Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை தமிழ் தேர்வு ரத்து எதிரொலி: டி.ஆர்.பி., நாளை அவசர ஆலோசனை


           முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து: மறுதேர்வு நடத்த உத்தரவு


          முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகள் இடம்பெற்றதால், அதை ரத்து செய்த மதுரை ஐகோர்ட் கிளை, மறு தேர்வு நடத்த உத்தரவிட்டது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்


          அனைத்து ஆசிரியர்களும், 2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சர்வர் பிரச்னையால் பள்ளி விவர சேகரிப்பு பணியில் தேக்கம்


          பள்ளி விவரம் சேகரித்து, ஆன்-லைனில் பதிவேற்றும் பணியில், சர்வர் பிரச்னையால், பல மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தனித்தேர்வு எழுதிய பின் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம்....


          மதுரையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய பின், சம்பந்தப்பட்ட மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்து தேர்வுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இது, தனித்தேர்வாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


          தமிழகத்தில் உள்ள, சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

October Month CRC - Proceeding

           அக்டோபர் மாதம் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கு குறுவள மையங்களில் நடத்தப்பட உள்ள """"சமூக விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு"" சார்ந்த மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு.

        
                முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர். 

10ம் வகுப்பு செய்முறை தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு


              "மார்ச்சில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், அதற்கான செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, இன்று முதல் அக்.,15 வரை விண்ணப்பிக்கலாம்," என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டாக உயர்த்தப்படாத விளையாட்டு நிதி: மாணவர்கள் வளர்ச்சி தடைபடும் அவலம்

          கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்குரிய விளையாட்டு நிதி அதிகரிக்கப்படாததால், வட்டார விளையாட்டுடன், மாணவர்கள் நடையை கட்டும் நிலை தொடர்கிறது.

பள்ளிகளுக்கான கழிப்பறை பராமரிப்பு நிதி: ஊராட்சியில் பெற அறிவுரை


              "பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்கும் பணியை, ஊராட்சி நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டும்" என தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

3 ஆண்டுகளாக சம்பளமின்றி தவிக்கும் சிறப்பாசிரியர்கள்


                    மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும், மாற்றுத் திறனாளிகளுக்கான இடைநிலை கல்வித்திட்டத்தில், பணியாற்றும் சிறப்பாசிரியர்கள், மூன்று ஆண்டுகளாக சம்பளம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

1,000 பள்ளிகள் அங்கீகாரம் பெற முடியாமல் தவிப்பு


          "பள்ளிக் கல்வித் துறை உத்தரவின்படி, குறைந்தபட்ச நிலப்பரப்பு தேவைக்கான நிபந்தனைகளை, நிரந்தரமாக தளர்த்தி, விண்ணப்பித்து காத்துள்ள, அனைத்து வகை பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்க வேண்டும்"
 

மருத்துவ கல்லூரிகளை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு


           "டாக்டர்களின் சான்றிதழ்களை, நோயாளிகள் சரிபார்க்கும் நேரம் வரலாம்; எனவே, மருத்துவ கல்லூரிகளை ஒழுங்குபடுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் உத்தரவிட்டு உள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு


            இவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே 10வது வழக்காக விசாரணை செய்யப்பட்டது. இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார். 
 

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு


          கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுக்குறித்து, இன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு 30-ம் தேதி ஊதியம் வழங்க நடவடிக்கை


         அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழக்கம் போல, வரும் 30-ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வுக்காக ஆசிரியர்கள் தவிப்பு


         போதிய தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வு,தேர்வு புறக்கணிப்பு, பணப்பலனின்றி 6,875 ஆசிரியர்கள் தவிக்கின்றனர். 
 

தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை


            தமிழகத்தில் 1.6.2006 ஆம் ஆண்டுக்கு முன் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும் என, முதல்வருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பணிப்படி வழங்கவில்லையென்றால் தேர்தல் பணிகள் புறக்கணிப்போம்


           ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்குரிய படி வழங்கப்படாததால் தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளை புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க கலந்தாய்வு


           தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது


          மத்தியப் பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மாநில அரசுகள், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 80% சதவீதத்திலிருந்து 90%சதவீதமாக உயர்த்தியது.
 

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்


           தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-Iஐ, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி - Dinamalar


            கேள்வித்தாள் வெளியான சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறிநிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம் கணிதத்திற்கு இணையானது

GO.190 Higher Education Dept Dt.27.09.2013 – Equivalence of Degree – M.Sc. Statistics awarded by University of Madras as equivalent to M.Sc. Mathematics – Recommendation of Equivalence Committee – Orders – Issued.

          "எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது" என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

கல்வி உதவித்தொகை கிடைக்காமல் அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்


            அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களை ஊக்கப்படுத்தவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு


         மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெறும் வயதை, 62ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை, என்று, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி


                 அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive