு, ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து, கற்பித்தல் ப்ரோகிராமில், The 2014 Fulbright Distinguished விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 20.

தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

              தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ஆம் ஆண்டிற்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக மாவட்டந் தோறும் 3 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


            தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) முடிவு செய்துள்ளது.

நெட் தகுதித் தேர்வு
 
              பல்கலைக்கழகம், கல்லூரி களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. முடித்திருந்தால் மட்டும் இந்த தகுதித் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு


                முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

10,000 பட்டதாரி ஆசிரியர், 3,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு

 
           தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10 ஆயிரம் உள்ளன. மீதம் உள்ள 3 ஆயிரம் பணியிடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள். இவற்றை நிரப்ப, பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
 

சிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்


          13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.


குரூப் - 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்


              வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.


2 ஆண்டுகளுக்கொரு முறை இலவச புத்தக யோசனை - ஏற்க மறுப்பு


             ஆண்டுதோறும், இலவச பாடப் புத்தகங்கள் வழங்குவதற்குப் பதில், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கினால் போதாதா என்ற, மாநில திட்டக் குழுவின் யோசனையை ஏற்க, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மறுப்பு தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வு


           பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள். இனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை.
 

எஸ்.எஸ்.ஏ., ஆய்வுக்கூட்டம் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி பங்கேற்பு


       ஒருங்கிணைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திலுள்ள, 10 யூனியன்களிலும், அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகள் குறித்து, மாநிலத்திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி தலைமை ஆய்வு கூட்டம் நடந்தது.
 

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது


            ''தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது'' என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார். 
 

குறைவு என்பதை காட்டும் அட்டவணை

         
          திரு.ராஜீவ் ரஞ்சன் IAS இடைநிலை ஆசிரியருக்கு 9300+4200 வழங்கப்பட்டால் அரசுக்கு ரூ.668 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்பது உண்மையல்ல, 31.08.2013 கணக்குப்படி ரூ.310 கோடிதான் என்றும், இது 2010 கணக்குப்படி ரூ.160 கோடிக்கும் குறைவு என்பதை காட்டும் அட்டவணை



காலவரையற்ற உண்ணாவிரதம்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு

 
           பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக பணியமர்த்தக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். 

நீதிநெறி போதனையும், விளையாட்டும் மறக்கப்பட்டதால் வந்த வினை

 
             பள்ளி மற்றும் கல்லூரிகளில் நீதிநெறி வழிகாட்டு வகுப்புகளை நடத்தாமை, விளையாட்டு உள்ளிட்ட உடல்சார் நடவடிக்கைகளை ஊக்குவிக்காமை மற்றும் தேவையான பெற்றோர் கவனிப்பின்மை ஆகியவையே மாணவர்களை தடம் மாற செய்வதாக, நிபுணர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
 

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? நாம் என்ன செய்ய வேண்டும்..?


             ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள்.    இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்?


முதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்?


           முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும்,   14 இடங்களில் நடக்கின்றன இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி இணையதளத்தில்,வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால், சம்பந்தப்பட்ட தேர்வர், தகுதியற்றவராக கருதி, நீக்கப்படுவார்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. கடந்த ஜூலையில், முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.6லட்சம் பேர் பங்கேற்ற முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது.

மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் ஜாதி சான்று: தமிழக வருவாய் துறை முதன்மை செயலர்


         கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 29 ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது," என, தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.
 

தனித்தேர்வு முடிவு விரைவில் வெளியீடு


         தனித்தேர்வு முடிவை, இம்மாத இறுதிக்குள் வெளியிட, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு தனி தேர்வு, சமீபத்தில் நடந்தது. பிளஸ் 2 தேர்வை, 40 ஆயிரம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 50 ஆயிரம் பேரும் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி, தலா, நான்கு மையங்களில் நடந்து வருகின்றன.

பொதுத்தேர்வு எழுதுவோர் யார்? நவ.,15க்குள் தெரியும்

         பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரிடம் இருந்து, பல்வேறு விவரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை, சமீபத்தில், தேர்வுத் துறை வழங்கியது. இந்த விண்ணப்பங்கள், மாணவ, மாணவியரிடம் வழங்கப்பட்டு, உரிய விவரங்களை, பள்ளி நிர்வாகங்கள் பெற்றுள்ளன. இந்த விவரங்களை, பள்ளிகளில் இருந்தே, பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.

கேட் தேர்வு துவங்கியது


        மேலாண்மை படிப்பின் மீது ஆர்வம் கொண்டு, அதை ஐ.ஐ.எம்., போன்ற உயர்ந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்களுக்கான கேட்(CAT) தேர்வு இன்று துவங்கியது.

ஆதிதிராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்குவிப்புத் திட்டம்


          அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும்ஆதிதிராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஊக்குவிப்புத் திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive