Half Yearly Exam 2024
Latest Updates
கனவாகும் மாணவர் "சிறப்பு கட்டணம்"
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல் பீஸ்), இரண்டாண்டுகளாக வழங்காமல் கல்வித் துறை இழுத்தடிக்கிறது.
மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை - இப்பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கட்டாய கல்வி ஒதுக்கீட்டில் கட்டணம் வழங்க இழுபறி: அதிகாரிகள் மவுனம்
கட்டாய கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டு முறைப்படி, தனியார் பள்ளிகளில்
சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் கட்ட கட்டணத் தொகை குறித்த விவகாரத்தில்,
கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். இதனால், எதிர்காலத்தில்
இத்திட்டத்தின் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.
54 New Primary Schools Name List for 2013-14
மாண்புமிகு தமிழக முதல்வரின்
அறிவிப்பு - 2013-14 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான
தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு
முதுகலை தமிழ் தேர்வு ரத்து எதிரொலி: டி.ஆர்.பி., நாளை அவசர ஆலோசனை
முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை
கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை
ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து: மறுதேர்வு நடத்த உத்தரவு
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வில்,
அச்சுப்பிழையுள்ள கேள்விகள் இடம்பெற்றதால், அதை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்
கிளை, மறு தேர்வு நடத்த உத்தரவிட்டது.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்
அனைத்து ஆசிரியர்களும், 2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால்,
தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சர்வர் பிரச்னையால் பள்ளி விவர சேகரிப்பு பணியில் தேக்கம்
பள்ளி விவரம் சேகரித்து, ஆன்-லைனில் பதிவேற்றும் பணியில், சர்வர்
பிரச்னையால், பல மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால், பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தனித்தேர்வு எழுதிய பின் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம்....
மதுரையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய பின், சம்பந்தப்பட்ட
மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்து தேர்வுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இது, தனித்தேர்வாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தமிழகத்தில் உள்ள, சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற,
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு
உள்ளது.
October Month CRC - Proceeding
அக்டோபர் மாதம் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கு குறுவள மையங்களில் நடத்தப்பட உள்ள """"சமூக விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு"" சார்ந்த மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு.
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர்.
10ம் வகுப்பு செய்முறை தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
"மார்ச்சில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள
தனித்தேர்வர்கள், அதற்கான செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, இன்று
முதல் அக்.,15 வரை விண்ணப்பிக்கலாம்," என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர்
தேவராஜன் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டாக உயர்த்தப்படாத விளையாட்டு நிதி: மாணவர்கள் வளர்ச்சி தடைபடும் அவலம்
கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்குரிய
விளையாட்டு நிதி அதிகரிக்கப்படாததால், வட்டார விளையாட்டுடன், மாணவர்கள்
நடையை கட்டும் நிலை தொடர்கிறது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு
இவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே
10வது வழக்காக விசாரணை செய்யப்பட்டது. இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல்
ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு
கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப்
பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க
ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுக்குறித்து, இன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வுக்காக ஆசிரியர்கள் தவிப்பு
போதிய தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி
உயர்வு,தேர்வு புறக்கணிப்பு, பணப்பலனின்றி 6,875 ஆசிரியர்கள்
தவிக்கின்றனர்.