"பருவமழை துவங்கிவிட்டதால், சேதமடைந்த, அரசு பள்ளி கட்டடங்களில்,
மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்" என தலைமையாசிரியர்களுக்கு, பள்ளி
கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
வன்முறையின் ஊற்றாக உள்ளது தொலைக்காட்சி: குழந்தைகள் மாநாட்டில் தகவல்
பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது. யுனிசெப் தொடர்பாளர் சுகாட்டாராய்,
முதன்மை அலுவலர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒரே நாளில் குரூப்-2, ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு - மாணவர்கள் குழப்பம்
ஒரே நாளில் குரூப்-2 தேர்வும், ஐ.ஏ.எஸ். மெயின்
தேர்வும் நடத்தப்படுவதால் எந்தத் தேர்வை எழுதுவது? என்று மாணவர்கள்
குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக பிரிவு
அதிகாரி உள்பட பல்வேறு பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்பும் வகையில்
டி.என்.பி.எஸ்.சி. டிசம்பர் 1-ம் தேதி குரூப்-2 முதல்நிலைத்தேர்வை
நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு ஏறத்தாழ 7 லட்சம் பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
Equivalence of Degree Orders – Issued
Higher Education – Equivalence of Degree – B.A. English (Vocational) awarded by Madurai Kamaraj University as equivalent to B.A. English Literature – Recommendation of Equivalence Committee – Orders – Issued.
பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
01.01.2014ல்
உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி
வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மே.நி.க) / அரசு
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய
உரிய படிவத்தில் விவரம் கோரி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்க உத்தரவு
தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்) நேரடி நியமனம் - 2010-11ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்களுக்கு முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்க உத்தரவு
தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ஆம் ஆண்டிற்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக மாவட்டந் தோறும் 3 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய
முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) முடிவு செய்துள்ளது.
நெட் தகுதித் தேர்வு
பல்கலைக்கழகம்,
கல்லூரி களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது
ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி.
முடித்திருந்தால் மட்டும் இந்த தகுதித் தேர்வில் இருந்து விதிவிலக்கு
அளிக்கப்படுகிறது.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது
''தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016
ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக
நியமிக்க முடியாது'' என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை
தெரிவித்துள்ளார்.
முதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்?
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும்,
22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கின்றன இதில்
பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி இணையதளத்தில்,வெளியிடப்பட்டன.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால்,
சம்பந்தப்பட்ட தேர்வர், தகுதியற்றவராக கருதி, நீக்கப்படுவார்' என,
டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. கடந்த ஜூலையில், முதுகலை ஆசிரியர் தேர்வு
நடந்தது. 1.6லட்சம் பேர் பங்கேற்ற முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது.
பொதுத்தேர்வு எழுதுவோர் யார்? நவ.,15க்குள் தெரியும்
பிளஸ்
2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரிடம்
இருந்து, பல்வேறு விவரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை, சமீபத்தில்,
தேர்வுத் துறை வழங்கியது. இந்த விண்ணப்பங்கள், மாணவ, மாணவியரிடம்
வழங்கப்பட்டு, உரிய விவரங்களை, பள்ளி நிர்வாகங்கள் பெற்றுள்ளன. இந்த
விவரங்களை, பள்ளிகளில் இருந்தே, பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய,
தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள்,
தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.
கேட் தேர்வு துவங்கியது
மேலாண்மை படிப்பின் மீது ஆர்வம் கொண்டு, அதை ஐ.ஐ.எம்., போன்ற உயர்ந்த
கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்களுக்கான
கேட்(CAT) தேர்வு இன்று துவங்கியது.