Half Yearly Exam 2024
Latest Updates
தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
பள்ளிகளுக்கு
வழங்கப்பட்டுள்ள நூலக புத்தகங்களைக் கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பு திறனை
மேம்படுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி
அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.
நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்டம்
மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில்,
கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை
வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: "ஸ்லோ லேனர்ஸ்" பட்டியலிட உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், கற்றல் திறன்
குறைவாக உள்ள மாணவர்களை பட்டியலிட, சி.இ.ஓ., அய்யண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
பார்வையற்ற மாணவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
சென்னையில், 12 நாட்களாக நடத்திய போராட்டம், நேற்று முடிவுக்கு வந்தது.
மதிய தூக்கம் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்
பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எவ்வித குறைவும் ஏற்படாமல் செப்டம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு
தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் திட்டம் - 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு இரண்டாம் பருவ பாடநூல்கள் பள்ளிகளுக்கு 20.09.2013 விநியோகம் செய்து அறிக்கை அனுப்ப உத்தரவு
காலாண்டு விடுமுறையில் அலுவலக பணி அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
காலாண்டு தேர்வு விடுமுறையில், தொடர்ந்து
ஆன்லைன் அலுவலக பணி, ஆசிரியர்களுக்கு திணிக்கப்படுவதால், கடும் அதிருப்தி
அடைந்துள்ளனர்.தமிழகத்தில் முதல் பருவத்தேர்வு முடிவடைந்து, அக்டோபர், 2ம்
தேதி வரை, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை
நாளில், பவர் ஃபைனான்ஸ் தொடர்பான ஆன்லைன் பணிகளை மேற்கொள்ளும்படி,
உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு, இறுதி தீர்ப்பு வரும் வரை பணி மாறுதல் நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம்
சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர்
அடங்கிய முதன்மை அமர்வின் முன் இன்று பிற்பகல் 3.45மணிக்கு விசாரணைக்கு
வந்தது.
இயக்குநர் உத்தரவு
தொடக்கக் கல்வி - 2013-14 பகுதி II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வழங்க, பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குநர் உத்தரவு
ECS மூலம் பணம் சேரும் வகையில் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு
செப்டம்பர் / அக்டோபர் 2013 - மேல்நிலை / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் தேர்வு மையங்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதியம் மற்றும் சில்லறை செலவினங்கள் அந்தந்த தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களின் வங்கி கணக்கில் ECS மூலம் பணம் சேரும் வகையில் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு
கூட்டணியின் இரண்டாம் நாள் சாலை மறியல் போராட்டம் 4550 ஆசிரியர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டாம் நாள் சாலை மறியல் போராட்டம் 4550 ஆசிரியர்கள் பங்கேற்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப்பு
மத்திய
அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள். இந்த
ஊதியக் குழுவை அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்
அளித்துள்ளதாகவும், 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து இதன் பரிந்துரைகள்
அமலுக்கு வரும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றில்
புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு
இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி
ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு தகுதியான
பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30 ஆயிரம்
பட்டதாரிகளுக்கு கடந்த 2010&ம் ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம்
சான்று சரிபார்ப்பு செய்தது. அதில் 22 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக
நியமிக்கப்பட்டனர்.