Half Yearly Exam 2024
Latest Updates
தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ஆம் ஆண்டிற்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக மாவட்டந் தோறும் 3 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய
முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) முடிவு செய்துள்ளது.
நெட் தகுதித் தேர்வு
பல்கலைக்கழகம்,
கல்லூரி களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது
ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி.
முடித்திருந்தால் மட்டும் இந்த தகுதித் தேர்வில் இருந்து விதிவிலக்கு
அளிக்கப்படுகிறது.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது
''தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016
ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக
நியமிக்க முடியாது'' என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை
தெரிவித்துள்ளார்.
முதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்?
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும்,
22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கின்றன இதில்
பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி இணையதளத்தில்,வெளியிடப்பட்டன.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால்,
சம்பந்தப்பட்ட தேர்வர், தகுதியற்றவராக கருதி, நீக்கப்படுவார்' என,
டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. கடந்த ஜூலையில், முதுகலை ஆசிரியர் தேர்வு
நடந்தது. 1.6லட்சம் பேர் பங்கேற்ற முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது.
பொதுத்தேர்வு எழுதுவோர் யார்? நவ.,15க்குள் தெரியும்
பிளஸ்
2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரிடம்
இருந்து, பல்வேறு விவரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை, சமீபத்தில்,
தேர்வுத் துறை வழங்கியது. இந்த விண்ணப்பங்கள், மாணவ, மாணவியரிடம்
வழங்கப்பட்டு, உரிய விவரங்களை, பள்ளி நிர்வாகங்கள் பெற்றுள்ளன. இந்த
விவரங்களை, பள்ளிகளில் இருந்தே, பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய,
தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள்,
தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.
கேட் தேர்வு துவங்கியது
மேலாண்மை படிப்பின் மீது ஆர்வம் கொண்டு, அதை ஐ.ஐ.எம்., போன்ற உயர்ந்த
கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்களுக்கான
கேட்(CAT) தேர்வு இன்று துவங்கியது.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியை சேர்ந்த
ஜெயபாரதி,சகுந்தலா,தமயந்தி,செந்தாமரை உள்ளிட்ட12 பேர் மதுரை ஐகோர்ட் கிளை
யில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,‘‘நாங்கள் ஆசிரியர் பயிற்சி
(டி.டி.எட்) முடித்துள்ளோம். கடந்த 2009ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப
அரசு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒரு மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி பெண்
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒரு மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்டதாரி பெண் தேர்ச்சி பெற்றுள்ளார்.